/tamil-ie/media/media_files/uploads/2020/04/Krithika-Arunsai.jpg)
Krithika Arunsai
Pandavar Illam Krithika: சின்னத்திரை வில்லிகளும் குறிப்பிடத் தகுந்தவர் கிருத்திகா. 2005-ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான “மெட்டி ஒலி ” சீரியல் மூலம் அறிமுகமானார். ”கண்மணி” , “வம்சம்”, “செல்லமே”, “சின்ன தம்பி” போன்ற பல சின்னத்திரை தொடர்களில் வில்லியாக நடித்து அசத்தியுள்ளார். தற்போது சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் “பாண்டவர் இல்லம்” சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார்.
கொரோனா சந்தேகங்கள் : உங்களின் கேள்விகளுக்கு இன்று பதில் அளிக்கிறார் நடிகை கஸ்தூரி!
சீரியல் நடிகை என்பதைத் தாண்டி, கிருத்திகா நல்ல டான்ஸரும் கூட. கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மானாட மயிலாட” நிகழ்ச்சியில் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். நல்ல உயரத்துடன், கம்பீரமாக இருப்பதால், இவருக்கு வில்லி கதாபாத்திரமாகவே அமைகிறதாம்.
/tamil-ie/media/media_files/uploads/2020/04/krithika-tv-serial-actress-9-52-wikibiopic-img_5da5ae0027e5f.jpg)
சென்னையில் பிறந்து வளர்ந்த கிருத்திகாவுக்கு, சின்ன வயதில் இருந்தே, நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்ததாம். அதன் படி தீவிர முயற்சி செய்தவருக்கு, மெட்டி ஒலி சீரியலில் அருந்ததி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாம். அதில் அவரின் நடிப்பு பலராலும் கவனிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்று வரை கிருத்திகாவின் காட்டில் மழை தான்.
கிருத்திகாவின் கணவர் அருண் சாய். இந்த தம்பதியருக்கு ஒரு மகன் பிறந்துள்ளார். தற்போது இவர்களது மகனுக்கு 5 வயது ஆகிறது. சேலையை விரும்பி அணியும் கிருத்திகா, படபிடிப்பு இல்லாத நாட்களில் வீட்டுத் தோட்டத்தை பராமரிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறாராம்.
ஓ.எல்.எக்ஸில் விற்பனைக்கு வைக்கப்பட்ட படேல் சிலை? காவல்துறையினர் விசாரணை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.