Super Singer Pragathi Guru Prasad: விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி. இது சீனியர், ஜூனியர் என்று மாறி மாறி ஒளிபரப்பாகி வருகிறது. இரண்டிலும் கலந்துக் கொண்டு பிரபலமடைந்தவர் பிரகதி. 1997-ம் ஆண்டு சிங்கப்பூரில் பிறந்த இவர் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா நகரில் வளர்ந்தார். அங்கே பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பாடியிருந்தார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2012-ம் ஆண்டு ஒளிபரப்பான ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதோடு இந்த நிகழ்ச்சியில் இரண்டாம் பரிசையும் பெற்றார் பிரகதி.
நெட்டிசன்களை கவரும் அமலா பால்: வைரலாகும் லேட்டஸ்ட் படங்கள்!
சிறுவயது முதலே இசை மீது கொண்ட ஆர்வத்தால் அப்போதிலிருந்தே, சங்கீதத்தை கற்று வந்தார். 2010-ஆம் ஆண்டு ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இசை நிகழ்ச்சியில் பங்குபெற்று முதல் பரிசையும் வென்றார். அதோடு இந்திய கிரிக்கெட் வீரர் அபினவ் முகுந்தின் உறவினரும் கூட. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்தின் மூலம் இவருக்கு சினிமாவில் பாடும் வாய்ப்பும் கிடைத்தது.
அதுமட்டுமில்லாமல் இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளியான ‘தாரை தப்பட்டை‘ படத்தில் ஒரு கதாபத்திரத்திலும் நடித்திருந்தார் பிரகதி. அதனைத் தொடர்ந்து இயக்குனர் பாலா பிரகதியை முன்னணி கதாநாயகியாக வைத்து ஒரு படத்தை இயக்கப் போவதாகவும் சில தகவல்கள் வெளியானது. இருப்பினும் அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. ஆனால் சினிமாவில் தொடர்ந்து பாடி வருகிறார். இசையமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷ், அனிருத் உள்ளிட்டோரின் இசையில் பாடியிருக்கிறார்.
’கனி கண்மணி கண்ணுறங்கு பொன்மணி’: தமிழில் தாலாட்டு பாடிய பாலிவுட் நடிகை!
இதைத் தவிர, இன்ஸ்டாகிராமில் விதவிதமான படங்களை பதிவிடுவது என்றால் பிரகதிக்கு பிடித்தமான ஒன்று. குழந்தையாய் பார்த்தவர், இன்று இளம் பெண்ணாய் உயர்ந்து நிற்கிறார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook
Web Title:Tamil tv news vijay tv super singer pragathi guruprasad
திமுக அணி விறுவிறு கூட்டணி ஒப்பந்தம்: அதிமுக அணியில் நீடிக்கும் இழுபறி
தமிழகத்தில் மதுவிலக்கு இனி கனவுதானா? வாக்குறுதி தரக்கூட முன்வராத கட்சிகள்
அமமுக கூட்டணியில் ஓவைசி கட்சிக்கு 3 தொகுதி ஒதுக்கீடு – டிடிவி தினகரன் அறிவிப்பு
36 வயது… விவாகரத்து… ஆனாலும் மகிழ்ச்சி: திவ்யதர்ஷினி ‘டைமிங்’ வீடியோ
குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ 1000 நிதி : யார் திட்டத்தை யார் காப்பி அடித்தது?