கவிதைப் போட்டியில் பாரதியாரும் தோற்ற கதை: இரா.நாறும்பூ நாதன்

Writer R Narumpu Nathan: பாரதியாரை தவிர்த்துவிட்டு தமிழ் இலக்கியத்தை பேச முடியாது. சுதந்திரப் போராட்டக் காலத்துல இவ்வளவு உத்வேகமான கவிதைகளை வேறு யாரும் எழுதல.

இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வாசகர்களுக்காக எழுத்தாளர் நாறும்பூ நாதன் தொடர்ந்து பேசுகிறார். மூன்றாம் பாகம் இது…

பாரதியாரை தவிர்த்துவிட்டு தமிழ் இலக்கியத்தை பேச முடியாது. சுதந்திரப் போராட்டக் காலத்துல இவ்வளவு உத்வேகமான கவிதைகளை வேறு யாரும் எழுதல. 39 வயது வரைதான் பாரதியார் இருந்திருக்காரு. ஆனால் அவரது படைப்புகள் மகத்தானவை.

முதல் பாகம் படிக்க ‘க்ளிக்’ செய்யவும்: எதுவும் செய்யும் எழுத்து: இரா.நாறும்பூ நாதன்

பாரதியாருக்கு பல வருடங்களுக்கு பிறகு இறந்த வ.உ.சிதம்பரனார், இறக்கும் தறுவாயில், ‘என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?’ என்ற பாடலை பாடச் சொல்லி கேட்டபடியே இறந்தார்.

இரண்டாம் பாகம்: வரலாறு முக்கியம்: இரா.நாறும்பூ நாதன்

பாரதியார் இந்தப் பாட்டை சுதந்திரத்திற்கு 25 வருடங்களுக்கு முன்பே எழுதி வச்சுட்டு செத்துப் போயிட்டார். அதுக்கு பிறகு எத்தனை வருடம் கழிச்சு வ.உ.சி. கேட்கிறாருன்னு பாருங்க. ‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று’ அப்பவே சுதந்திரம் அடைந்தா எப்படி இருக்கும்னு கற்பனை பண்ணி பாரதி எழுதிட்டார். இதுதான் படைப்பு.

Writer Narumpu Nathan, R Narumpu Nathan About Subramania Bharati, சுப்பிரமணிய பாரதியார்

Writer R Narumpu Nathan

பாரதியார் காலத்துல ரானடே பரிசுப் போட்டின்னு புலவர்களுக்காக ஒரு பாடல் போட்டி தூத்துக்குடில நடத்தினாங்க. இந்தியாவின் வளத்தைப் பற்றி இருக்கணும். கும்மிப் பாட்டு மாதிரி இருக்கலாம். இத்தனை வரிகளில் இருக்கணும்னு நிபந்தனை. இதை நடத்தியவர்கள், தமிழர்கள்தான்.

பாரதியாரும் அந்தப் போட்டிக்கு பாடல் அனுப்பினார். ஆனா பரிசு பாரதியாருக்கு கிடைக்கல. பரிசு வாங்கியது, அ.மாதவய்யா என்கிற எழுத்தாளர். அ.மாதவய்யாவும் ஒரு முக்கியமான படைப்பாளிதான். தமிழில் 2-வது நாவல் எழுதியவர் அவர்தான்.

பிரதாப முதலியார் சரித்திரத்திற்கு அடுத்தபடியா மாதவய்யா எழுதியதுதான் 2-வது நாவல். விதவைத் திருமணத்தை ஆதரித்தும், பல்வேறு சமூக சீர்திருத்தக் கருத்துகளையும் எழுதியவர் அவர். அவருக்கு பரிசு கிடைத்தது, பாரதியாருக்கு கிடைக்கல.

நூறு வருடம் ஆனாலும் நிலைத்து நிற்பது, பாரதியார் அந்தப் போட்டிக்கு அனுப்பிய ‘செந்தமிழ் நாடென்னும் போதினிலே, இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே’ என்கிற பாடல்தான்.

ஆனா இன்று நூறு வருடம் ஆனாலும் நிலைத்து நிற்பது, பாரதியார் அந்தப் போட்டிக்கு அனுப்பிய ‘செந்தமிழ் நாடென்னும் போதினிலே, இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே’ என்கிற பாடல்தான். ஆனா அ.மாதவய்யா எழுதி, பரிசு பெற்ற பாடல் யாருக்கும் தெரியாது.

இப்போ தேடி கண்டுபிடிச்சுட்டாங்கன்னு வையுங்க… இதுல பாரதிக்கு பரிசு கொடுக்காததற்கு பல காரணங்கள் சொல்லப்படுது. ‘பிரிட்டீஷ் காரனை பகைச்சுக்க வேண்டாம். பாரதியாருக்கு பரிசு கொடுத்தா பிரிட்டீஷ்காரன் ஏதும் சொல்வான்’னு நினைச்சுருக்கலாம். ஆனாலும் காலத்தை வென்று நிற்கும் கவிதைகளை எழுதியவர் பாரதியார்.

அப்படியான படைப்புகள் சமூக மாற்றத்திற்குத்தானே பயன்பட்டிருக்கு. ‘செந்தமிழ் நாடென்னும் போதினிலே, இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே’ன்னா குழந்தைகளுக்கும் தெரியும்.

குழந்தைகளுக்காக பாடல்களை எழுதியவரும் அவர்தான். ஜாதிகள் இல்லையடி பாப்பான்னு சொன்னவர் அவர்தான். குழந்தைகளிடம்தான் சொல்கிறார். பெரிய ஆட்களிடம் சொல்லவில்லை. குழந்தைகளிடம் ஆரம்பத்திலேயே சொல்லி வளர்க்கணும் என்பதற்காகத்தான்.


இப்படி படைப்புகள் என்பது சமூகத்திற்காகத்தான். அது என்ன விளைவுகளை உருவாக்கியது என்பது வேறு. ஜாதி என்கிற வருணாசிரமம் பல ஆயிரம் ஆண்டுகளாக இங்க ஊறிப் போயிருக்கு. அதை அவ்வளவு சீக்கிரத்தில் உடைக்க முடியாது. ஆனாலும் அதை எதிர்த்து குரல் கொடுக்கிற தைரியத்தை ஒரு படைப்பாளி தனது படைப்பில் கொண்டு வர முடியும். அதை பாரதி செஞ்சிருக்காரு.

(பேசுவோம்)  தொகுப்பு: ச.செல்வராஜ்

(எழுத்தாளர் இரா.நாறும்பூ நாதன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் திருநெல்வேலி மாவட்டத் தலைவராக பொறுப்பு வகிக்கிறார். தொடர்புக்கு: narumpu@gmail.com )

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Literature News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close