பெண்களுக்கு மிக நல்லது: கருப்பு உளுந்து சுண்டல் ஈஸி ரெசிபி
Karuppu ulundu sundal in tamil: நரம்பு மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு தருவதோடு காயங்கள், புண்கள், சரும பிரச்சனைகள் போன்றவற்றுடன் போராடவும் கருப்பு உளுந்து உதவுகிறது.
Karuppu ulundu sundal in tamil: நரம்பு மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு தருவதோடு காயங்கள், புண்கள், சரும பிரச்சனைகள் போன்றவற்றுடன் போராடவும் கருப்பு உளுந்து உதவுகிறது.
sundal recipe tamil: நாம் அன்றாட சாப்பிடும் உணவுகளுடன் பல வகையான பருப்புகளை சேர்த்து ருசித்து வருகிறோம். அவை நமது உடலுக்கு பல வகைகளில் பலன்களைத் தருகிறது. மேலும், புரதச் சத்து மிகுந்த இந்த பருப்பு வகைகள் நமக்கு பல ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது.
Advertisment
இந்த அற்புதமான பருப்பு வகைகளில் கருப்பு உளுந்திற்கு முக்கிய இடம் உண்டு. இவை நமது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை தந்து உடல் நல்ல திட்டத்துடன் இருக்க உதவுகிறது.
நரம்பு மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு தருவதோடு காயங்கள், புண்கள், சரும பிரச்சனைகள் போன்றவற்றுடன் போராடவும் உதவுகிறது.
Advertisment
Advertisements
நீரிழிவு நோய், எலும்புகள் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு கருப்பு உளுந்து மிகவும் நல்லது.
கருப்பு உளுந்து ரத்த சோகையை நீக்கி செரிமான திறனை அதிகரிக்க செய்கிறது. மேலும் பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ள இந்த கருப்பு உளுந்தில் சத்தான மற்றும் டேஸ்டியான 'கருப்பு உளுந்து சுண்டல்' செய்வது எப்படி என்று இங்கு பார்ப்போம்.
'கருப்பு உளுந்து சுண்டல்' செய்யத் தேவையான பொருட்கள்:
கருப்பு உளுந்து - 1 கப் தேங்காய் துருவல் - 3 ஸ்பூன் இஞ்சி - 1 துண்டு பச்சைமிளகாய் - 3 சீரகம் - 1 தேக்கரண்டி உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
தாளிக்க
கடுகு - 1 தேக்கரண்டி கறிவேப்பிலை - சிறிதளவு
'கருப்பு உளுந்து சுண்டல்' சிம்பிள் செய்முறை :
கருப்பு உளுந்தில் நாம் சுண்டல் தயார் செய்ய முதல் நாள் இரவே அவற்றை வறுத்து ஊறவைத்து கொள்ள வேண்டும்.
அவை நன்கு ஊறிய பின் மறுநாள் குக்கரில் தேவையான அளவு உப்பு சேர்த்து சுண்டல் பதத்திற்கு வரும் வரை வேக வைத்துக்கொள்ள வேண்டும். குக்கர் என்றால் மூன்று விசில் போதுமானது.
இதற்கிடையில், தேங்காய் துருவல், இஞ்சி, பச்சைமிளகாய், சீரகம் ஆகியவற்றை ஒரு மிக்சியில் இட்டு தண்ணீர் விடாமல் பொடி போல அரைத்துக்கொள்ளவும்.
பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை இட்டு தாளித்து கொள்ளவும்.
தொடர்ந்து முன்னர் வேக வைத்துள்ள கருப்பு உளுந்தை அவற்றுடன் சேர்க்கவும்.
கடைசியாக அவற்றுடன் முன்னர் அரைத்துள்ள பொடியையும் சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும்.
இப்போது சுவையான மற்றும் சத்தான கருப்பு உளுந்து சுண்டல் தயாராக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil