Tamil health tips: சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு, சோளம் முதன்முதலில் மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்காவின் சில பகுதிகளில் பயிரிடப்பட்டது. அந்த பகுதிகளில் இவை பொதுவாக ஒரு காய்கறியாகக் கருதப்படுகிறது. ஆனால் இவை உண்மையில் ஒரு தானியமாகும். இவற்றில் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன.
சோளம் அல்லது மக்காச்சோளம் என்று நாம் அழைக்கும் இந்த அற்புத தானியம் ஊட்டச்சத்துக்கள் செறிந்து காணப்படுகின்றன. இவற்றில் மஞ்சள் நிற சோளம் உலகம் முழுவதும் மிகவும் பொதுவானது என்றாலும், சிவப்பு, ஆரஞ்சு, ஊதா, நீலம், வெள்ளை மற்றும் கருப்பு போன்ற பல நிறங்களிலும் இவை உள்ளன
ஆரோக்கிய பயன்கள் மிகுந்து காணப்படும் இந்த சோளத்தின் முக்கிய நன்மைகளை இங்கு பார்க்கலாம்.
சோளம் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத நன்மைகள்:-
இரத்த சோகை ஆபத்தை குறைக்கிறது
சோளத்தில் வைட்டமின் பி12, ஃபோலிக் அமிலம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இது உடலில் இரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு உதவுகிறது. புதிய இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதன் மூலம், இரத்த சோகை அபாயத்தை குறைக்கவும் இது உதவுகிறது.
ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி, 1 கப் பச்சை சோளத்தில் 125 கலோரிகள், 27 கிராம் கார்போஹைட்ரேட், 4 கிராம் புரதம், 9 கிராம் சர்க்கரை, 2 கிராம் கொழுப்பு மற்றும் 75 மி.கி இரும்புச்சத்து உள்ளது.
ஆற்றலை மேம்படுத்துகிறது
நீங்கள் ஒரு தடகள வீரராக அல்லது ஜிம்மில் வியர்க்க வியர்க்க உடற்பயிற்சி செய்யும் விரும்பியாக இருந்தால், உங்கள் உணவில் சோளத்தை அடிக்கடி சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் இவற்றில் கார்போஹைட்ரேட்கள் மிகுதியாக உள்ளது. இது மெதுவான வேகத்தில் செரிக்கப்படுகிறது. மேலும் நீண்ட நேரத்திற்கான ஆற்றலை வழங்குகிறது.
ஒரு கப் சோளம் சுமார் 29 கிராம் கார்போஹைட்ரேட்டுகளை வழங்குகிறது. இது உடல் ஆற்றலை வழங்குவதோடு மட்டுமல்லாமல் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் சரியான செயல்பாட்டை உறுதி செய்யவும் உதவுகிறது.
எடையை அதிகரிக்க உதவுகிறது
நீங்கள் எடை குறைவாக இருக்கிறீர்களா? உங்களுக்கு ஆரோக்கியமான முறையில் எடை அதிகரிப்பது கடினமாக உள்ளதா? கவலைப்பட வேண்டாம். இந்த பிரச்சனைகளுக்கு சோளம் சிறந்த தீர்வாக உள்ளது.
நீங்கள் உங்கள் உடல் எடையை அதிகரிக்க விரும்பினால், உங்கள் உணவில் இது ஆரோக்கியமான கூடுதலாக இருக்கும். கெட்ட கொழுப்பு உணவுகளை சாப்பிடுவது நீண்ட காலத்திற்கு மற்ற உடல்நலப் பிரச்சினைகளை மட்டுமே உங்களுக்குத் தரும். ஆனால் சோளத்துடன், நீங்கள் ஆரோக்கியமான கலோரிகளைப் பெறுவது மட்டுமல்லாமல், உங்களுக்கு வைட்டமின்கள் மற்றும் நல்ல தரமான நார்ச்சத்தும் கிடைக்கும்.
இரத்த சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது
இனிப்பு சோளம் மற்றும் சோள எண்ணெய் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. கொலஸ்ட்ரால் உறிஞ்சுதலைக் குறைக்கிறது மற்றும் இன்சுலினை ஒழுங்குபடுத்துகிறது. மேலும், இது நீரிழிவு நோயாளிகளுக்கும் கொலஸ்ட்ரால் நோயாளிகளுக்கும் சிறந்த தேர்வாக அமைகிறது.
"சோளம் கார்போஹைட்ரேட் நிறைந்தது. இது ஒரு சிறந்த ஆற்றல் மூலம். சோளத்தில் அதிக ஊட்டச்சத்துக்கள், வைட்டமின் பி1, வைட்டமின் பி5 மற்றும் வைட்டமின் சி ஆகியவை மிக அதிகமாக உள்ளது. இது நோய்களை எதிர்த்துப் போராடவும் புதிய செல்களை உருவாக்கவும் உதவுகிறது. நார்ச்சத்து அதிகம் உள்ள சோளமானது உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கவும் உதவுகிறது." என்று பெங்களூரைச் சேர்ந்த உணவியல் மற்றும் ஆரோக்கிய ஆலோசகர், டாக்டர் ஷீலா கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
கர்ப்ப காலத்தில் பயனுள்ளதாக இருக்கும்
நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரையின் அளவையும் குறைக்கும் இந்த அற்புத தானியம், கர்ப்ப காலத்தில் தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் பல நன்மைகளை கொண்டுள்ளது.
சோளத்தில் ஃபோலிக் அமிலம் நிறைந்துள்ளது, மேலும் ஜீயாக்சாண்டின் மற்றும் நோய்க்கிருமி அமிலம் உள்ளது. இது குழந்தையின் பிறப்பு குறைபாடுகளின் அபாயத்தைக் குறைக்கிறது. மேலும், குழந்தைக்கு தசைச் சிதைவு மற்றும் உடலியல் பிரச்சனைகளில் இருந்தும் பாதுகாக்கும்.
இவற்றில் அதிக நார்ச்சத்து இருப்பதால், இது மலச்சிக்கலைத் தணிக்கிறது. இந்த பிரச்சனை குழந்தையை எதிர்பார்க்கும் தாய்மார்களுக்கு மிகவும் பொதுவான கவலையாகும்.
ஆரோக்கியமான சருமத்திற்கு உதவுகிறது
சோளத்தில் வைட்டமின் சி மற்றும் லைகோபீன் (ஆன்டிஆக்ஸிடன்ட்கள்) உள்ளன. அவை கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கின்றன மற்றும் புற ஊதாக்கதிர்களால் உருவாக்கப்பட்ட ஃப்ரீ ரேடிக்கல்களை சருமத்தை சேதப்படுத்தாமல் தடுக்கின்றன.
சோள எண்ணெய், சோள மாவு போன்ற அதன் தயாரிப்புகளை சாப்பிடுவதைத் தவிர, நேரடியாக நமது தோலில் தடவலாம் மற்றும் பெரும்பாலும் பல அழகுசாதனப் பொருட்களில் ஒரு மூலப்பொருளாகப் பயன்படுத்தலாம்.
மேலும், உங்கள் உணவில் சோளத்தைச் சேர்க்க சுவாரஸ்யமான வழிகளைக் கண்டறிந்து அவற்றிலும் சேர்த்து பயனடையலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.