Thuvaiyal Recipe in Tamil: சாம்பார், சட்னிகளுக்கு பிறகு துவையல்கள் முக்கிய இடம் பிடிக்கின்றன. அதிலும் குறிப்பாக துவரம் பருப்பு துவையலுக்கு என தனி இடம் உண்டு. இந்த அற்புத பருப்பை நம்முடைய உணவுகளில் சேர்த்து கொள்வதன் மூலம் இரத்த அழுத்த பிரச்சனையை சமாளிக்கலாம். மேலும் இவற்றில் உள்ள வைட்டமின் சி மிகவும் சத்தானது. இது உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது.
இவை தவிர, செரிமானம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படாமல் காக்கும் ஓர் அற்புத பருப்பாக துவரம் பருப்பு உள்ளது. இப்படி ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கியுள்ள துவரம் பருப்பில் சுவையான துவையல் எப்படி தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :
துவரம் பருப்பு – 50 கிராம்
கடலை பருப்பு – 50 கிராம்
தேங்காய் துண்டுகள் – 3 பத்தை
காய்ந்த மிளகாய் – 4
பெருங்காயம் – 1 சிறிய துண்டு
எண்ணெய் – அரை தேக்கரண்டி
உப்பு – சுவைக்கு
செய்முறை :
முதலில் ஒரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து கடலை பருப்பு, துவரம் பருப்பு, பெருங்காயம், தேங்காய் துண்டுகளை போட்டு நன்றாக வதக்கவும்.
பின்னர் காய்ந்த மிளகாயை போட்டு வறுத்து கொள்ளவும்.
பிறகு வறுத்த இந்த பொருட்களை நன்றாக ஆறவைத்துக்கொள்ளவும்.
தொடர்ந்து ஒரு மிக்சி எடுத்து அதில் வறுத்த அனைத்து பொருட்களையும் சேர்த்து கொள்ளவும்.
பிறகு அவற்றுடன் கொஞ்சம் தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
இப்போது நீங்கள் எதிர்பார்த்த சுவையான மற்றும் சத்தான பருப்பு துவையல் ரெடியாக இருக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“