scorecardresearch

18- 20 வயதிலும் ஹார்ட் அட்டாக்: என்ன காரணம்?

Guidelines to prevent heart attack in tamil: இளைஞர்களிடையே உள்ள புகைபிடித்தல், மாரடைப்பு மற்றும் ஹார்ட் அட்டாக் ஏற்பட மிக முக்கியக் காரணம் என்கிறார் மருத்துவர் சுபேந்து மொஹந்தி

18- 20 வயதிலும் ஹார்ட் அட்டாக்: என்ன காரணம்?

.Healthy tips in tamil: தொலைக்காட்சி நடிகரும், இந்தி பிக் பாஸ் சீசன் 13-ன் வெற்றியாளருமான சித்தார்த் சுக்லா 40 சில நாட்களுக்கு முன்னர் காலமானார். அவரது இறப்பை மும்பையின் கூப்பர் மருத்துவமனை உறுதி செய்தது. பிடிஐ செய்தி நிறுவனதின் அறிக்கையின்படி, சுக்லாவுக்கு அன்று காலையில் பெரிய மாரடைப்பு ஏற்பட்டது என தெரிவித்து இருந்தது.

இளம் வயதிலே மாரடைப்பு ஏற்படுவது தொடர்பாக ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இதழிடம் பேசிய, கிரேட்டர் நொய்டா சாரதா மருத்துவமனையின் தலைவரும் மூத்த ஆலோசகருமான மருத்துவர் சுபேந்து மொஹந்தி, மாரடைப்பு மற்றும் ஹார்ட் அட்டாக் 10-15 வருடங்களுக்கு முன்பு இருந்ததை தற்போது அதிகரித்து உள்ளதாகவும், இது இளம் வயதினரிடத்தில் பொதுவான ஒன்றாக காணப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

இளம் வயதிலே மாரடைப்பு ஏற்பட காரணம் என்ன?

இதற்கு மிக முக்கியக் காரணம் இளைஞர்களிடையே உள்ள புகைபிடித்தல் அதிகரித்துள்ளது. இரண்டாவதாக, பெரும்பாலான இளம் தொழில் வல்லுநர்கள் அனுபவிக்கும் உயர் மன அழுத்தமாகும். மூன்றாவது காரணி உடல் செயல்பாடு குறைதல் மற்றும் நம்மில் பெரும்பாலோர் வழிநடத்தும் வாழ்க்கை முறை ”என்று மருத்துவர் மொஹந்தி குறிப்பிட்டுள்ளார்.

சில உடற்பயிற்சி ஆர்வலர்கள் ஸ்டெராய்டுகளை (ஊக்க மருந்து) உட்கொள்வதாகவும் அறியப்படுகிறது; அதுவும் மாரடைப்புக்கு வழிவகுக்குமா?

“கோட்பாட்டளவில், இது சாத்தியம் ஆனால் ஸ்டீராய்டு உட்கொள்வதால் ஏற்படும் மாரடைப்பு நிகழ்வுகளை நாங்கள் அதிகம் பார்க்கவில்லை. எவ்வாறாயினும், எப்போதாவது சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்ளும் இளைஞர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டாலும் அது மிகவும் பொதுவானதல்ல, “என்று மருத்துவர் மொஹந்தி விளக்கியுள்ளார்.

மாரடைப்பைத் தடுப்பதற்கான குறிப்புகள்:

ஆபத்து காரணிகள்:-

உங்களுக்கு நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் அல்லது அதிக கொலஸ்ட்ரால் இருந்தால், அவற்றைக் கட்டுப்படுத்துங்கள் மற்றும் தவறாமல் மருத்துவரை அணுகவும்.

நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால், மேற்கண்ட பிரச்சனைகள் இல்லை என்றால், மருத்துவர் மொஹந்தி பரிந்துரைத்தபடி பின்பற்ற வேண்டிய சில விஷயங்கள் இங்கே:-

*வாரத்தில் ஐந்து நாட்கள் குறைந்தது 30-45 நிமிடங்கள் வழக்கமான உடல் செயல்பாடு இருக்க வேண்டும். சைக்கிள் ஓட்டுதல், ஓட்டம், நீச்சல் போன்ற கார்டியோ பயிற்சிகள் இதயத்திற்கு நல்லது என்று மருத்துவர் கூறுகிறார். மறுபுறம், அதிக எடை தூக்குவது உங்கள் இதயத்திற்கு நன்றாக வேலை செய்யாது. “குறைந்த எடையைப் பயன்படுத்தி, ஐந்து கிலோ வரை பரவாயில்லை என்று சொல்லுங்கள். ஆனால் அதிக எடைகள் தசைப் பகுதியை வளர்க்க உதவும் என்றாலும், அவை உங்கள் இதயத்தில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தலாம்.

*வேலையில் இருந்து ஓய்வு எடுத்து உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நேரத்தை செலவிடுங்கள். டிவியைப் பார்ப்பது உண்மையில் ஒரு இடைவெளியாக கருதப்படுவதில்லை, ஏனென்றால் நீங்கள் இன்னும் வேலையைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கலாம்.

*புகை பிடிப்பதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும். அதை மிதமாகச் செய்வது ஒன்றும் உதவாது. ஒரு நாளில் ஒரு சிகரெட் புகைத்தாலும் உங்களுக்கு மாரடைப்பு ஏற்படலாம்.

*உங்கள் மன ஆரோக்கியத்தை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள். ஒரு நபருக்கு எவ்வளவு மன அழுத்தம் இருக்கிறது என்பதற்கு அளவீடு இல்லை, இதன் காரணமாக அது அடிக்கடி புறக்கணிக்கப்படுகிறது.

*உங்கள் உணவில் தினமும் 250-200 கிராம் காய்கறிகள் மற்றும் பழங்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள். உப்பு உட்கொள்ளும் அளவைக் குறைக்கவும். குளிர்பானங்கள் போன்ற வெற்று சர்க்கரைகள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

“நீங்கள் இவற்றைக் கவனித்துக்கொண்டால், உங்களுக்கு எதுவும் நடக்காமல் இருக்க 95-98 சதவிகிதம் நல்ல வாய்ப்பு உள்ளது” என்று மருத்துவர் மொஹந்தி குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Tips to prevent heart attack tamil ways to prevent a heart attack in tamil