How to Update Aadhaar Online: ஆதார் அட்டை தொடர்பான மாற்றங்களை ஆன்லைனில் செய்வதற்கான ஏற்பாட்டை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) அறிமுகப்படுத்தியுள்ளது. ஆன்லைன், ஆஃப்லைன் என இரண்டு மீடியம் வாயிலாக உங்களுக்கு தேவையான அப்டேட்டுகளை செய்யலாம்.
Advertisment
ஆன்லைனில் அப்டேட் செய்வது எப்படி என்பதை இங்கே பார்க்கலாம்,
1. ஆணையத்தின் அதிகாரப்பூர்வ uidai.gov.in இணையதளத்திற்கு செல்ல வேண்டும் .
3. உங்கள் 12 இலக்க ஆதார் எண் (மற்றும்) கேப்ட்சா குறியீட்டை பதிவிட வேண்டும். பிறகு, நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு வருக்கு OTP- எண்ணையும் குறிப்பிட வேண்டும்.
5. உங்கள் ஆவணங்களை சமர்ப்பித்த பிறகு, நிலையைக் கண்காணிக்க ஒரு எண் உங்களுக்கு வழங்கப்படும். இந்த எண்ணை வைத்து "ஆன்லைன் முகவரி புதுப்பிப்பு விண்ணப்பத்தின் தற்போதைய நிலையென்ன" என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். எனவே, ஆன்லைனில் முகவரியை மாற்ற வேண்டுமெனில், ஆதார் அட்டையுடன் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண் வைத்திருக்க வேண்டும்.
ஆதார் அட்டை பதிவு மேம்பாடு மையத்தில் ஆதார் முகவரியை மாற்றுவது எப்படி?
உங்கள் விட்டுக்கு அருகில் உள்ள பதிவு / புதுப்பித்தல் மையத்தில் ஆதார் விவரங்களை திருத்தலாம்/புதுப்பிக்கலாம்.
ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அருகிலுள்ள ஆதார் அட்டை பதிவு மேம்பாடு மையத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தகவலின்படி , ஆதார் அட்டை விவரங்களை புதுப்பிக்க 90 நாட்கள் ஆகலாம்.