அரை ஸ்பூன் சர்க்கரை அவசியம்: சாஃப்ட் சப்பாத்தி சிம்பிள் ஸ்டெப்ஸ்
How to make soft chapati at home in tamil: உடல் எடையை குறைக்கவும், நீரிழிவு நோயை கட்டுப்படுத்தவும் உதவும், இந்த அற்புத சப்பாத்தி உணவை சாஃப்ட்டாக தயார் செய்து பரிமாறுவது ஒன்றும் கடினமான வேலை இல்லை. ரொம்பவே ஈஸிதான்.
soft chapathi recipe in tamil: சப்பாத்தி பலராலும் அதிகமாக விரும்பப்படும் உணவுகளுள் ஒன்றாக உள்ளது. அதிலும் சாஃப்ட் சப்பாத்தி என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கொள்ளை பிரியம். ஆனால், நம்முடைய வீடுகளில் சப்பாத்தியை தயார் செய்யும் போது, அவை சில நேரங்களில் சாஃப்ட் சப்பாத்தியாக வருவதில்லை. இதனால், வீட்டில் சப்பாத்தி சாப்பிட ஆவல் கொள்ளும் முகங்கள் சுளிப்பை தான் கொண்டு வருகின்றன.
Advertisment
உடல் எடையை குறைக்கவும், நீரிழிவு நோயை கட்டுப்படுத்தவும் உதவும், இந்த அற்புத சப்பாத்தி உணவை சாஃப்ட்டாக தயார் செய்து பரிமாறுவது ஒன்றும் கடினமான வேலை இல்லை. அதற்கு சில சிம்பிள் குறிப்புகளை குறித்துவைத்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகளை இங்கு பார்க்கலாம்.
சாஃப்ட் சப்பாத்தி சிம்பிள் ஸ்டெப்ஸ்:
சாஃப்ட் சப்பாத்தி தயார் செய்ய எப்போதும் போல் ஒரு அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவை டுத்துக்கொள்ளவும்.
பிறகு, இந்த மாவுடன் அரை டீஸ்பூன் அளவிற்கு சர்க்கரையை சேர்த்துக் கொள்ளவும். இது சப்பாத்தி சுடும் போது ஆங்காங்கே பிரவுன் நிறத்துடன் பார்ப்பதற்கும், சுவைப்பதற்கும் உதவும். மேலும் சப்பாத்தி நன்றாக வெந்து வரவும் இது உதவுகிறது.
மாவில் தண்ணீர் சேர்த்து மாவு பிசையும் போது கவனமாக பிசைந்து கொள்ளவும். அவற்றை நன்றாக பிசைந்த பின்னர் ஒரு அரை டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி தடவிக் கொள்ளவும்.
இப்போது பிசைந்த மாவை அப்படியே விட்டு ஒரு ஈரத் துணியால் காற்று புகாதவாறு மூடி வைத்துக்கொள்ளவும்.
பிறகு, குறைந்தது இரண்டு மணி நேரம் கழித்து அவற்றை எடுத்து அதன் மீது கொஞ்சமாக கோதுமை மாவை தூவி உருண்டைகள் பிடித்து கொள்ளவும்.
தொடர்ந்து, அதிக அழுத்தம் கொடுக்காமல் லேசாக வைத்து மாவை வட்டமாக தேய்த்து கல்லில் இட்டு சுட்டு எடுக்கவும்.
இப்போது நீங்கள் எதிர்பார்த்த சாஃப்டான சப்பாத்தி தயாராக இருக்கும். இவற்றை உங்களுக்கு பிடித்த சைடிஸ்களுடன் சேர்த்து ருசித்து மகிழவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“