Weight loss tips tamil: வீட்டிலிருந்து வேலை செய்யும் புதிய வேலை கலாச்சாரம் காரணமாக, பலரது உடல் எடை அதிகரித்து வருகிறது. உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி என மக்கள் பல வழிகளில் முயன்றாலும் அவற்றை குறைப்பது சற்றே கடினமானதாக இருக்கிறது. அப்படி உடல் எடை மற்றும் தொப்பை அல்லது வயிற்று கொழுப்பை குறைப்பதற்கான வழிகள் தான் என்ன?, கொழுப்பை வளர்சிதை மாற்ற வழி உள்ளதா?, அல்லது உடற்பயிற்சியின் மூலம் கொழுப்பை குறைக்க முடியுமா? இந்தக் கேள்விகளுடன் நீங்கள் போராடுகிறீர்கள் என்றால், முழுமையான வாழ்க்கை முறை பயிற்சியாளர் லூக் குடின்ஹோ சில பதில்களை நமக்கு இங்கு வழங்கியுள்ளார்.

பயிற்சியாளர் லூக் குடின்ஹோ அவரது இன்ஸ்டாகிராமின் ஒரு புதிய வீடியோவில், தொப்பை அல்லது வயிற்று கொழுப்பை குறைப்பதற்கான சில ரகசியங்களை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் அவர், “ஒரு டயட்டில் இருந்து இன்னொரு டயட்டிற்கும், கெட்டோவில் இருந்து குறைந்த கார்ப் முதல் அதிக புரதம் வரை உள்ள உணவிற்கும், சைவ உணவு உண்பதிலிருந்து இடைவிடாத டயட் வரை ஏராளமான மக்கள் மாறுகிறார்கள். கொழுப்பை எரிப்பதற்கான வழியை மக்கள் தொடர்ந்து துரத்திக் கொண்டே இருக்கிறார்கள். மேலும், அவர்கள் உடல் எடையை குறைக்க தொடர்ந்து போராடுகிறார்கள்.

மேலும், மக்கள் இன்சுலின் என்று கேட்டால், அவர்கள் உடனடியாக டைப் மற்றும் 1 மற்றும் 2 நீரிழிவு நோயைப் பற்றி நினைக்கிறார்கள். ஆனால் அது அதைவிட அதிகம். இன்சுலின் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் வேலையைச் செய்கிறது. இந்த ஹார்மோன் செல்களின் கதவுகளைத் திறந்து, இரத்தத்தில் உள்ள குளுக்கோஸை வெளியே எடுத்து ஆற்றலாகப் பயன்படுத்துகிறது.

ஆனால் இன்சுலின் அளவு அதிகமாக இருந்தாலோ அல்லது உடல் இன்சுலின் எதிர்ப்பு சக்தி கொண்டதாக இருந்தாலோ, இந்த செல்கள் தகவல்தொடர்புகளைப் புறக்கணித்து கதவுகளைத் திறக்காமல், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும். எனவே இன்சுலின் அளவை பராமரிக்க வேண்டும் – அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இல்லை.” என்று கூறியுள்ளார்
நமது வயிற்றை எப்படி ஒரே நிலையாக வைத்துக் கொள்வது? பயிற்சியாளர் லூக் குடின்ஹோ கூறுவது தான் என்ன?
- எல்லா நேரமும் சாப்பிட வேண்டாம். நீங்கள் உண்மையிலேயே பசியுடன் இருக்கும்போது சாப்பிடுங்கள்.
- குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உண்ணுங்கள்.
- நள்ளிரவு மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் பேரழிவுக்கான செய்முறையாகும். இதனால் இரவு முழுவதும் இன்சுலின் அளவு அதிகமாக இருக்கும். நீங்கள் இரவில் தாமதமாக சாப்பிட வேண்டும் என்றால், அதை குறைந்தபட்சமாக வைத்திருங்கள்.

- உங்கள் தட்டில் புரதம் அதிகம் உள்ள உணவுகளை சேர்த்துக்கொள்ளுங்கள். ஆனால் கார்போஹைட்ரேட் குறைவாக இருக்கும் படி பார்த்துக்கொள்ளுங்கள். காய்கறிகளை அதிகம் சாப்பிடுங்கள்.
- காலையில் உடற்பயிற்சி செய்யுங்கள். ஆனால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருங்கள். ஒவ்வொரு உணவிற்கும் பிறகு, 10 நிமிடங்கள் நடைபயிற்சி செய்யுங்கள்.
- உங்கள் தூக்கப் பழக்கத்தை மேம்படுத்தி, உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்கவும். நீங்கள் தூக்கமின்மை அல்லது மன அழுத்தத்தில் இருந்தால், சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை நீங்கள் விரும்புவீர்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“