விஜய் டிவி சீரியல்: ‘காற்றின் மொழி’ கண்மணியா இது?

அழகான, திறமையான, பிரியங்கா எம் ஜெயின் தனது 16 வயதில் திரை வாழ்க்கையைத் தொடங்கினார்.

By: April 15, 2020, 1:09:15 PM

Vijay TV Kaatrin Mozhi Serial : விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்கL ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றிருக்கிறது. ராஜா ராணி, சின்னத் தம்பி, நாம் இருவர் நமக்கு இருவார், ஆயுத எழுத்து, மௌன ராகம் என்று சினிமா பாணியில் டைட்டில்கள் வைத்து பல்வேறு தொடர்கள் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகின. அந்த வகையில் பாடலின் முதல் வார்த்தைகளான, ‘காற்றின் மொழி’ என்ற சீரியலும் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ராஜா ராணி சீரியலின் ஹீரோ சஞ்சீவ் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

பொது முடக்கம் 2.0: எதற்கெல்லாம் அனுமதி? உள்துறை அமைச்சகம் பட்டியல்

புகழ் பெற்ற ராஜா ராணி சீரியல் ஜோடியான, ஆல்யா மானசாவே இதிலும், சஞ்சீவுக்கு ஜோடியாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்கள் திருமணம் செய்துக் கொண்டதால், காற்றின் மொழி சீரியல் மூலம், சஞ்சீவுக்கு ஜோடியானார் பிரியங்கா ஜெயின்.

அமெரிக்க ரிட்டர்னான சஞ்சீவ், கிராமத்து சூழலில் வாழும் கதாநாயகி பிரியங்கா இருவருக்கு ஏற்படும் காதலை மையப்படுத்தி இந்த சீரியல் உருவாகி வருகிறது. கண்மணி என்ற கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை பிரியங்கா. இவர் ஏற்கனவே ஒரு சில கன்னட படத்தில் கதாநாயகியாகவும், துணை நடிகையாகவும் நடித்துள்ளார். ஆனால், தமிழ் ரசிகர்களுக்கு காற்றின் மொழி தொடர் மூலம் தான் அறிமுகம்.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிரியங்கா, வளர்ந்தது, படித்தது எல்லாமே பெங்களூரில். ஸ்ரீ என்.கே.எஸ் ஆங்கில பள்ளியில் பள்ளி படிப்பையும், ஜெயின் கல்லூரியில் கல்லூரி படிப்பையும் முடித்தார். அழகான, திறமையான, பிரியங்கா எம் ஜெயின் தனது 16 வயதில் திரை வாழ்க்கையைத் தொடங்கினார். ஒரு மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய பிரியங்கா, ஃபேஷன் ஷோவிலும் பங்கேற்றுள்ளார். பல இசை ஆல்பங்கள் மற்றும் டி.வி விளம்பரங்களிலும் நடித்துள்ளார். அதற்கடுத்து 2015 ஆம் ஆண்டில், நிருப் பண்டாரியுடன் இணைந்து, கன்னட த்ரில்லர் திரைப்படமான ’ரங்கிதரங்காவில்’ நடித்தார். இதனை அனுப் பண்டாரி இயக்கியிருந்தார்.

மோடி அணிந்த மணிப்பூர் மாஸ்க்: டுவிட்டரில் டிரெண்ட் செய்த பாஜக தலைவர்கள்

கிராமத்து தோற்றத்தில் இருக்கும் பிரியங்கா, நிஜத்தில் படு மாடர்ன். இவரது சமூக வலைதள பக்கத்தில் இதனை மேலும் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.  ஊர் சுற்றுவதும், மராத்திய உணவுகளை உண்பதும், பிரியங்காவுக்குப் பிடித்த விஷயங்களாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Vijay tv kaatrin mozhi serial kanmani priyanka jain

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X