/tamil-ie/media/media_files/uploads/2019/01/IMG_1395.jpg)
Ven Pongal Recipe in Tamil, வெண் பொங்கல் செய்யும் முறை
How to Make Ven Pongal Step-by-Step Process: தமிழகத்தில் மிகவும் பிரபலமான காலைச் சிற்றுண்டி என்றால் அதில் பொங்கலும் சாம்பாரும் நிச்சயம் இடம் பெறும். பொங்கல் தினத்தன்று சர்க்கரை பொங்கல் பிடிக்காதவர்களுக்கு மாற்றாக அமைந்திருக்கும் மற்றொரு சுவையான உணவு தான் வெண் பொங்கல்.
Pongal 2019 Wishes : பொங்கலோ பொங்கல்... வாழ்த்து சொல்லுங்க மகிழ்ச்சியா இருங்க
Ven Pongal Recipe 2019 : மிகவும் எளிதாக இந்த உணவை எப்படி தயாரிப்பது ?
பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பை சரிசமமாக கலந்து சிறிது நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.
இஞ்சி மற்றும் மிளாகாயை பொடிப்பொடியாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
தாளிப்பதற்கு எண்ணெய், நெய், கறிவேப்பிலை, மிளகு, சீரகம், கடுகு ஆகியவற்றை தேவைக்கு அளவாக எடுத்துக் கொள்ளவும்.
மேலும் படிக்க : தித்திக்கும் பொங்கல் செய்வது எப்படி ?
செய்முறை
ஒரு கனமான பாத்திரத்தில் பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பை வேகவைத்து குழைய வைத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலி வைத்து, அது சூடாகவும் எண்ணெய், நெய், ஆகியவற்றை ஊற்றிவும்.
இரண்டும் சூடான பிறகு, கடுகு, மிளகு, சீரகம் ஆகியவற்றை சேர்க்கவும். இந்த மூன்று மசால் பொருட்களும் எண்ணெய்யில் பொரிந்தவுடன், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவை சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
தனியாக முந்திரியை நெய்யில் வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். குழைந்திருக்கும் சாதத்தில் இந்த மசாலாப் பொருட்கள் மற்றும் முந்திரியை சேர்த்து, நெய்யூற்றி நன்றாக கிளறி எடுத்தால் வெண் பொங்கல் ரெடி.
தொட்டுக் கொள்ள, தேங்காய் சட்னி மற்றும் சாம்பார் நல்ல காம்பினேஷனாக அமையும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.