Summer foods in tamil: நாம் கோடைக்காலத்தில் பயணித்து வருகிறோம். இந்த நாட்களில் கடுமையான வெப்பத்தை நாம் உணர்ந்து வருகிறோம். எனவே, நாம் சத்தான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் உணவுகளை தெரிவு செய்து உட்கொள்ள வேண்டும். குளிர்காலத்துடன் ஒப்பிடும்போது பசியின்மை குறைவாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, குளிர்ச்சியான விளைவைக் கொண்ட, நீரேற்றம் மற்றும் எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவுகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நாள்பட்ட நிலைமைகள் உள்ளவர்களுக்கு இது மிகவும் முக்கியமானது, அவர்கள் சில அளவுருக்களை மனதில் வைத்து சாப்பிட வேண்டும்.
இரத்த சர்க்கரை அளவுகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களைத் தடுக்க, நீரிழிவு நோயாளிகள் சிறிய மற்றும் மிதமான உணவை உட்கொள்ள வேண்டும். நீரிழிவு நோயாளிகளுக்கு பருப்பு முதல் பாகற்காய் மற்றும் சாலடுகள் முதல் நெல்லிக்காய் வரை பலவிதமான ஆரோக்கியமான உணவுகள் உள்ளன.
அந்த வகையில், நீரிழிவு நோயாளிகள் கோடை காலத்தில் சாப்பிடக்கூடிய சில முக்கிய உணவுகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
ஆம்லா அல்லது நெல்லிக்காய் ரைட்டா
தேவையான பொருட்கள்
ஆம்லா-5
தேங்காய் துருவல் - 1/3 கப்
பச்சை மிளகாய் - 1
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
தயிர் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க
எண்ணெய் - 1/2 டீஸ்பூன்.
கடுகு - 1/3 டீஸ்பூன்.
பெருங்காய தூள் 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை
செய்முறை முறை
முதலில் மிக்ஸியில் விதை எடுத்த நெல்லிக்காய், பச்சை மிளகாய் மற்றும் ஒரு சிறிய துண்டு இஞ்சி, தேங்காய்த் துண்டுகளைச் சேர்த்து அரைக்கவும்.
அவற்றுடன் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் வடிவில் அரைக்கவும்.
பிறகு ஒரு கிண்ணத்தில் தயிர் எடுத்து நன்றாக அடித்து மிக்ஸ் செய்து கொள்ளவும்.
பின்னர், அதனுடன் அரைத்த விழுதைச் சேர்த்து, கலக்கவும்.
தொடர்ந்து உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். சிறிது தண்ணீரில் நீர்த்தவும்.
இப்போது ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, பெருங்காய தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
பின்னர் அவற்றுடன் மிக்ஸியில் அரைத்து கலந்து வைத்துள்ள கலவையை தாளிக்கவும்.
இப்போது நீங்கள் எதிர்பார்த்த நெல்லிக்காய் ரைட்டா தயார்.
பாகற்காய் பாரோட்டா:
மாவு பிசைய:
கோதுமை மாவு - 3/4 கப்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு
பாகற்காய் ஸ்டஃபிங்கிற்கு:
புளி - 1 டீஸ்பூன்
நறுக்கிய பாகற்காய் - 1 கப்
பெருஞ்சீரகம் விதைகள் - 1 தேக்கரண்டி
நறுக்கிய வெங்காயம் - 1/2 கப்
மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
உப்பு
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை - 2 டீஸ்பூன்
மற்ற மூலப்பொருள்கள்:
உருட்டுவதற்கு முழு கோதுமை மாவு
சமையல் எண்ணெய்
செய் முறை:
மாவுக்காக
அனைத்து பொருட்களையும் ஒரு ஆழமான கிண்ணத்தில் சேர்த்து, போதுமான தண்ணீரைப் பயன்படுத்தி மென்மையான மாவில் பிசையவும். ஒதுக்கி வைக்கவும்.
பாகற்காய் திணிப்புக்காக
ஒரு கிண்ணத்தில் பாகற்காய், புளி மற்றும் 1 கப் தண்ணீர் சேர்த்து 10 நிமிடங்கள் ஒதுக்கி வைக்கவும்.
பாகற்காய் கலவையை வடிகட்டி கொண்டு வடிகட்டி தனியாக வைக்கவும்.
* ஒரு அகன்ற வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, பெருஞ்சீரகம் விதைகளைச் சேர்க்கவும்.
* விதைகள் வெடிக்கும்போது, வெங்காயத்தைச் சேர்த்து, தொடர்ந்து கிளறி 1 முதல் 2 நிமிடங்கள் மிதமான தீயில் வதக்கவும்.
* பாகற்காய், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு மற்றும் ¼ கப் தண்ணீர் சேர்த்து, நன்கு கலந்து, அவ்வப்போது கிளறி 5 நிமிடங்கள் மிதமான தீயில் சமைக்கவும்.
இறுதியில் கொத்தமல்லி தழைகளை சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது நீங்கள் எதிர்பார்த்த பாகற்காய் பாரோட்டா தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.