முட்டைகோஸ் சூப்: சுமையான உடலை சுகமாக மாற்ற எளிய வழி

Weight Loss Tips: டயட்டின் படி, ஏழு நாட்களுக்கு நீங்கள் விரும்பும் அளவுக்கு முட்டைக்கோஸ் சூப் சாப்பிடலாம். இதன் செய்முறை பின்வருமாறு,

Weight Loss Tips: டயட்டின் படி, ஏழு நாட்களுக்கு நீங்கள் விரும்பும் அளவுக்கு முட்டைக்கோஸ் சூப் சாப்பிடலாம். இதன் செய்முறை பின்வருமாறு,

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
how to lose weight, lose weight fast, quick weight loss, முட்டை கோஸ் சூப் டயட், cabbage soup diet, cabbage soup diet weight loss, is cabbage soup diet healthy, cabbage soup recipe, லைப்ஸ்டைல் செய்திகள்

Weight Loss Tips:, how to lose weight, lose weight fast, quick weight loss, முட்டை கோஸ் சூப் டயட், cabbage soup diet, cabbage soup diet weight loss, is cabbage soup diet healthy, cabbage soup recipe, லைப்ஸ்டைல் செய்திகள்

Weight Loss Tips: குறுகிய கால எடை குறைப்புக்காக வடிவமைக்கப்பட்ட முட்டைகோஸ் சூப் டயட், சூப்பை அதிக அளவில் உட்கொள்வதை உள்ளடக்குகிறது. டயட் குறித்து ஆதரித்து பேசுபவர்கள் 7 நாட்கள் தொடர்ந்து முட்டைகோஸ் சூப் சாப்பிட்டால் உங்களது எடை 4.5 கிலோ அல்லது 10 பவுண்டுகள் வரை குறைய உதவும் என கூறுகின்றனர்.

Advertisment

Health line னின் கூற்றுப்படி, இருதய நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சைக்கு முன்னர் விரைவாக எடையை குறைப்பதற்காக இந்த டயட் ஒரு மருத்துவமனையில் உருவாக்கப்பட்டது.

முட்டைகோஸ் சூப் செய்முறை

டயட்டின் படி, ஏழு நாட்களுக்கு நீங்கள் விரும்பும் அளவுக்கு முட்டைக்கோஸ் சூப் சாப்பிடலாம். இதன் செய்முறை பின்வருமாறு,

பயிற்சியளிக்கப்படாத நாய்கள் கூட மனிதர்களை காப்பாற்றும்

தேவையான பொருட்கள்

2 – பெரிய வெங்காயம்

2 – பச்சை மிளகு

2– தக்காளி

1 கொத்து – மல்லி இலை

1 – முட்டைகோஸ்

3 – கேரட்

1 பாக்கெட்– மஷ்ரூம்

6-8 கப் – தண்ணீர் அல்லது காய்கரி cocktail

செய்முறை

* காய்கறிகளை நறுக்கிக் கொள்ளவும். .

* ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கவும்

Advertisment
Advertisements

* மற்ற காய்கறிகளைப் அதில் சேர்க்கவும். தண்ணீர் அல்லது காய்கறி cocktail ஐ அதில் விடவும்.

* நடுத்தர வெப்பத்தில் நன்றாக கொதிக்க விடவும். 30 -45 நிமிடங்கள் வேக வைக்கவும்.

எவ்வாறு முட்டைகோஸ் சூப் டயட்டை பின்பற்றுவது

இந்த சூப்புடன் ஒன்று அல்லது இரண்டு கலோரி உணவுகளை எடுத்துக் கொள்ள இந்த டயட் உங்களை அனுமதிக்கிறது. சில ஊட்டச்சத்துகள் இந்த டயட்டில் குறைவாக இருக்கும் எனவே தினமும் மல்டி வைட்டமின் எடுத்துக் கொள்வது பரிந்துரைக்கப்படுகிறது. நீங்கள் விரும்பும் அளவுக்கு பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடலாம். ஆனால் வேகவைத்த உருளைக்கிழங்கு, பீன்ஸ், சோளம், பட்டாணி மற்றும் வாழைப்பழங்களை முதல் மூன்று நாட்களுக்கு தவிர்க்க வேண்டும். சேர்க்கப்பட்ட சர்க்கரை தவிர்க்கப்பட வேண்டும். இந்த டயட்டை 7 நாட்களுக்கு மேல் தொடரக்கூடாது.

வெந்தயம் இப்படியும் பயன்படுமா? அடர் கூந்தலுக்கு அசத்தலான ஹேர் ஸ்பிரே!

முட்டைகோஸ் சூப் டயட் ஆரோக்கியமானதா?

எவ்வாறாயினும், வல்லுநர்கள் உணவின் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி உறுதியாக நம்பவில்லை, இது எடை குறைப்பை ஊக்குவிக்கிறது, ஏனெனில் இது கலோரி அளவைக் கட்டுப்படுத்துகிறது என விவாதிக்கின்றனர். எனவே, அந்த கூடுதல் எடையை குறைக்க இந்த உணவு உங்களுக்கு உதவக்கூடும் என்றாலும், நீங்கள் உணவை நிறுத்தியவுடன் இதில் பெரும்பாலானவை திரும்பி வர வாய்ப்புள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Healthy Life

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: