படிக்கட்டுகளில் ஏறுவதன் மூலம் எவ்வளவு கலோரிகள் குறைக்கலாம்? நடைபயிற்சியுடன் ஒரு ஒப்பீடு!

நடைபயிற்சி மிகவும் பிரபலமான உடற்பயிற்சி என்றாலும், படிக்கட்டுகளில் ஏறுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இது குறித்த தகவல்களை வல்லுநர்கள் பகிர்ந்து கொண்டனர்.

நடைபயிற்சி மிகவும் பிரபலமான உடற்பயிற்சி என்றாலும், படிக்கட்டுகளில் ஏறுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இது குறித்த தகவல்களை வல்லுநர்கள் பகிர்ந்து கொண்டனர்.

author-image
WebDesk
New Update
Stairclimbing

உடல் எடை குறைப்பு பயணத்தில் இருப்பவர்கள் அனைவரும் சரியான உடற்பயிற்சியை தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம். நடைபயிற்சி மிகவும் பிரபலமான உடற்பயிற்சி என்றாலும், படிக்கட்டுகளில் ஏறுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Advertisment

 

ஆங்கிலத்தில் படிக்கவும்: Here’s how many calories you can roughly burn by climbing stairs as compared to walking on flat ground for the same duration

 

Advertisment
Advertisements

படிக்கட்டு ஏறுதல், கலோரிகளை விரைவாக குறைக்கும் உடற்பயிற்சிக்கு உறுதியளிக்கிறது. அதே நேரத்தில் நடைப்பயிற்சியானது பரந்த அளவிலான உடற்பயிற்சி நிலைகளுக்கு ஏற்ற மென்மையாக அணுகக்கூடிய உடற்பயிற்சியை வழங்குகிறது. இது தொடர்பான தகவல்களை மருத்துவர் சுரேந்தர் பால் சிங் தெரிவித்துள்ளார்.

உடல் எடை குறைப்புக்கு சிறந்தது எது?

உடல் எடை குறைப்பு என்று வரும் போது நடைபயிற்சியுடன் ஒப்பிடுகையில் படிக்கட்டு ஏறுதல் பொதுவாக மிகவும் பயனுள்ள மற்றும் தீவிரமான உடற்பயிற்சியாக அமைகிறது. படிக்கட்டு ஏறுதலில் உள்ள அதிக தீவிரம் காரணமாக குறைந்த நேரத்தில் அதிக கலோரிகளை குறைக்க உதவுகிறது.

இந்த உடற்பயிற்சி அதிக தசை குழுக்களில் ஈடுபடுகிறது. குறிப்பாக கீழ் உடலில், அதிக முயற்சி தேவைப்படுகிறது. இதன் வாயிலாக அதிக கலோரிகளை குறைக்க வழிவகுக்கிறது. இருப்பினும், முழங்கால்கள் மற்றும் இடுப்புகளில் இரத்த அழுத்தம் அதிகரிக்கும் போது, அவை அசௌகரியம் அல்லது காயத்திற்கு வழிவகுக்கும். இதனால் மூட்டு பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு இது பொருந்தாது. அதிக உடல் வலிமை உள்ளவர்கள் அல்லது விரைவான உடல் எடை குறைப்பை நோக்கமாகக் கொண்டவர்களுக்கு படிக்கட்டுகளில் ஏறுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இதற்கு நேர்மாறாக, நடைபயிற்சி ஒரு குறைந்த தாக்கத்தை ஏற்படுத்தும் உடற்பயிற்சியாகும். இது மூட்டு வலி, சுவாச பிரச்சனைகள் அல்லது அதிக எடை கொண்டவர்களுக்கு மென்மையான மற்றும் அணுகக்கூடிய விருப்பமாக அமைகிறது. இதில் குறைவான கலோரிகளை மட்டுமே குறைக்க முடிந்தாலும், நீண்ட காலத்திற்கு இதனை செய்ய ஒரு ஆரோக்கியமான வழியாக இருக்கும்.

தட்டையான தரையில் நடப்பதை விட படிக்கட்டு ஏறுதல் சுமார் 15 முதல் 20 மடங்கு அதிக கலோரிகளை குறைக்கும் என்று மருத்துவர் சிங் தெரிவித்துள்ளார். நடைபயிற்சி மூலம் கிடைக்கும் உடல் எடை குறைப்பின் அளவை பெற, சுமார் 20 முதல் 30 நிமிடங்களுக்கு படிக்கட்டுகளில் ஏறலாம் என்று கூறப்படுகிறது. படிக்கட்டுகளில் ஏறும் பயிற்சி உடல் எடை குறைப்புக்கு உதவிகரமாக இருந்தாலும், இதனை பின்பற்றுவதற்கு முன்பாக ஒருவரது உடல் நிலை குறித்து கருத்திற்கொள்ள வேண்டியது அவசியம் ஆகிறது.

Health benefits of walking everyday Can walking help you lose weight?

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: