Corona Virus Updates: நடிகையும், பிரபல தொகுப்பாளருமான விஜே ரம்யா, கொரோனா வைரஸ்க்கு எதிரான விழிப்புணர்வு வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்தில் பரவுவதை தவிர்க்கும் பொருட்டு, தமிழக அரசு பல தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதையும் மீறி, தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது.
இதெல்லாம் தேவையா! ஹீலர் பாஸ்கர் மீது பாயும் நடவடிக்கை
அதேபோல், இந்தியாவில் மட்டும் கொரோனா பலி எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது. மார்ச் 22 முதல் 29ம் தேதி வரை சர்வதேச விமானங்கள் அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டிலேயே இருக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வெளியே அனுப்ப வேண்டாம் எனவும் மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்நிலையில், நடிகையும், பிரபல வி.ஜே.வுமான ரம்யா, கொரோனாவுக்கு எதிரான விழிப்புணர்வு வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார்.
17, 2020
இதில் நாம் அடிப்படையில் கை கழுவுவதை அவசியமாக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். நாம் தினந்தோறும் செய்யும் ஒரு விஷயமாக வெளியே சென்று வந்தவுடன் கைகழுவுவதை அவசியமாக்க வேண்டும் என்று கூறியுள்ளார் .
பிறந்து ஒரு மாதம் கூட ஆகாத பெண் சிசு கொலை! - இந்த கொடுமை என்று தீருமோ
இதுகுறித்து அவர், "கைகளை சுத்தமாக வைத்து கொள்ள உதவும் அனைத்து சுத்தம் செய்யும் மருந்துகளை பையில் எடுத்து செல்ல வேண்டும் அது மிகமிக அவசியம் முக்கியமாக டிஷ்யூ பேப்பர்கள், கிருமிநாசினி மருந்து ஆகியவற்றை அடங்கிய பைகளை அதிகம் வெளியே செல்பவர்கள் பயன்படுத்துங்கள். இந்த நேரத்தில் தான் மிகவும் தைரியமாக நல்ல மனநிலையுடன் இருக்க வேண்டும் அப்படியாக மனதை பக்குவப்படுத்தி கொள்ளுங்கள். பல விஷயங்களை நாம் கடந்து வந்துள்ளோம். அதே போல இதையும் நாம் கட்டாயம் கடந்து வருவோம்.
வெளியில் செல்வதை தவிருங்கள். விடுமுறை கிடைத்து உள்ளது என்று வெளியே செல்லாதீர்கள். நெட்பிலிக்ஸ் இருக்கிறது அதனுடன் சில் பண்ணுங்க. ஏனெனில் அனைத்து இடங்களும் காலியாகி வருகிறது இந்த சூழ்நிலை நம் மனநிலையை மாற்றும். அதனால் இந்த நேரத்தில் நம் மனதை சரியாக வைத்து கொள்வது அவசியம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
விஜே ரம்யா மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”