tirupati darshan online booking :ஆந்திர மாநிலம் திருப்பதி மலைப்பகுதியில் அமைந்துள்ள உலக பணக்கார கடவுள்களில் ஒருவரான திருப்பதி ஏழுமலையான் ஆலயத்திற்கு நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர்.பிரசத்தி பெற்ற ஏழுமலையான கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தான நிர்வாகம் பல்வேறு வசதிகளை செய்து வருகிறது.
அதிலும், வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தமிழகத்தில் இருந்தும் திருப்பதி செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் அதிகம்.
சென்னையை எடுத்துக் கொண்டால் சென்னையில் இருந்து திருப்பதி செல்ல தினமும் 4 ரயில்கள் மட்டுமே குறிப்பிட்ட நேரத்திஒல் இயக்கப்பட்டு வருகின்றனர். பெரும்பாலான மக்கள் பஸ் பயணத்தையே அதிகம் மேற்கொள்கின்றனர்.
tirupati bus online booking: பக்தர்களுக்கு இனி சிரமம் வேண்டாம்!
பேருந்துகளில் 5-12 வயது உள்ள குழந்தைகளுக்கு அரை டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதற்கு ஆதரமாக ஆதார் கார்டு காண்பிக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் புக் செய்த நேரத்தில் பயணம் மேற்கொள்ளவில்லை என்றால் சார்ஜ் போக மீத தொகை உங்களுக்கு அளிக்கப்படும். இதுதவிர, 60 வயது நிரம்பிய சீனியர் சிட்டிசன்களுக்கு பேருந்துக் கட்டணத்தில் 25 சதவிகிதம் குறைத்து வசூலிக்கப்படுகிறது.
இனிமேல் பேருந்தில் பயணம் மேற்கொள்ளும் போதே அதற்கு டிக்கெட் புக் செய்யும்போது திருமலையில் சாமி தரிசனத்திற்கும் புக் செய்துவிடலாம். இந்த வசதி பக்தர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு நீங்கள் 300 ரூபாய் செலுத்தினால் போதும்.
திருப்பதி செல்பவர்கள் நோட் பண்ணிக்கோங்க! ரூம் எடுத்து தங்குவதில் வந்தது சிக்கல்.
இந்த புதிய வசதி மூலம் பக்தர்கள் எளிமையாக சாமி தரிசனம் மேற்கொள்ளலாம். கூட்ட நெரிசலில் இருந்தும் தப்பிக்கலாம். 2நாட்கள் திருப்பதி ட்ரிப் என பிளான் செய்து செல்பவர்கள் பஸ்டிக்கெட் உடன் சாமி தரிசனத்திற்கும் டிக்கெட் புக் செய்துவிட்டு செல்வது எளிமையான பயணமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.