Advertisment

மேக்கப்-க்கு ”நோ” சொல்லுங்க... பளபளப்பான சருமத்திற்கு இந்த 5 விஷயங்கள் தான் முக்கியம்!

Secret Super foods for glowing skin in tamil: நமது சருமத்தை பாதுகாக்க 5 முக்கியமான ரகசியங்களை பகிர்ந்துள்ளார் பிரபல டயட்டீஷியன் பூஜா மகிஜா.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Skin care tips in tamil: Secret Super foods for glowing skin in tamil

Skin care tips in tamil: பெண்கள் மற்றும் ஆண்களுக்கு அவர்களின் வெளிப்புறத் தோற்றம் முக்கியமான ஒன்றாக உள்ளது. ஒருவரின் வெளிப்புறத் தோற்றத்தை வைத்தே பல இடங்களில் அவரை எடை போடுகிறார்கள். அந்த வகையில் நம்முடைய வெளிப்புறத் தோற்றத்தில் முக்கிய பங்காற்றுவது நமது சருமம் ஆகும். 

Advertisment

தற்போது நிலவி வரும் கோடை வெப்பத்தால் சருமத்தில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்காக கடைகளில் மற்றும் ஆன்லைனில் கிடைக்கும் பொருட்களை உங்கள் சருமத்தின் மீது பயன்படுத்துவது தவறான முடிவாகும். இதற்கு இயற்கையாகவே பல தீர்வுகள் உள்ளன. அவற்றில் முக்கியமானதாக பழ வகைகளும், உணவுகளும் உள்ளன. 

மேலும் நமது சருமத்தை பாதுகாக்க 5 முக்கியமான ரகசியங்களை பகிர்ந்துள்ளார் பிரபல டயட்டீஷியன் பூஜா மகிஜா. அவர் பரிந்துரை செய்துள்ள ரகசியங்களை ஒன்றன் பின் ஒன்றாக இப்போது பார்க்கலாமா...!

போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும்

ஒருவர் தினசரி 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.  இதனால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும். உங்கள் சருமம் பொலிவோடு காணப்படும்.

ஆக்ஸிஜனேற்ற உணவுகள் 

ப்ரோக்கோலி, கீரை, கேரட் மற்றும் உருளைக்கிழங்கு அனைத்தும் ஆக்ஸிஜனேற்றம் அதிகளவு காணப்படும் உணவாக உள்ளன. மேலும் கூனைப்பூக்கள், முட்டைக்கோஸ், அஸ்பாரகஸ், வெண்ணெய், பீட்ரூட், முள்ளங்கி, கீரை, இனிப்பு உருளைக்கிழங்கு, ஸ்குவாஷ், பூசணி, காலார்ட் கீரைகள் மற்றும் காலே போன்றவை இதில் அடங்கும். அதோடு தினசரி 3 வகை காய்கறி ஜூஸ் சாப்பிடுவது ஆக்ஸிஜனேற்றதிற்கு உதவும் என பூஜா மகிஜா குறிப்பிடுகிறார். 

பழங்கள் மற்றும் காய்கறிகள்

சருமத்திற்கு பளபளப்பை தரும் பழங்கள் மற்றும் காய்கறிகளை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும் என பரிந்துரை செய்துள்ள பூஜா மகிஜா எலுமிச்சை, வெள்ளரி, வாழைப்பழம், மாதுளை, ஆரஞ்சு, கேரட் போன்றவற்றை சேர்த்துக்கொண்டால் சருமத்திற்கு நல்லது என்றுள்ளார்.

லாக்டோஸைக் குறைக்கவும்

லாக்டோஸ் நிரம்பி காணப்படும் பேக்கரி பொருட்கள், பிரட்டுகள், பால் சாக்லேட் மற்றும் சில மிட்டாய்கள், சூப்கள், பிரைடு ரைஸ் மற்றும் நூடுல் கலவைகள் போன்றவற்றை தவிர்ப்பது உங்கள் சருமத்திற்கு மிகவும் நல்லது என்கிறார் பூஜா மகிஜா. 

உடற்பயிற்சி

முறையான உடற்பயிற்சி நல்ல வெளிப்புறத் தோற்றத்தை தருவதோடு, முகப் பொழிவிற்கும் உதவுகிறது.  எனவே வாரத்தில் 4 முதல் 5 நாட்களுக்கு தவறாமல் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என பூஜா மகிஜா குறிப்பிட்டு கூறியுள்ளார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Skincare Beauty Tips Tamil Health Tips Health Tips Summer Tips Lifestyle Healthy Food Tamil News 2
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment