tomato chutney recipe in tamil: இட்லி, தோசை, சப்பாத்தி என எந்த வகை டிபன்களுக்கும் தக்காளி சட்னி தான் சரியான தேர்வாக இருக்கும். ஆனால், இந்த சுவையான சட்னி செய்வதில் பல வகைகள் உள்ளன. அந்த வகையில், மிகவும் வித்தியாசமான செய்முறையில், 4 பொருட்களை மட்டும் கொண்டு, இரண்டே நிமிடத்தில் எப்படி செய்து அசத்தலாம் என்று இங்கு பார்க்கலாம்.

இன்ஸ்டன்ட் தக்காளி சட்னி செய்யத் தேவையான பொருட்கள்:
அரைக்க
தக்காளி – 3 (பெரியது)
வெங்காயம் – 2 (பெரியது)
உலர்ந்த அல்லது சிவப்பு மிளகாய் – 3
உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
இன்ஸ்டன்ட் தக்காளி சட்னி சிம்பிள் செய்முறை:
முதலில் தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
பிறகு ஒரு கடாய் எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், 2 டீஸ்பூன் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
தொடர்ந்து சிவப்பு மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
பின்னர் வெங்காயம் சேர்த்து லேசாக வதக்கி கொள்ளவும்.
இதன்பிறகு தக்காளி சேர்த்து ஓரளவிற்கு நன்றாக வதக்கி கொள்ளவும்.
பின்னர் தணலில் இருந்து கீழே இறக்கி வைத்து நன்றாக ஆறவிட வேண்டும்.
பிறகு ஒரு மிக்சியில் இட்டு நைசாக அரைத்துக்கொள்ளவும்.
இப்போது நீங்கள் எதிர்பார்த்த சுவையான இன்ஸ்டன்ட் தக்காளி சட்னி தயாராக இருக்கும். அவற்றை உங்களுக்கு பிடித்த டிபன்களுடன் சேர்த்து ருசித்து மகிழலாம்.
இந்த சுவையான சட்னியை நீங்களும் ஒரு முறை முயற்சியுங்கள் மக்களே!!!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“