ஆரோக்கியமான உணவுத் திட்டத்தில் இலை பச்சை காய்கறிகள் எப்போதும் ஒரு சிறப்பு இடத்தைப் பெறுகின்றன. அதிலிருக்கும் அதிகப்படியான ஊட்டச்சத்து காரணமாக இலை கீரைகள் ஆரோக்கியமான காய்கறிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. அதற்காகவே, ஒரு நாளைக்கு மூன்று முறை சாப்பிடலாம் என்று கிடையாது. கீரையில் கிடைக்கும் நன்மையை அடைய அதனை அளவுடனும் உடலுக்கு தீங்கும் ஏற்படாத வகையில் சாப்பிட வேண்டும். கீரையை அதிகமாக சாப்பிட்டால் என்ன நடக்கும் என்பதை இச்செய்தி தொகுப்பில் காணலாம்.
கீரை நன்மைகள்
கீரையை சூப்பர்ஃபுட் என்று அழைக்க பல காரணங்கள் உள்ளன. ஏனெனில், அதில் கலோரிகள் குறைவாகவும், ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்கின்றன. இதில் கால்சியம், மெக்னீசியம், இரும்பு, வைட்டமின் ஏ, சி மற்றும் கே போன்ற அத்தியாவசிய தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன.
இதனை உணவில் தவறாமல் சேர்த்துக்கொள்வது புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கவும், ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும்,எடையைக் குறைக்கவும், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் உதவுகிறது. கீரையில் குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் (ஜிஐ) இருப்பதால், இது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் உதவும்.
கீரை அதிகமாக சாப்பிட்டால் என்ன ஆகும்?
தினமும் குறைந்த அளவில் கீரை உட்கொள்வதால், உடலுக்கு எவ்வித தீங்கும் ஏற்படாது. தினமும் அதிகளவில் கீரை சாப்பிட்டால், உடலில் பல பாதிப்புகள் ஏற்படும்.
ஊட்டச்சத்து குறைபாடு: கீரையில் உள்ள ஆக்சாலிக் அமிலம், தாவரங்களில் இயற்கையாக நிகழும் கலவை ஆகும். இந்த கலவையின் அளவு சாதாரண அளவை விட அதிகமாகும் போது மற்ற தாதுக்களை உறிஞ்சும் உடலின் திறனை பாதிக்கத் தொடங்குகிறது. ஆக்ஸாலிக் அமிலம் துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் கால்சியத்துடன் பிணைக்கப்படுவது தாதுப் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும்.
ஒவ்வாமை: இலை பச்சை காய்கறியில் ஹிஸ்டமைன் உள்ளது. இது உடலின் சில செல்களில் காணப்படும் வேதிப்பொருள் ஆகும். சில சமயங்களில் சிறியளவில் ஒவ்வாமை விளைவை ஏற்படுத்தும்.
நச்சு எதிர்வினை: ஒரே நேரத்தில் அல்லது குறிப்பிட்ட காலத்திற்குள் அதிகமாக கீரை உட்கொள்வது உடலில் நச்சு விளைவை ஏற்படுத்தும்.
வயிற்றுப் பிரச்சினை: கீரையில் உள்ள அதிக நார்ச்சத்து வாயு, வீக்கம், பிடிப்புகள், வயிற்றுப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
கீரை உட்கொள்வதில் யார் கவனமுடன் இருக்க வேண்டும்
சிறுநீரகக் கல் பாதிப்பு இருப்பவர்கள், அதிகளவில் கீரை உட்கொள்ளும் போது, உடலில் அதிக ஆக்ஸாலிக் அமிலம் உருவாகி, அதனை உடலில் இருந்து வெளியேற்றுவது கடினமாகிவிடும்.
மூட்டு பிரச்சினை இருப்பவர்கள், ஆக்ஸாலிக் அமிலத்துடன், கீரையில் ப்யூரின், ஒரு வகை கலவையும் நிறைந்துள்ளது. இந்த இரண்டு இணையும் போது, ஒரு வகை கீல்வாதத்தைத் ஏற்படுத்தலாம். ற்கனவே மூட்டு வலி, வீக்கம் மற்றும் வீக்கத்தால் அவதிப்படுபவர்களுக்கு, அதிகப்படியான கீரை உட்கொள்வது அறிகுறிகளை மோசமாக்கும்.
ஒருவேளை நீங்கள் ரத்தத்தை மெலிக்கும் மருந்தை உட்கொள்பவராக இருந்தால், வைட்டமின் கே நிறைந்த கீரை ரத்தத்தை மெலிக்கும் நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படும் ஆன்டிகோகுலண்ட் மருந்துடன் எதிர்வினையாக மாறலாம். ரத்தத்தில் உள்ள மற்ற உறைதல் காரணிகளையும் பாதிக்கலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil