புத்தாண்டு முதல் இரவில் சீக்கிரமாக தூங்க வேண்டும் என்ற தீர்மானம் எடுத்துள்ளீர்களா? இரவில் சீக்கிரமாக தூங்குவது உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கிறது என மருத்துவர் தத்தாத்ரே சோலங்கே தெரிவித்துள்ளார். குறிப்பாக, இரவு 8 மணி முதல் அதிகாலை 4 மணிவரை தூங்குவது இயற்கையாகவே பல நன்மைகளை வழங்குவதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: What happens to the body when you sleep at 8 PM and wake up at 4 AM?
சீரான தூக்கத்திற்கு வழிவகுக்கும்: இரவு 8 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இவை உடல் ரீதியான சோர்வில் இருந்தும், மன ரீதியான சோர்வில் இருந்தும் மீண்டு வருவதற்கு உதவி செய்கிறது.
ஆற்றலை அதிகரிக்கும்: விரைவாக தூங்கி அதிகாலையில் எழுவது நம் ஆற்றலை அதிகரிக்கிறது. இவை நாள் முழுவதும் நம் பணிகளை சுறுசுறுப்பாக மேற்கொள்வதற்கு வழிவகுக்கிறது.
ஹார்மோன் சீராக பணியாற்றும்: மெலடோனின் என்ற தூக்கத்தை கொடுக்கும் ஹார்மோன், மாலை நேரத்தில் உச்சத்தில் இருக்கும். எனவே, விரைவாக தூங்குவது ஹார்மோன் சீராக இயங்க உதவி செய்யும்.
செரிமான மண்டலத்திற்கு நல்லது: மேலும், விரைவாக தூங்குவதால் இரவு தாமதமாக உணவு சாப்பிடுவது தடை படும். இவை செரிமான மண்டலத்திற்கு நல்லது.
இதேபோல், இரவு உணவை சீக்கிரமாக எடுத்துக் கொள்வது, தூங்கச் செல்வதற்கு முன்பாக உணவு முற்றிலும் செரிமானம் ஆவதை உறுதி செய்கிறது என மருத்துவர் சோலங்கே கூறுகிறார். இதன் மூலம் அசௌகரியம், செரிமான கோளாறு, தூக்கத்தில் இடையூறு ஏற்படுவது தடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். "விரைவாக சாப்பிடுவதால் இரத்தத்தில் சர்க்கரை உயர்வது கட்டுப்படுத்தப்படுகிறது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்
எனவே, இரவில் விரைவாக உறங்க செல்லும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். விடுமுறை நாட்கள், வார இறுதி நாட்கள் என எப்போதுமே இதை பின்பற்றினால் எளிதாக பழகி விடும். இரவில் தூங்க செல்வதற்கு முன்பாக காபி அருந்துவது, கடினமான உடற்பயிற்சிகள் செய்வது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். மாறாக புத்தகங்கள் படிப்பது, தியானம் செய்வது, மெல்லிய இசை கேட்பது போன்ற பழக்கங்களை பின்பற்றலாம். இவை விரைவாக தூங்குவதற்கு உதவி செய்யும்.