Cabbage Soup For Weight Loss: குறுகிய காலத்தில் எடையைக் குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள், முட்டைக்கோஸ் சூப்பை நிறைய குடிக்கலாம். ஏழு நாட்கள் தினமும் முட்டைக்கோஸ் சூப் குடித்தால், 4.5 கிலோ வரை எடை குறையும், என இதனை பின்பற்றியவர்கள் கூறுகிறார்கள்.
ஷூட்டிங் இல்லன்னு எவ்ளோ ரிலாக்ஸ்… நடிகைகளின் லேட்டஸ்ட் படங்கள்!
முட்டைக்கோஸ் சூப் செய்முறை
டயட்டின் படி, ஏழு நாட்களும் நீங்கள் விரும்பும் அளவுக்கு முட்டைக்கோஸ் சூப்பை சாப்பிடலாம். எப்படி செய்ய வேண்டும் என்ற செய்முறையை இங்கே குறிப்பிடுகிறோம்.
தேவையான பொருட்கள்
2 - பெரிய வெங்காயம்
2 - குடை மிளகாய்
2 - தக்காளி
1 கொத்து - செலரி
1 - முட்டைக்கோஸ் தலை
3 - கேரட்
சிறிது - காளான்கள்
6-8 கப் - நீர்
செய்முறை
* காய்கறிகளை நறுக்கவும்.
* ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, வெங்காயத்தை வதக்கவும்.
* அதோடு மற்ற காய்கறிகளைச் சேர்க்கவும். பின்னர் தண்ணீரை சேர்க்கவும்.
* அனைத்தையும் சேர்த்து, நடுத்தர வெப்பத்தில் 30-45 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
முட்டைகோஸ் சூப் டயட்டை எப்படி பின்பற்றுவது?
சூப்போடு தினமும் ஒன்று அல்லது இரண்டு கலோரி உணவுகளை உட்கொள்ளலாம். இதில் சில ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருக்கலாம், எனவே தினசரி மல்டிவைட்டமின் பரிந்துரைக்கப்படுகிறது. நீங்கள் விரும்பும் அளவுக்கு பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்ணலாம். ஆனால் வேகவைத்த உருளைக்கிழங்கு, பீன்ஸ், சோளம், பட்டாணி மற்றும் வாழைப்பழங்களை முதல் மூன்று நாட்களுக்கு தவிர்க்க வேண்டும். சர்க்கரை தவிர்க்கப்பட வேண்டும். ஒரே நேரத்தில் ஏழு நாட்களுக்கு மேல் இந்த டயட்டை தொடரக்கூடாது.
சுஷாந்த் வங்கிக் கணக்கில் இருந்து ‘யாருக்கோ’ சென்ற ரூ.15 கோடி – சிக்கலில் காதலி
முட்டைக்கோசு சூப் உணவு ஆரோக்கியமானதா?
எவ்வாறாயினும், வல்லுநர்கள் இந்த டயட்டின் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி உறுதியாக நம்பவில்லை. இது எடை இழப்பை ஊக்குவிக்கிறது. ஏனெனில் இது கலோரி அளவைக் கட்டுப்படுத்துகிறது. எனவே, கூடுதல் எடையைக் குறைக்க உங்களுக்கு உதவக்கூடும் என்றாலும், நீங்கள் இந்த டயட்டை நிறுத்தியவுடன் மீண்டும் எடை கூட வாய்ப்புள்ளது. மியாமி ஊட்டச்சத்து நிபுணர் ஜூலி ரோடன்பெர்க், “இந்த டயட் கலோரிகளில் அதிக கட்டுப்பாடு கொண்டிருப்பதால் தான் ’செயல்படுகிறது’. ஒரு சிறப்பு நிகழ்வுக்காக எடை இழக்க விரும்பும் நபர்களிடம் இது மார்க்கெட்டை கொண்டிருக்கிறது” என்றார்.
இந்த டயட்டில் சில அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லாமல் போவதால், பசி, பலவீனம், சலிப்பு மற்றும் சில நேரங்களில் நோய்வாய் கூட ஏற்படலாம், என ஓர் இணையதளம் குறிப்பிட்டுள்ளது. இன்னொரு கவலை என்னவென்றால், இது வளர்சிதை மாற்றத்தை குறைக்கிறது. இதன் விளைவாக, முட்டைக்கோஸ் சூப் டயட்டில் இருந்து விலகிய பின் எடை குறைவதில் சிரமம் ஏற்படலாம்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.