பல மணி நேரமாக ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பது உங்கள் உடலை விறைப்பாக மாற்றி விடும். இதனால் சோர்வு ஏற்படுவதுடன் மூட்டு வலி, தசை வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றை சரியாக கவனிக்காமல் சென்றால், நாளடைவில் பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Take a break and try these 5 quick desk stretches to ease stiffness
இவற்றை போக்க எளிய தீர்வு இருக்கிறது. அதன்படி, உங்கள் உடலை சுறுசுறுப்பாக மாற்றவும், வலிகளை குறைக்கவும், உங்களது பணி நேரத்தில் 10 நிமிடங்களை ஒதுக்கினால் போதும்.
இது தொடர்பாக யோகா பயிற்சியாளர் அனாதி ஷர்மா பல்வேறு தகவல்களை அளித்துள்ளார். "அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பது உடலில் விறைப்புத் தன்மையை உண்டாக்கும். இவை இரத்த ஓட்டத்தை குறைக்கும். இதனால் தசை பகுதிகளில் கடும் வலி ஏற்படும். கடுமையான சோர்வுக்கும் இது வழிவகுக்கிறது" எனக் கூறினார்.
அந்த வகையில் நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே செய்வதற்கு சில எளிமையான பயிற்சிகளை பார்க்கலாம். இவற்றை செய்யும் போது தோள்கள், தாடை மற்றும் கண்கள் ஆகியவற்றை ரிலாக்ஸாக வைத்திருக்கள்.
1. Neck stretch: உங்கள் தலையை ஒருபுறமாக சாய்த்து, காதை தோள்பட்டை வரை கொண்டு வரவும். இவ்வாறு 10 விநாடிகள் செய்த பின்னர், மற்றொரு புறமும் இதே முறையை பின்பற்றவும்.
2. Shoulder roll: உங்களது தோள்களை மெதுவாக முன்னோக்கியும், பின்னோக்கியும் வட்டவடிவமாக அசைக்க வேண்டும்.
3. Seated Spinal Twist: நிமிர்ந்து உட்கார்ந்து, உங்களின் இடுப்பு பகுதியை திருப்பி, மறுபுறம் இருக்கும் முழங்காலில் கைகளை வைக்கவும். இவ்வாறு 30 வினாடிகள் செய்து, மற்றொரு புறமும் இதேபோன்று செய்ய வேண்டும்.
4. Wrist and finger stretch: உள்ளங்கையை மேல் நோக்கி இருக்கும் வகையில், உங்கள் கையை நீட்டி, மெதுவாக உங்கள் விரல்களை பின்னுக்கு இழுக்கவும். இது வலி மற்றும் சோர்வை போக்க உதவி செய்யும்.
5. Seated Hamstring stretch: நிமிர்ந்து உட்கார்ந்து, உங்களின் ஒரு காலை மட்டும் நீட்டி 20 வினாடிகள் அப்படியே வைக்கவும். அதன் பின்னர், மற்றொரு காலையும் இவ்வாறு வைக்க வேண்டும்.
இந்த பயிற்சிகளை நீண்ட நேரமாக அமர்ந்து வேலை செய்பவர்கள் மேற்கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.