மூளையில் உள்ள ரசாயன அளவை அதிகரிக்க, யோகா!

பயிற்சிக்கு முன்பும் பின்பும் பயிற்சியில் பங்கு பெற்றவர்களுக்கு எம் ஆர் ஐ ஸ்கேன் (magnetic resonance imaging (MRI) scan) சோதனை மற்றும் மனச்சோர்வு மருத்துவரீதியாக அளவீடப்பட்டுள்ளது

By: February 11, 2020, 6:18:23 PM

மூளையில் உள்ள ரசாயண அளவை அதிகரிக்கவும், மன அழுத்தத்தை குறைக்கவும் யோகா பயன்படுகிறது.

யோகா பயிற்சி செய்வதால் மூளையின் செயல்பாட்டை ஒழுங்குப்படுத்தும் ‘மெசஞ்சர்’ மூலக்கூறுகளின் அளவு அதிகரிக்கக்கூடும். மேலும் வாரத்துக்கு ஒரு யோகா பயிற்சி வகுப்பை முடிப்பது இந்த வேதிப்பொருளின் உயர் நிலையை பராமரிக்க உதவும் என ஒரு ஆய்வு கூறுகிறது.

சீனாவின் செல்வாக்கு இந்தியப் பெருங்கடல் தீவுகளில் குறிப்பிடத்தக்க அளவு உயர்வு

‘Journal of Alternative and Complementary Medicine’ என்ற மாற்று மருத்துவம் குறித்தான இதழில் இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவரீதியாக மன சோர்வு உள்ள 30 நோயாளிகளை ஒரு குழுவாக தேர்ந்தெடுத்து அவர்களை தோராயமாக இரண்டு குழுக்களாக பிரித்துள்ளனர். இந்த குழுவில் உள்ளவர்களுக்கு மூச்சு பயிற்சி மற்றும் ஐயங்கார்ஸ் யோகாவில் உள்ள சில பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. பி கே ஸ் ஐயங்கார் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட யோகா முறைக்கு ஐயங்கார்ஸ் யோகா என்று பெயர்.

இந்த இரு குழுக்களுக்கும் உள்ள வேறுபாடு என்பது 90 நிமிட யோகா அமர்வுகள் மற்றும் வீட்டு அமர்வுகளின் எண்ணிக்கைகளே ஆகும். மூன்று மாத பயிற்சியில் அதிக அளவு யோகா செய்யும் குழுவுக்கு ஒரு வாரத்துக்கு 3 யோகா அமர்வுகளும், குறைவாக யோகா செய்யும் குழுவுக்கு வாரத்துக்கு இரண்டு அமர்வு யோகா பயிற்சிகளும் வழங்கப்பட்டன.

பயிற்சிக்கு முன்பும் பின்பும் பயிற்சியில் பங்கு பெற்றவர்களுக்கு எம் ஆர் ஐ ஸ்கேன் (magnetic resonance imaging (MRI) scan) சோதனை மற்றும் மனச்சோர்வு மருத்துவரீதியாக அளவீடப்பட்டுள்ளது.

ஆய்வின் முடிவில் குழுவில் இருந்த அனைவருக்கும் மனச்சோர்வு குறைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அவர்களது எம்ஆர் ஐ ஸ்கேன் பரிசோதனை முடிவுகள் அவர்களது மூளையில் உள்ள ‘மெசஞ்சர்’ மூலக்கூறுகளின் அளவு அதிகரித்துள்ளதை காட்டியுள்ளது.

ஆதாரம் அடிப்படையிலான தரவுகளை கொடுத்துள்ளதால் இன்னும் அதிக எண்ணிக்கையிலான நபர்கள் தங்களது உடல் நலத்திர்க்கும் நல் வாழ்வுக்குமான உபாயமாக யோகா செய்ய துவங்குவார்கள் என இந்த ஆய்வில் ஈடுபட்ட ஆராய்ச்சியாளார்கள் தெரிவித்தனர்.

குடும்ப பிரச்னைகளே தற்கொலைகளுக்கு முக்கிய காரணம் – என்.சி.ஆர்.பி. ரிப்போர்ட்; மனநல உதவிகள் பரிந்துரை

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Uses of yoga journal of alternative and complementary medicine

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X