Weight Loss health tips : உடல் எடை கண்ணுக்குத் தெரியாமல் ‘சர்ரென’ ஏறிவிடுகிறது. ஆனால் அதைக் குறைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். குறைக்க வேண்டும் என்ற மனநிலை உறுதியாகவே பலருக்கு மிகுந்த நேரம் பிடிக்கும். பின்பு ஒருவழியாக செயலில் இறங்கி, கட்டுப்பாடுடன் கூடிய பொறுமையைக் கடைபிடித்து, நாம் விரும்பிய தோற்றத்திற்குள் வருவதற்குள் ‘யப்பா முடியல’ என சொல்லத் தோன்றும். இந்த சவாலில் களமிறங்கி, சாத்தியப்படுத்தியிருக்கிறார் பிரகாஷி.
97 கிலோ எடையுடன் இருந்த பிரகாஷி அடிப்படையில் ஓர் பல் மருத்துவர். இந்திய ராணுவத்துக்கு பல் மருத்துவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவருக்கு, தடையாக வந்து வாய்ப்பை கேள்விக்குறியாக்கியிருக்கிறது இவரது உடல் எடை. அந்தத் தருணம் தான் ‘எப்படியாச்சும் உடம்பைக் குறைக்கணும்’ என்ற உந்துதலை பிரகாசிக்குக் கொடுத்திருக்கிறது. இவரின் பயணம், இதனைப் படிக்கும் மற்றவர்களுக்கும் இன்ஸ்பிரேஷனாக இருக்கும் என நம்புகிறோம்.
/tamil-ie/media/media_files/uploads/2019/02/51052058_745769412489409_5448072590847377408_n.png)
இவரது பயோடேட்டா
பெயர் - பிரகாஷி தல்வார்
தொழில் - பல் மருத்துவர்
வயது - 26
முந்தைய எடை - 97 கிலோ
இழந்த எடை - 31 கிலோ
காலம் - 4 மாதம்
Weight Loss health tips - திருப்பு முனை
’உடல் எடையைக் குறைக்க வேண்டும்’ என்ற எண்ணம் எப்போதுமே இருந்திருக்கிறது. ஆனால் ராணுவத்திற்கு நான் ஷார்ட் லிஸ்ட் ஆன போது தான், அந்த எண்ணம் தீவிரமடைந்தது. என்னுடைய எடைக்காக அப்படியான ஒரு வாய்ப்பை இழக்க நான் விரும்பவில்லை. ஜூலை இறுதி வாரத்தில் நான் ஷார்ட் லிஸ்டாகியிருப்பது தெரிய வந்தது. ஆகஸ்ட் 11-ம் தேதி நேர்முகத்தேர்வுக்குச் செல்கையில் 8 கிலோ எடையை இழந்திருந்தேன். நவம்பரில் எனக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டபோது 31 கிலோ குறைந்திருந்தேன்.
காலை உணவு
அவல், உப்புமா, ஊத்தப்பம், வெள்ளைக்கரு என வித விதமான காலை உணவுகளை சாப்பிடுவேன். ஆனால் அவை அத்தனையும் நெய்யில் செய்யப்பட்டவையாக இருக்கும்.
மதிய உணவு
சாலாட், முளைக்கட்டிய பயறுகளின் சாலட், கொண்டைக்கடலை சாலட் அல்லது வறுத்த சோளம்.
மாலை
எலுமிச்சை அல்லது அன்னாசி பழச்சாறு.
இரவு
நெய்யும் பருப்பும். இது எனக்கு தேவைப்படும் கொழுப்புகளைக் கொடுத்ததோடு, சாப்பிட வேண்டும் என ஏங்கும் எண்ணத்தையும் படிப்படியாகக் குறைத்தது.
சீட்டிங்
அவ்வப்போது மோமோஸ், பானிபூரி மற்றும் சில்லி பொட்டேட்டோ சாப்பிட்டேன்.
ஒர்க் அவுட்
என்னுடைய நாளை யோகாவிலிருந்து ஆரம்பிப்பேன். தினம் 6-8 கிலோ மீட்டர் ஓட்டம், 30 நிமிட வேக நடை இதில் அடங்கும். ஜும்பா மற்றும் பங்கரா நடனத்திலும் ஈடுபடுவேன்.
ஃபிட்னெஸ் சீக்ரெட்
தினமும் நிறைய தண்ணீர் குடிப்பது. வெறும் தண்ணீரை குடிக்க வெறுப்பாக இருந்தால், அதில் சில பழங்களை நறுக்கிப் போட்டுக் குடிப்பேன்.
தூண்டுதல்
தினம் காலை 9 மணிக்கு எடைப் போட்டு பார்ப்பேன். முதல் நாளை விட அடுத்த நாள் 300-500 கிராம் குறைவாக இருக்கும். அதைப் பார்த்து சந்தோஷமடைந்து, இன்னும் தீவிரமாவேன்.
எடையுடன் இருக்கும் போது உங்களை எரிச்சலடைய செய்தது
பார்ப்பவர்கள் எல்லாம் அட்வைஸ் செய்வது தான். அதுவும் மருத்துவ துறையில் இருந்துக் கொண்டு, இப்படி ஆரோக்கியமற்று இருக்கிறாயே என சிலர் கேட்கும் போது எரிச்சல் கலந்த வெறுப்பின் உச்சத்துக்கே சென்று விடுவேன்.
வாழ்க்கை முறை மாற்றம்
எடை இழக்கும் முயற்சியில் இருந்த போதே, தண்ணீரை தெய்வமாக மதிக்கத் தொடங்கி விட்டேன். நிறைய தண்ணீர் குடிப்பதால் உடலில் ஏற்பட்ட மாற்றத்தை உணர்ந்தேன். அப்படியே வெள்ளை சர்க்கரையை அறவே ஒதுக்கிவிட்டேன்.
எடை இழப்பில் கற்றுக் கொண்டது
எல்லாம் நம் மனநிலையைப் பொறுத்து தான். முடிவில் தீர்மானமாக இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதைத் தான் என்னுடை எடை இழப்பிலிருந்து நான் கற்றுக் கொண்டேன்.
மேலும் படிக்க : உடல் எடையை குறைக்க இந்த சட்னிகளை சாப்பிட்டு பாருங்கள்