புராணத்தில் சொல்லப்பட்ட பாரிஜாதம்… இவ்வளவு பலன் இருக்கு!

Top health benefits of parijat or night jasmine Tamil News: நாள்பட்ட காய்ச்சல், வாத நோய், மூட்டுவலி, பிடிவாதமான சியாட்டிகா போன்றவற்றுக்கு பாரிஜாதம் இலைகள் அருமருந்தாக பயன்படுகிறது.

Tamil health tips: health benefits of parijat or night jasmine in tamil

Benefits of parijat In tamil: பவளமல்லி அல்லது ஹார்சிங்கர் என்று அழைக்கப்படும் பாரிஜாதம் ஒரு சிறிய அலங்கார மரமாகும். ஆரஞ்சு கிளைகளுடன் மணம் கொண்ட வெள்ளை மலர்களைக் கொண்டுள்ள இந்த அற்புத மரம், அதன் இனிமையான மற்றும் அமைதியான வாசனை பலரால் விரும்பப்படுகிறது.

இந்த மரம் இரவில் மட்டுமே பூக்கும். காலையில் அதன் அனைத்து பூக்களையும் உதிர்க்கும். இது இந்து புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு புனித மரமாகும் என்று ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் டிக்சா பவ்சர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

“பாரிஜாதம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட தாவரமாகும். மரத்தின் ஆக்ஸிஜனேற்ற, அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் ஆசீர்வாதமாக அமைகின்றன. நாள்பட்ட காய்ச்சல், வாத நோய், மூட்டுவலி, பிடிவாதமான சியாட்டிகா போன்றவற்றுக்கு இதன் இலைகள் கொடுக்கப்படுகின்றன,” என்றும் அந்த பதிவில் அவர் விளக்கியுள்ளார்.

டாக்டர் பாவ்சார் பகிர்ந்துள்ளபடி, பல்வேறு ஆரோக்கிய நலன்களுக்காக இதை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை இங்கு தொகுத்துள்ளோம்.

பவளமல்லி அல்லது பாரிஜாதத்தின் ஆரோக்கிய நன்மைகள்:

சியாட்டிகாவுக்கு எப்படி உதவுகிறது?

பாரிஜாதத்தின் 3-4 இலைகளை எடுத்து அரைக்கவும். பிறகு அவற்றை தண்ணீருடன் கொதிக்கவும். அதன் பின்னர் வடிகட்டிக்கொள்ளவும்.

இப்போது வெறும் வயிற்றில் ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்கவும்.

வீக்கம் மற்றும் வலிக்கு

இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து கஷாயம் செய்து குடிக்கவும்.

மூட்டுவலிக்கு

இலைகள், பட்டை, பூ (சுமார் 5 கிராம்) எடுத்து 200 கிராம் தண்ணீரில் கஷாயம் செய்யவும். தண்ணீர் ஆரம்ப அளவில் ¼ ஆகக் குறையும் போது காபி தண்ணீர் உருவாகும் என்று கூறப்படுகிறது.

வறட்டு இருமலுக்கு

சாறில் இலைகளை அரைத்து சாறு எடுத்து தேனுடன் பருகவும்.

சளி / இருமல் / சைனஸுக்கு

ஒரு கிளாஸ் தண்ணீரில் 2-3 இலைகள் மற்றும் 4-5 பூக்களை கொதிக்க வைத்து, அதில் 2-3 துளசி இலைகளை சேர்த்து டீயாக குடிக்கவும்.

குடல் புழுக்களுக்கு

பாரிஜாதம் இலைகளை அரைத்து 2 டீஸ்பூன் சாறு எடுத்து மிஷ்ரி மற்றும் தண்ணீருடன் எடுத்துக் கொள்ளுங்கள்.

ரிங்வோர்முக்கு

பாதிக்கப்பட்ட பகுதியில் பாரிஜாத இலைகளின் பேஸ்ட்டைப் பயன்படுத்துங்கள்.

காய்ச்சலுக்கு

3 கிராம் பட்டை மற்றும் 2 கிராம் இலைகளுடன் 2-3 துளசி இலைகளை எடுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு நாளைக்கு 2 வேளை குடிக்கவும்.

கவலையில் இருப்பவர்களுக்கு

பாரிஜாதம் எண்ணெய் அரோமாதெரபியில் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை போக்க பயன்படுகிறது. இது உங்கள் மூளையில் செரோடோனின் அளவை அதிகரிக்கிறது மற்றும் மனநிலையை ஒழுங்குபடுத்துகிறது, இதனால் நீங்கள் மகிழ்ச்சியாக உணர்கிறீர்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil health tips health benefits of parijat or night jasmine in tamil

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express