Advertisment

நியாயமற்ற வரி; தொலைபேசி நிறுவனங்களுக்கு அரசு விலக்கு அளிக்க வேண்டும்.

அபராதத்தைப் பொறுத்தவரை, ஒரு நிறுவனமானது வேண்டுமென்றே சட்டத்தை மீறி செயல்படவில்லை எனும்பட்சத்தில் அபராதம் விதிக்கக்கூடாது என்று நீதிமன்றம் தொடர்ச்சியாக பலமுறை சொல்லி இருக்கிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
நியாயமற்ற வரி; தொலைபேசி நிறுவனங்களுக்கு அரசு விலக்கு அளிக்க வேண்டும்.

பொது நலனுக்கான தேவை எழும்பட்சத்தில், தள்ளுபடி செய்வதற்கான தேவையான அதிகாரத்தை அரசு பெற வேண்டும்.

Advertisment

அரவிந்த் பி.தாதார்

ஒவ்வொரு தொலைதொடர்பு நிறுவனமும், அதன் சரிக்கட்டப்பட்ட மொத்த வருவாயில் இருந்து 8 சதவிதத்தை லைசென்ஸ் கட்டணமாக செலுத்த வேண்டும். சரிக்கட்டப்பட்ட மொத்த வருவாயை கணக்கிடும்போது, சில விஷயங்களை சேர்க்க வேண்டுமா, இல்லையா என்பதில் சில சர்ச்சைகள் இருக்கின்றன. மிகவும் பரந்த விளக்கத்தை தொலைத்தொடர்புத் துறை கொடுத்திருப்பதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. தொலைபேசி நிறுவனங்கள் 93,000 கோடி ரூபாய் தேவையை எதிர்கொள்கின்றன. ஆயிரகணக்கானோர் வேலை இழப்புக்கு ஆளாக க்கூடும் என்பதற்கு மத்தியில், தொலைபேசித்துறையோடு பின்னிபிணைந்திருக்கும் வங்கிகள், மற்றும் அதனோடு இணைந்த சேவைகளில் இழப்பு ஏற்படுமோ என்ற பெரிய அச்சுறுத்தலையும் கூட ஏற்படுத்தி இருக்கிறது. தவிர, பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, ஆயில் இந்தியா, கெயில் போன்ற பொதுத்துறை நிறுவனங்களும் இதுபோல கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் இப்போதைக்கு நிழல் போல பதுங்கியிருக்கின்றன.

சரிக்கட்டப்பட்ட மொத்த வருவாய் பிரச்னையின் உண்மைத்தன்மையை தொலைபேசி நிறுவனங்கள் இப்போது எதிர்கொண்டிருக்கின்றன. இது சிக்கலான சூழலுக்கு தகுதியற்றதாக இருக்கிறதா என்பதையும் அறிந்து கொள்ள வேண்டியதேவை இருக்கிறது. தாராள மயமாக்கல் செயல்பாடுகளின் ஒரு பகுதியாக 1994-ம் ஆண்டு தேசிய தொலைபேசி கொள்கை அறிவிக்கப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட, ஆண்டு லைசென்ஸ் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் தனியார் நிறுவனங்களுக்கான அனுமதி கொடுக்கப்பட்டது. இந்த லைசென்ஸ் கட்டணமானமானது வருவாய் பகிர்தல் அடிப்படையில் 1999-ல் மாற்றம் செய்யப்பட்டது. சரிக்கட்டப்பட்ட மொத்த வருவாயில் இருந்து எட்டு சதவிகிதத்தை லைசென்ஸ் கட்டணமாக செலுத்த வேண்டும் என்பதுதான் இதன் அர்த்தம். கலால் வரி, சேவை வரி, சில குறிப்பிட்ட கட்டணங்கள் குறைக்கப்பட்டு ஒட்டுமொத்த வருவாயாக அது இருக்கும்.

டெல்லியில் எதிர்கட்சிகள் பயம் காட்டி, பாஜகவை சாடி, மக்களை தவறாக வழி நடத்துகிறார்கள்...

தொலைபேசி நிறுவனங்கள், தொலைத்தொடர்பு துறை ஆகியோருக்கு இடையேயான சிக்கல்களில் முக்கியமாக இரண்டு விஷயங்களில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பிரச்னை இருக்கிறது. தொலைபேசி சேவைகளில் இருந்து ஈட்டப்பட்ட வருவாயில் இருந்து மட்டும்தான் லைசென்ஸ் கட்டணம் செலுத்த வேண்டுமா என்பது ஒரு பிரச்னை. இரண்டாவதாக, மொத்த வருவாயில் இருந்து என்னென்ன விஷயங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதும் ஒருபிரச்னை.

தொலைத்தொடர்பு தகராறு தீர்வு மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் 2006-ம் ஆண்டு ஜூலை மாதம் அளித்த தீர்ப்பில், லைசென்ஸ் செயல்பாடுகள் அல்லாத வருவாய் என்பது, மொத்த வருவாய் கணக்கீட்டை கொண்டதாக இருக்கக் கூடாது என்று கூறப்பட்டது. லைசென்ஸ் கட்டணம் என்பது, லைசென்ஸ் செயல்பாடுகளில் இருந்து கிடைக்கும் வருவாயில் இருந்து மட்டுமே செலுத்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டது. 2007-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இன்னொரு தீர்ப்பு வெளியிடப்பட்டது. தொலைத்தொடர்பு தகராறு தீர்வு மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உள்ளிட்டவை அளித்த தீர்ப்பில், சரிக்கட்டப்பட்ட மொத்த வருவாயில் மோசமான கடன்கள், தள்ளுபடிகள், சலுகைகள் விலக்கப்பட வேண்டும் என்று கூறியது. 2015-ம் ஆண்டு அளித்த தீர்ப்பில், சரிக்கட்டப்பட்ட மொத்த வருவாயில் தள்ளுபடிகளை பொதுவாக சேர்க்கக் கூடாது என்று சொல்லப்பட்டது. எனினும், ரசீதுகள் மொத்த தொகையில் குறிப்பிடப்பட்டிருந்தால், தள்ளுபடிகள் தனியாகத் தரப்பட வேண்டும்(அல்லது பின்னர்). அப்போது அது கழிக்கப்படவில்லை.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

உச்ச நீதிமன்றத் தீர்ப்பில், தொலைபேசி லைசென்ஸ்தாரர்களின் ஒவ்வொரு கருத்தும் தள்ளுபடி செய்யப்பட்டது. தள்ளுபடி கொடுக்கப்பட்டது உட்பட, எந்த ஒரு தொகையும் குறைக்காமல் மொத்த வருவாயில் இருந்து லைசென்ஸ் கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என்பதை உறுதி செய்தது. மறு ஆய்வு செய்யக்கோரும் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இப்போது தொலைபேசிநிறுவனங்கள், ஒருபோதும் பெறாத வருவாயில் இருந்து 8 சதவிகித லைசென்ஸ் தொகையை செலுத்த வேண்டும். மேலும், இந்த உத்தேச வருவாயில் இருந்து அபராதம் , வட்டி ஆகியவற்றையும் செலுத்த வேண்டும்.

இந்த விளக்கம் உண்மையில் தனித்துவமானது. என்ன பெறுகிறோமோ அதன் பேரில்தான் வரி அல்லது சுங்கம் விதிக்கப்பட வேண்டும் என்பதுதான் பொதுவான விதி. வாடிக்கையாளர்களுக்குத் தரப்படும் தள்ளுபடியில் ஒருபோதும் வரி விதிக்கப்படுவதில்லை. தொலைத்தொடர்பு நிறுவனங்களின் நடத்தை நியாயமற்றது என்ற குற்றசாட்டு, அவர்கள் வேண்டுமென்றே பணம் செலுத்தாமல் தவிர்த்தனர் என்பதும் துல்லியமானதல்ல. தொலைத்தொடர்புத்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த புள்ளிவிவரங்களின்படி, நிலுவையில் இருக்கும் 16 தொலைத்தொடர்பு நிறுவனங்களின் மொத்த லைசெனஸ் கட்டணம் 1,09,278 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ரூ.86,089 கோடி அல்லது தோராயமாக 80 சதவிகிதம் செலுத்தப்பட்டுவிட்டது. ஆகையால் பிரச்னைக்குரிய தொகை ரூ.23,188 கோடியாகும். இதற்கு கூட்டு வட்டி ரூ.41,650 கோடி. அபராதம் ரூ.10,923 கோடி. அபராத த்துக்கு வட்டி என்ற வகையில் இன்னொரு ரூ.16,878 கோடி. திகைப்பூட்டும் கோரிக்கைக்கு அப்பால் ரூ.92,641 கோடியில், வட்டி மற்றும் அபராதம் மட்டுமே ரூ.70,000 கோடியாக இருக்கிறது.

சரிக்கட்டப்பட்ட மொத்த வருவாயில் என்ன இருக்கிறது என்ற ஒரு உண்மையான பிரச்னை இருந்ததால், கூட்டு வட்டி விதிப்பதை நியாயப்படுத்த முடியாது. அபராதத்தைப் பொறுத்தவரை, ஒரு நிறுவனமானது வேண்டுமென்றே சட்டத்தை மீறி செயல்படவில்லை எனும்பட்சத்தில் அபராதம் விதிக்கக்கூடாது என்று நீதிமன்றம் தொடர்ச்சியாக பலமுறை சொல்லி இருக்கிறது.

தொலைத்தொடர்பு அல்லாத நிறுவனங்கள் நிலை இன்னும் கூட அவலநிலையாக இருக்கிறது. ஒரு எண்ணைய் மற்றும் எரிவாயு நிறுவனம், உரிமம் வழங்கப்பட்ட மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளின் வருமானம் அதன் மொத்த வருவாயில் ஒருபகுதியே எனக் கூறுவது மிகவும் நியாயமற்றது. அதன் முழு வருமானத்தில் 8 சதவிகித உரிமக் கட்டணத்தை செலுத்த வேண்டும். தொலைத்தொடர்புத்துறை மொத்த வருவாய் போன்ற தவறான விளக்கத்தைக் கூட ஆய்வு செய்ய வேண்டும் என்பது உண்மையில் வருத்தமளிக்கிறது. இந்த விளக்கம் உறுதிப்படுத்தப்பட்டால், கெயில் நிறுவனம் ரூ. 1.8 லட்சம்கோடி செலுத்த வேண்டும். ஆயில் இந்தியா, பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆகியவை, முறையே ரூ. 46,000 கோடி, ரூ.22,000 கோடி என (வட்டி மற்றும் அபராதம் சேர்த்து) செலுத்த வேண்டும்.

இந்தியாவில் மந்தநிலை... அமெரிக்காவில் உயரும் பொருளாதாரம்! ட்ரம்பின் வெற்றி அது தான்!

தொலைபேசி நிறுவனங்களுக்கு மட்டும் இதன் தாக்கங்கள் இல்லை என்ற நோக்கத்தில், அதே போல இதர துறைகளுக்கும் இருக்கிறது. சலுகை வழங்குவது பற்றி அரசு சிந்திக்க வேண்டும். தொலைபேசி நிறுவனங்களைப் பொறுத்தவரை, மொத்த வருவாயின் கூறுகளில், உண்மையான ஒருசர்ச்சை உள்ளது என்பதால், வட்டி, அபராதம் ஆகியவை தள்ளுபடி செய்யப்பட வேண்டும். தேவைப்படின் பொதுநலன் கருதி இதைசெய்வதற்காக அவர்களுக்கு சலுகை அளிக்கும் அதிகாரம் அரசுக்குத் தேவை. இவை ஒப்பந்த நிலுவைகளாக இருக்கின்றன. முழுமையாக அல்லது பாதியாக தள்ளுபடி செய்வது என்பது முட்டுக்கட்டையாக இருக்கக் கூடாது. வட்டி, அபராதத்தை தள்ளுபடி செய்வதற்கு ஏராளமான சட்ட நியாயங்கள் உள்ளன., தொலைபேசி வருவாய் அ்ல்லாத வருவாயும் சேர்த்தாக, மொத்த வருவாய் இல்லை என்றும் தொலைபேசி சேவைகளில் இருந்து கிடைத்தவருவாய் மட்டுமே மொத்த வருவாய் என்று அரசு விளக்கம்கொடுக்க முடியும். அவை தொலைபேசி நிறுவனங்கள் அல்லாத பொதுத்துறை நிறுவனங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் ஏற்கமுடியாத கோரிக்கைகளை அகற்றும்.

உச்சநீதிமன்றத்தால் 2ஜி அலைக்கற்றை லைசென்ஸ்கள் ரத்து செய்யப்பட்டது. பல்வேறு சிறிய நிறுவனங்களை மூடுவதற்கு வித்திட்டது. இந்த துறையில் வெளிநாட்டு முதலீடுகளையும் அற்றுப் போகச் செய்தது இப்போதைய பிரச்னை சிக்கலுக்கு இணையானது.

தொலைத்தொடர்புத்துறை, லைசென்ஸ் கட்டணத்தை வசூலிப்பதை அதிகரிப்பதை நியாப்படுத்தும் போது, அது போதுமானதாக, சரிசம மானதாக மேற்கொள்ள வேண்டும். லைசென்ஸ் பெற்றவர்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு பைசாவையும் மொத்த வருவாயில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்படும் பட்சத்தில், அது சில நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, அதே போல அது பொருளாதாரத்துக்கும் பேரழிவை ஏற்படுத்தும்.

இந்த கட்டுரையின் எழுத்தாளர் உச்ச நீதிமன்றத்தின் வழக்கறிஞராக இருக்கிறார். உச்சநீதிமன்றத்தில் ஒரு தொலைபேசி நிறுவனம் ஒன்றுக்காக ஆஜராகி இருக்கிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment