Tamil health tips: திரிகடுகம் (சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றின் சேர்க்கை) என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த மருந்து, பல மருந்துகளுக்குத் துணைமருந்தாக பயன்படுகிறது. இந்த 3 மூலிகை பொருட்களில் முக்கிய இடம் பிடித்துள்ள திப்பிலி பல்வேறு மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. அந்த மருத்துவ பயன்களை ஒன்றன் பின் ஒன்றாக இங்கு பார்க்கலாம்.
திப்பிலியின் மருத்துவ பயன்கள்
திப்பிலியை நன்றாக பொடியாக அரைத்தோ அல்லது திப்பிலிப்பொடியையோ, கடுக்காய்ப் பொடியுடன் சம பங்கில் சேர்த்து, அதில் சிறிதளவு தேன் விட்டு கலந்து தினமும் 1/2 டீஸ்பூன் அளவு காலை, மாலை என இருவேளை உண்டு வந்தால் உடலில் ஏற்படும் இளைப்பு நோய்நீங்கும்.
திப்பிலிப் பொடியை பசுவின் பாலோடு கலந்து நன்றாக காய்ச்சி அருந்தி வந்தால் இருமல், வாய்வுத் தொல்லை, மூர்ச்சை, என முப்பிணியும் நீங்கும். மேலும் இதன் பொடியை 1:2 விகிதம் வெல்லத்துடன் கலந்து உண்டு வந்தால் விந்து பெருகும். இவற்றை நெய்யுடன் கலந்து சாப்பிட்டால் ஆண்மை பெருகும்.
திப்பிலியை நன்றாக வறுத்துப் பொடியாக்கி, அதில் அரை கிராம் எடுத்து தேனுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வந்தால் இருமல், தொண்டைக் கமறல், வீக்கம், பசியின்மை, தாது இழப்பு போன்ற பிரச்சனைகள் நீங்கும். மேலும் இரைப்பை, மற்றும் ஈரல் வலுப்பெறும்.
திரிகடுகத்தை (திப்பிலி, மிளகு, தோல் நீக்கிய சுக்கு) சம அளவில் எடுத்து வறுத்துப் பொடியாக்கி அரை கிராம் தேனுடன் கலந்து 3 வேளையாகச் சாப்பிட்டு வர வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், நீர்க்கோவை, தொண்டைக் கமறல் போன்றவை குணமாகும்.
திப்பிலியை நன்றாக இடித்துப் பொடியாக்கி 1 ஸ்பூன் அளவு எடுத்து சிறிது தேனுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர இருமல், கபம், வாய்வு நீங்கும். மேலும் செரிமானம் அதிகரிக்கும்.
50 கிராம் - திப்பிலி, 25 கிராம் - கரிசலாங்கண்ணி இலை, போன்றவற்றை 1/2 லிட்டர் நீரில் போட்டு, அந்த நீரைச் சுண்டக் காய்ச்சிய பின் நிற்கும் திப்பிலியையும் தழையையும் இள வறுப்பாய் வறுத்துப் பொடித்த எடைக்குச் சமமாகப் பொரிப்பொடி சேர்த்து, அதே அளவு சர்க்கரை கூட்டி 5 கிராம் அளவு 2 வேளை தொடர்ந்து சாப்பிட்டுவர இருமல், களைப்பு நீங்கும்.
திப்பிலி 10 கிராம், தேற்றான் விதை 5 கிராம் சேர்த்துப் பொடியாக்கி கழுநீரில் 5 கிராம் எடை அளவைப் போட்டு 7 நாள் காலையில் குடித்துவர வெள்ளை, பெரும்பாடு நீங்கி போகும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " (https://t.me/ietamil)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.