Vadacurry food recipe in Tamil : என்னதான் இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்ள வகை வகையாய் சட்னி செய்தாலும் சாம்பார் வைத்தாலும், வடகறி இருந்தால் அந்த உணவே விருந்து தான். கடையில் வாங்கி சாப்பிட்டாலும் வீட்டில் செய்வது போன்று எப்போதும் வராது. வீட்டிலேயே வடகறி செய்வது எப்படி என்பதை விவரிக்கிறது இந்த குறிப்பு.
தேவையான பொருட்கள் :
கடலைப் பருப்பு ஒரு கப்
வெங்காயம் 2
பச்சை மிளகாய் 2
தக்காளி 2
சோம்பு 1 ஸ்பூன்
பட்டை,லவங்கம், கிராம்பு 1
எண்ணெய் 2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
கருவேப்பிலை – சிறிதளவு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
முந்திரி – 2
மஞ்சள் - 1/4 ஸ்பூன்
தனியா தூள் - 1/2 ஸ்பூன்
கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
தேங்யா - அரை கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
கடலை பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைத்து பச்சை மிளகாய் சேர்த்து மொறமொறப்பாக அரைத்து எடுக்க வேண்டும்.பின் இட்லி குக்கர் தட்டில் துணி பரப்பி அதை கொட்டி 15 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.
ஒருகடாயில் எண்ணெய் விட்டு பட்டை , லவங்கம் என மசாலா பொருட்கள் சேர்த்து வதக்கவும். அடுத்து வெங்காயம் , பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் , தக்காளி சேர்த்து வதக்கவும்.பின் ஏனைய மசாலாப்பொருட்களையும் சேர்த்து வதக்கவும்.
பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
பின் தேங்காய் , முந்திரி, சோம்பு சேர்த்து மைய அரைத்து
குழம்பு கொதித்ததும் வேக வைத்த கடலை பருப்பை சேர்த்துக் கிளறவும். தற்போது அரைத்த தேங்காயையும் சேர்க்க வேண்டும். தேவையான பதம் வந்ததும் குழம்பை இறக்கி கொத்தமல்லி தழை தூவவும். இப்போது வடகறி தயார்..!
மேலும் படிக்க :அழகு பராமரிப்பில் அதீத ஆர்வம் கொண்டவரா? இருக்கவே இருக்கு தேங்காய் எண்ணெய் …