tirupati temple ticket: திருப்பதி கோவிலில் கடந்த ஜூன் மாத உண்டியல் வசூல் ரூ.100 கோடி தாண்டியது என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதி மலைப்பகுதியில் அமைந்துள்ள உலக பணக்கார கடவுள்களில் ஒருவரான திருப்பதி ஏழுமலையான் ஆலயத்திற்கு நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளையும், காசு பணங்களையும் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். உண்டியலில் குவியும் காணிக்கை மாதம் தோறும் எண்ணப்பட்டு வருகிறது.
அதன்படி கடந்த ஜூன் மாதம் வசூலான உண்டியல் காணிக்கை தற்போது எண்ணப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 91 கோடியே 81 லட்சம் ரூபாய் வசூலான நிலையில் இந்தாண்டு ஜூன் மாதத்தில் மட்டும் உண்டியல் மூலம் 100 கோடியே 37 லட்சம் ரூபாய் வசூலாகியுள்ளது.
அடுத்த மாதம் குடும்பத்துடன் திருப்பதி போறீங்களா? இந்த தகவலை படிச்சிட்டு போங்க!
இந்த ஆண்டு மேலும் 9 கோடி ரூபாய் அதிகரித்து 100 கோடி ரூபாயை தாண்டி சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.மேலும் கடந்த ஆண்டு ஜூனில் 95.58 லட்சம் லட்டுகள் வினியோகிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 1.13 கோடி லட்டுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் போர்டு தெரிவித்துள்ளது.
திருப்பதி செல்பவர்கள் நோட் பண்ணிக்கோங்க! ரூம் எடுத்து தங்குவதில் வந்தது சிக்கல்.
முக்கிய குறிப்பு: திருப்பதியில் சுவாமியை தரிசனம் செய்வதற்கான டிக்கெட் புக்கிங்கை போஸ்ட் ஆபிஸிலும் செய்யலாம் தெரியுமா? ஆம் திருப்பதி செல்லும் பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் செய்வது வழக்கம். இனிமேல் இந்த டிக்கெட் புக்கிங்கை நீங்கள் போஸ்ட் ஆபிஸ் அலுவலகத்திலும் செய்துக் கொள்ளலால். இந்த புதிய வசதி தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஏழு ரகசியங்கள்!