Soft Chappathi Recipe In Tamil: சப்பாத்தி, இன்று பலராலும் விரும்பப்படும் உணவுகளில் ஒன்றாக உள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் இந்த அற்புத உணவில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளடங்கியுள்ளன. மேலும், உடல் நலன் சார்ந்த பல பிரச்னைகளின் போதும் பரிந்துரைக்கப்படும் ஒரு உணவாகவும் இவை உள்ளன.
பொதுவாக நாம் சப்பாத்தி தாயார் செய்யும் போது, அவை சாஃப்டாக வர வேண்டும் என எதிர்பார்ப்பது உண்டு. ஆனால் சில சமயங்களில் அவை நாம் எதிர்பார்த்தது போல சாஃப்டாக வருவதில்லை. அவை அப்படி சாஃப்டாக வர சமையல் செயல்முறை சரியாக இருக்க வேண்டும். இதற்காகவே உங்களுக்கு சில டிப்ஸ்களை இங்கு வழங்கியுள்ளோம்.
சாஃப்ட் சப்பாத்திக்கு சிம்பிள் டிப்ஸ்:

முதலில் தேவையான அளவிற்கு கோதுமை மாவை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
பிறகு சப்பாத்தி மாவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
மாவை கைகளால் நன்றாக பிசைந்து கொள்ளவும். எந்த அளவிற்கு மாவை பிசைந்து கொள்கிறோமோ அந்த அளவுக்கு சப்பாத்தி சாஃப்ட்டாக வரும். எனவே சப்பாத்திக்கான மாவை நன்றாக பிசைந்து கொள்ளவும்.
பின்னர் மாவை உருண்டைகளாக பிடித்து, கோதுமை மாவு தடவி சப்பாத்திகளை உருட்டிக்கொள்ளவும்.
தொடர்ந்து கல்லை அல்லது பேன் சூடு செய்து ஒவ்வொரு சப்பாத்திகளாக போட்டு எடுக்கவும்.
கல்லில் முதலில் சப்பாத்தியை இட்டு, சிறிது நேரம் சூடானதும் அடுத்தப்பக்கம் பிரட்டவும். அந்த பக்கத்தின் மீது எண்ணெய் தடவி மீண்டும் அடுத்தப்பக்கம் திருப்பவும். இப்படி செய்யும் போது சப்பாத்தி பொன்னிறமாக உப்பி வரும். இது சப்பாத்தி சாஃப்ட் ஆக இருக்க அதிகம் உதவும்.
இப்போது நீங்கள் எதிர்பாத்த சாஃப்ட் சப்பாத்தி தயார்.

சப்பாத்தி 2 நாட்கள் வரை சாஃப்டாக இருக்க டிப்ஸ்:
சப்பாத்தியை நாம் தயார் செய்த பின்னர், அவற்றை எப்போதும் போல் ஒரு டப்பாவில் அல்லது ஹாட் பாக்சில் அடைத்து வைத்துக்கொள்வோம். அவற்றை நன்றாக மூடும் முன்னர் சப்பாத்தியின் மீது காட்டன் (பருத்தி) துணி கொண்டு போர்த்து வைத்து மூடியால் மூடி வைக்கவும். இது சப்பாத்தியில் வேர்வை தண்ணீர் விழாமல் இருக்க உதவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“