How to Lose Belly Fat with Indian Diet Plan: நானும் டயட் கூட இருந்து பார்த்துட்டேன்... அப்போ கூட எனக்கு வெயிட் குறையவேயில்ல என்று வருத்தப்படுறீங்களா?... அப்போ இந்த தகவல் உங்களுக்கு தான். இந்தியன் டயட் ஃபாலோ செய்து இருக்கீங்களா? இனிமே, இந்தியன் டயட்டை பின்பற்றி பாருங்க.. ரிசல்ட் கன்ஃபார்ம்.
மேலும் படிக்க - தினம் முட்டை சாப்பிட்டால் ஆண்களுக்கு என்ன பலன் தெரியுமா? மகிழ்ச்சி தரும் ஆய்வு முடிவு
அது என்ன இந்தியன் டயட்?.... மேற்கத்திய நாடுகளில் பின்பற்றப்படும் டயட்டால் உடல் எடை குறையுமே தவிர, உடல் சத்து அதிகரிக்காது. ஆனால், நமது இந்தியன் டயட் அப்படியல்ல... உடல் எடையை குறைப்பதோடு மட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது. அதாவது பேலன்ஸ் செய்கிறது. இந்த மூன்று முறையை பின்பற்றுங்க.... வெயிட் லாஸ் நிச்சயம்.
எண்ணெய்யை குறைத்து காரத்தை அதிகப்படுத்துங்க... ஆமா, நீங்க சமைக்கும் சாப்பாட்டில் எண்ணெய்யின் அளவை குறைத்து, காரம் சற்று அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். காரம், உடலில் உள்ள கொழுப்புகளை கரைக்கும் ஆற்றல் கொண்டது. ஆகையால், இவ்வளவு நாள் நீங்கள் சேர்த்துக் கொண்ட அளவை விட, கொஞ்சமாக காரத்தை அதிகப்படுத்துங்க... அதுக்காக, 5 ஸ்பூன் மிளகாய் பொடியை அள்ளி போட்டுடாதீங்க... அப்புறம், 'பின் விளைவு'க்கு சங்கம் பொறுப்பாகாது.
மேலும் படிக்க - இந்த 4 விதைகள் சாப்பிட்டால் போதும்... டோட்டல் பாடி வெயிட் இறங்கிடும்
நல்ல கொழுப்புள்ள உணவை சாப்பிடுங்க... அசைவ கறி, பால் சார்ந்த உணவுகள் போன்றவை நல்ல கொழுப்பு உணவு கிடையாது. அதனை அள்ளிக்கட்டி சாப்பிட்டால், உடல் எடை குறையாது. அதற்கு பதில், ஆலிவ் ஆயில் மூலம் தயாரிக்கப்பட்ட உணவுகள், அவகேடோ, நட்ஸ் உள்ளிட்ட சில உணவுகள் நல்ல கொழுப்பை கொடுக்கின்றன. இவற்றை உணவாக எடுத்துக் கொள்ளுங்கள்.
சரிவிகித உணவை தயார் செய்ய கற்றுக் கொள்ளுங்கள். இப்போ லன்ச்சுக்கு சாப்பாடு செய்கிறீர்கள் என்றால், அதில் புரோட்டீன், நார்ச்சத்து, வைட்டமின்கள், மினரல்ஸ் போன்றவை இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள், இது உங்கள் உடலின் எடையை பேலன்ஸ் செய்து சிக்கென்று வைத்திருக்கும்.
மேலும் படிக்க - வாக்கிங் போயிட்டு 3 வடையை உள்ளே அமுக்குபவரா நீங்க?