’4 மொழிகளிலும் சொந்த குரல் தான்’ : சீரியல் நடிகை லதா ராவ்

லதா கர்நாடகாவை பூர்வீகமாக கொண்டிருந்தாலும், பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் தமிழ் நாட்டில் தான்.

By: May 5, 2020, 4:20:35 PM

Tamil Serial News : தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழிகளில் 30-க்கும் மேற்பட்ட சீரியல் தொடர்களில் நடித்தவர் நடிகை லதா ராவ். தமிழ் படங்களிலும் துணை நடிகையாக நடித்துள்ளார்.

ஐ.இ. தமிழ் முகநூல் நேரலை : இன்று மாலை 06:00 மணிக்கு நம்முடன் பேசுகிறார் கே.எஸ். அழகிரி!

இவர் தமிழில் மெட்டி ஒலி, செல்வி, திருமதி செல்வம் போன்ற பல மெகா சீரியல்களில் நடித்து, இல்லதரசிகளிடேயே பெரும் பிரபலமடைந்தார். ஜெயம் ரவி நடித்த, ’தில்லாலங்கடி’ படத்தில் வடிவேலுவிற்கு மனைவியாக நடித்து அசத்தினார். அதோடு சீரியல் நடிகர் ராஜ்கமல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு லாரா, ராகா என்று இரண்டு பெண் குழந்தையும் பிறந்தது.

2016 ஆம் ஆண்டு கன்னட சூப்பர் ஸ்டார் சுதீப் நடித்த “கோட்டிகோப்பா 2” என்ற படத்தில் நடித்த இவர், அதன் பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு தனது குழந்தைகளை கவனித்து வருகிறார்.

Serial Artist Latha rao லதா ராவின் குடும்பம்

லதா கர்நாடகாவை பூர்வீகமாக கொண்டிருந்தாலும், பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் தமிழ் நாட்டில் தான். சர்வ சாதாரணமாக தென்னிந்திய மொழிகளில் பேசி நடிக்கக் கூடிய சின்னத்திரை நடிகைகள் இருப்பார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வி தான். ஆனால் லதா நான்கு மொழிகளிலும், சின்னத்திரையில் கலக்கி உள்ளார். எல்லாமே சொந்த குரல் தானாம்.

தன்னுடைய திரை வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவமாக, ”ஒருநாள் வெளியே சென்றபோது மர்ம நபர் ஒருவர் எதிர்ப்பாராத விதமாக தன்னை அடித்தாக கூறியுள்ளார் லதா. அடித்தது மட்டும் இல்லாமல் உனக்கெல்லாம் நல்ல மரணமே வராது என்றும் கூறியதாக தெரிவித்துள்ளார். ஏனெனில் ஒரு சீரியலில் தான் பயங்கர வில்லியாக நடித்ததாகவும், அதன் தாக்கம் தான் அந்த அடி எனவும் குறிப்பிட்டிருந்தார்.

’இசையில் மட்டுமல்ல பாசத்திலும் அவர் ஞானி தான்’ : ரசிகருக்கு வீடியோ கால் செய்த இளையராஜா!

தற்போது நடிப்புக்கு முழுக்குப் போட்டிருக்கும் லதா, நல்ல கதைகள் அமைந்தால் மீண்டும் நடிக்க தயார் எனவும் கூறுகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Tamil serial news thirumathi selvam fame latha rao rajkamal

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X