Tasty yummy Rasapodi recipe : ரசம் என்பது தென்னிந்திய மக்களின் உணவு வகைகளில் மிகவும் முக்கியமான ரெசிபி ஆகும். இதை எல்லா தருணங்களிலும் பொதுவாக எல்லா வீடுகளிலும் இதைச் செய்து மகிழ்வர். ரசம் என்பது காரமான சுவையுடன் நாக்கை சொட்டை போடச் செய்யும் புளிப்பு சுவையுடன் இருக்கும். இதை அப்படியே சுடச்சுட உள்ள சாதத்தில் ஊற்றி சாப்பிடும் போது இதன் சுவையே தனி தான்.
ரசம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை
சாப்பிடும் போது சிறிது ரசம் சேர்த்துக் கொள்வதால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கிறது. இதற்கு காரணம் அதில் சேர்க்கப்பட்டுள்ள மசாலாப் பொருட்கள் தான். மேலும் ரசத்திலேயே நிறைய வெரைட்டிகள் உள்ளன.
ரசமானது வயிற்றுப்போக்கு, அசிடிட்டி, வாயுத் தொல்லை, செரிமான பிரச்சனை போன்றவற்றில் இருந்து உடனடி நிவாரணம் வழங்கக்கூடியவை. மேலும் இது மிகவும் விலை குறைவில் வேகமாக செய்து சாப்பிடக்கூடிய சமையலாதலால், தவறாமல் சிறிது உணவில் சேர்த்து வாருங்கள்.
இனி இந்த ரசத்தை எவ்வாறு செய்வதென்று பார்க்கலாம்…
தேவையானவை:
1. மிளகாய் வற்றல் – 200 கிராம்
2. தனியா – 500 கிராம்
3. மிளகு – 200 கிராம்
4. சீரகம் -200 கிராம்
5. துவரம் பருப்பு -250 கிராம்
6. விரளி மஞ்சள் -100கிராம்
7. காய்ந்த கறிவேப்பிலை தேவையான அளவு
8. கடுகு-2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:
எல்லா சாமான்களையும் சுத்தம் செய்து நல்ல வெய்யிலில் காயவைக்கவும். அல்லது மிதமான சூட்டில் வாணலியில் லேசாக வறுக்கவும்.
மெஷினில் கொடுத்து சற்று கரகரப்பாக அறைத்து சூட்டை ஆற்றி காற்று புகாத பாட்டில்களில் அடைத்து உபயோகிக்கவும்.
வீட்டிலேயே குறைந்த அளவில் தயாரிப்பதானால் சற்று நன்றாகவே பருப்பை வறுக்கவேண்டும்.
மஞ்சளையும் உடைத்து லேசாக வறுத்து, மற்ற சாமான்களையும் வறுத்து சீரகத்தை வறுக்காமல் சேர்த்து அரைக்கவும்.
இந்த மாதிரி மிக்ஸியில் பொடித்த பொடி போட்டு செய்தால், ரசம், தெளிவாகவும், வாசனையாகவும் இருக்கும்.
மேலும் படிக்க : சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஒரு ஸ்வீட் நியூஸ் : இந்த உணவுமுறைகளை பின்பற்றுங்க- அசந்துருவீங்க!!!