Tamil Health tips: உடலின் தேவைக்கேற்ப தண்ணீரை பருகுவது நம்மை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் எளிதான வழிகளில் ஒன்றாகும். போதுமான அளவு தண்ணீர் குடிப்பதால் பல நன்மைகள் உள்ளன. மேலும், நல்ல வளர்சிதை மாற்ற விகிதத்தையும் இரத்த அழுத்த அளவையும் பராமரிக்க இது உதவுகிறது. ஆனால் சாதாரண தண்ணீர் மட்டும் குடிப்பது சில நேரங்களில் சலிப்பை ஏற்படுத்தும்.
எனவே, நமது குடல் ஆரோக்கியத்தை பேணவும், தண்ணீருக்கு சுவையைக் கூட்டவும், "செயல்பாட்டு பயிற்சி" பயிற்சியாளர் விஜய் மேனன் சில எளிய வழிகளை இங்கு பரிந்துரைத்துள்ளார். இது உங்கள் உடல் "போதுமான தண்ணீர்" பெற நிச்சயம் உதவும்.
தேவையான பொருட்கள்
எலுமிச்சை
இஞ்சி
புதினா இலைகள்
மிளகு
கடல் உப்பு
செய்முறை முறை
ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்து அதில் அனைத்து பொருட்களையும் சேர்க்கவும். அவை சிறிது நேரம் ஊறிய பிறகு அவற்றை நன்கு கலந்து கொள்ளவும். பின்னர் அதை நாள் முழுவதும் பருகி மகிழவும்.
பலன்கள்
எலுமிச்சை:
எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது மற்றும் வைரஸ் தொற்று மற்றும் தொண்டை புண்ணை எதிர்த்துப் போராடுகிறது.
இது மூளை மற்றும் நரம்பு செயல்பாடுகளுடன் இதய ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். மேலும் வீக்கத்தை குறைத்து குடலை சுத்தப்படுத்துகிறது.
இஞ்சி:
அழற்சி எதிர்ப்பு பண்பு நிரம்பி காணப்படும் பொருட்களில் இஞ்சியும் ஒன்று. இது செரிமானத்திற்கு உதவுகிறது. இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது மற்றும் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
புதினா இலைகள்:
புதினா செரிமானத்திற்கு உதவுகிறது. மன அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், விழிப்புணர்வை மேம்படுத்தவும் பயன்படுகிறது. மற்றும் புத்துணர்ச்சியூட்டும் சுவை கொண்டதாகவும் இது உள்ளது.
மிளகு:
மிளகு உடல் எடையை குறைக்க உதவதோடு, உடலை நச்சுத்தன்மையில் இருந்து பாதுகாக்கிறது. மேலும் இது புற்றுநோயைத் தடுக்கவும், குடல் மற்றும் வயிற்றை சுத்தப்படுத்தவும், இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்யவும் உதவுகிறது. தவிர, இதய துடிப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தத்தை சீராக்கவும் உதவுகிறது.
உப்பு:
உப்பு பெரும்பாலும் சோடியம் குளோரைடால் ஆனது, இது உடலில் திரவ சமநிலை மற்றும் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது. மற்றும் இது குறைந்தபட்சமாக பதப்படுத்தப்பட்டதால், இதில் பொட்டாசியம், இரும்பு மற்றும் கால்சியம் உள்ளிட்ட சில தாதுக்கள் உள்ளன.
தமிழ் இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil