இந்தியா(வரும் திங்கள் கிழமையன்று) வரும் ட்ரம்ப் பயணத்துக்கான ஏற்பாடுகளில் இருக்கும் டெல்லி, அமெரிக்காவின் கொள்கைகள் குறித்த ஊகங்களை கைவிட வேண்டிய தேவை இருக்கிறது. புலம்பெயர்ந்தவர்கள் முக்கியமாக இருக்கும் நிலையில், டிரம்ப் உடனான ஒப்பந்தத்தில் கொஞ்சமேனும் முக்கியத்துவம் இருக்க வேண்டும். அமெரிக்க அரசியலுக்கு உயிரூட்டும் ஆழமான சக்திகளை அது மீறக்கூடாது.
சி.ராஜா மோகன்
“யாங்கி வீட்டுக்குப் போ! என்னையும் உன்னுடன் கூட்டிப்போ” என்பது, அமெரிக்கா குறித்த உலகின் கலவையான உணர்வுகளின் நீண்டகாலமாக நிலவும் கருத்தாகும். இரண்டாம் உலகப்போரின் போதில் இருந்தே, உலகம் முழுவதும் உள்ள அரசுகளும், மக்களும் ஆக்கிரமிப்பில் இருந்து அமெரிக்கா அதன் நாட்டுக்குத் திரும்ப வேண்டும் என்பது அடிக்கடி எழும் கோரிக்கையாகும். அவர்களுக்காக, எதிர்ப்புத்தெரிவிப்பதற்கு போதுமான விஷயங்கள் இருக்கின்றன. அமெரிக்காவுக்கோ அதீத செலவு பிடிக்கும் மேலாதிக்கத்தை விடவும் வேறு எதுவும் முக்கியத்துவம் வாய்ந்ததில்லை.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
அதே நேரத்தில், அமெரிக்கர்களின் வாழ்க்கை முறைகளின் மீது உலகம் முழுவதும் ஒரு முடிவற்ற ஈர்ப்பு இருக்கிறது. அமெரிக்காவுக்கு யார் வேண்டுமானாலும் செல்ல முடியும். அதை அங்கே உருவாக்கு என்பது உலகின் அமெரிக்க கனவின் சாராம்சமாக இருக்கிறது. 18-ம் நூற்றாண்டு, 19-ம் நூற்றாண்டு ஐரோப்பா, அமெரிக்காவானது பழைய உலகின் அடக்கு முறை அமைப்பிலிருந்து விடுதலை பெறுவதாக இருந்தது. ஆசியா மற்றும் உலகின் தெற்கானது 20-ம் நூற்றாண்டில், உள்ளூரில் மறுக்கப்பட்டவர்களுக்கான வாய்ப்புகளைத் தேடும் இடமாக அமெரிக்கா இருக்கிறது.
ஜார்ஜ் பெர்ணான்டஸை நினைவு கூறுவோம் - தன்னலமற்ற அரசியல்வாதி
மூன்றாம் உலகநாடுகளில் எந்த நாடுகளை விடவும், அமெரிக்காவின் மீது சிறப்பு வாய்ந்த இந்தியர்கள் பைத்தியமாக இருக்கின்றனர். பல ஆண்டுகளாக, சிறப்பு வாய்ந்த செல்வாக்கு செலுத்தும் அனைத்து அரசியலும் அமெரிக்காவை கண்டிப்பதை வெளிப்படுத்தின. நம்ப முடியாத வெற்றிகரமான வேலைவாய்ப்புகளுக்காக கவுரவத்துடன் தங்கள் பிள்ளைகளை அனுப்புகின்றனர். அமெரிக்காவைப் போல வேறு எந்த உலக நாடுகளில் உள்ள இடங்களும் இந்தியர்களை வரவேற்பதில்லை.
அதிபர் டொனால்டு டிரம்ப் ஆட்சியின் கீழ் அதில் சில மாறக்கூடும். டிரம்ப்பின் அமெரிக்காவானது, யாங்கீஸ்களை வீடு திரும்புதலை விரும்புகிறது. ஆனால், உலகின் பிறபகுதிகளில் இருந்து கட்டுப்பாடற்ற வகையில் குடிபெயர்வோருக்கு கதவுகளை சாத்தியிருக்கின்றன. உள்ளூர் விமர்சகர்கள், அமெரிக்கா என்பது குடிபெயர்வோர்களின் தேசமாக இருக்கிறது என்று சொல்கின்றனர். அவர்களை வெளியேற்றி, டிரம்ப் தவறு செய்கிறார் என்கின்றனர். ஆனால், டிரம்ப்புக்கு பணியாற்றும் நபர்கள் மத்தியில் அதிக ஆதரவு இருக்கிறது. குடிபெயர்வோர்களால், ஊதியம் குறைவாக இருக்கிறது, முதலாளித்துவ வர்த்தகத்துக்கு உதவுகிறது. பழக்கமான கலாசார மற்றும் சமூக நிலப்பரப்பை சீர்குலைக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியும்.
உலகின் சில நாடுகளின் அதிபர்கள், அமெரிக்கா ஆக்கிரமிப்பை விலக்கிக் கொண்டு நாடு திரும்ப வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர். பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டூர்ட்டே, அமெரிக்க ராணுவத்துடனான நூற்றாண்டுகால உறவை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று விரும்புகிறார். வளைகுடா நாடுகளில் இருந்து அமெரிக்கா வெளியேற வேண்டும் என்று ஈரான் விரும்புகிறது. ஐரோப்பா, ஆசிய பகுதிகளில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற வேண்டும் என்று சீனா, ரஷ்யா நாடுகள் விரும்புகின்றன.
சில ஆண்டுகளுக்கு முன்புவரை, இந்த கோரிக்கைகள் மூர்க்கத்தனமாக நிராகரிக்கப்பட்டன. ஆனால், டிரம்ப் ஐரோப்பாவில், ஆசியாவில் அமெரிக்காவின் ராணுவ கடைமைகள் குறித்து அச்சுறுத்தும் கேள்வியை எழுப்பி இருக்கின்றார். மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த கால ராணுவ தலையீடுகளை கண்டனம் செய்கிறார். அமெரிக்க ஆதிக்கம் முற்றுப்பெற வேண்டும் என்ற சாத்தியங்கள் குறித்து உலக நாடுகள் தீவிர கவனம் செலுத்துகின்றன.
டிரம்ப், டூர்ட்டேவின் கோரிக்கையை முக்கியமல்ல என்று கருதினார், இதனால்,அமெரிக்காவுக்கு பணம் மிச்சம் என்றார். வளைகுடா நாடுகளைப் பொறுத்தவரை, ஆசிய அதிகார நாடுகள் முக்கிய கடல் எல்லைத் தொடர்புகளை கண்காணிக்க வேண்டும் என்று விரும்புகிறார். ஐரோப்பியா, ஆசியாவில் கூட்டுப்படைகள் தங்களது பாதுகாப்புக்கு வழி செய்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்.
அமெரிக்காவை பாதுகாப்புப் பணியில் இருந்து அப்புறப்படுத்துவதற்கு மத்தியில், ஐரோப்பிய யூனியனுக்காக ஐரோப்பாவில் உள்ள பிரான்ஸ், ஜெர்மன் ஆகியநாடுகள் புதிய ராணுவ திறன்களை உருவாக்க வேண்டும் என்பது குறித்து இப்போது பேசி வருகின்றன. ஆசியாவில், பெரும் பாதுகாப்பு பொறுப்பேற்பது குறித்து விவாதித்து வருகிறது. வளைகுடா நாடுகளில், அமெரிக்காவின் அரேபிய கூட்டணிகள், முறையான பாதுகாப்பு கட்டமைப்பு இன்றி, பாதுகாப்பு சார்பு நிலையை பன்முகப்படுத்த முடிவு செய்திருக்கின்றன.
அமெரிக்காவின் பங்களிப்பை குறைப்பதுடன், எல்லைகளைத் திறப்பது, தடையற்ற வர்த்தகத்தை நிராகரித்தல் என்பது டிரம்ப்பின் இதயப்பூர்வமான முதல் கொள்கையாகும். இந்த யோசனைகளுக்கு அமெரிக்காவில் ஆழ்ந்த எதிர்ப்பு இருக்கும் என்பது உறுதி. மேலும் இது அமெரிக்காவின் போருக்குப் பிந்தைய சர்வதேசவாதத்துக்கு எதிரானதாகும். கிழக்கு கடற்கரையில் உள்ள வால்ஸ்ட்ரீட், மேற்கு கடற்கரையில் உள்ள சிலிகான்வேலி, ஆகியவற்றுடன் வாஷிங்டன்னில் உள்ள பழைய வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கை அனைத்தும் டிரம்ப்பின் அமெரிக்காவின் முதல் நோக்கத்தை எதிர்க்கின்றன.
எனினும், டிர்ம்பின் செய்தி அமெரிக்காவில் உள்ள அரசியல் பிரிவுகள் முழுவதும் எதிரொலிக்கிறது. ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர்களில் பெரும்பாலானோர், மத்திய கிழக்கு நாடுகளில் முடிவற்றை போரை நடத்தும் அமெரிக்காவின் நிலையை முடிவுக்கு கொண்டு வரும் டிரம்ப்பின் இலக்கை ஏற்றுக் கொள்கின்றனர். பாரம்பர்யமாக ஜனநாயகட்சியை ஆதரிக்கும் பல்வேறு தொழிலாளர் வர்க்கத்தினர், டிரம்ப் சரியாக செயல்படுவதாக நம்புகின்றனர். தடையற்ற வர்த்தகம் அமெரிக்க தொழில்துறையை ஓட்டையை ஏற்படுத்தி உற்பத்தி தொடர்பான வேலையை இல்லாமல் செய்து விட்டது என்று வாதிடுகின்றனர்.
எளிமையாகச் சொல்வதானால், அமெரிக்கா மாறும் புள்ளியைக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் ஆழமான மாற்றங்கள் வெளிப்படுவதுடன், இந்தியா கால எல்லைக்குள் வர வேண்டிய தேவை இருக்கிறது. இதர நாடுகளின் உறவுகளில் அதீதமாக அமெரிக்கா தலையிடுகிறது என இந்தியாவின் அரசியல் வகுப்பினர் கடுமையாக கண்டிக்கின்றனர். இதுபோன்ற தலையீடுகள் இப்போது எதிர்மறையாக இருக்கின்றன என்று டிரம்ப் இப்போது கூறுகிறார். அனைத்து நாடுகளும் தங்களின் இறையாண்மையை வலுப்படுத்த வேண்டும் என்கிறார். பிறர் மீது உலகமயமாதலை அமெரிக்கா அமல்படுத்துகிறது என்று இந்தியர்கள் விமர்சனங்கள் செய்கின்றனர். உலகமயமாதலின் மிகப்பெரிய விமர்சகராக இப்போது அமெரிக்க அதிபர் இருக்கிறார். நமக்குத் தெரி்ந்த ஒன்றாக டிரம்ப்பின் அமெரிக்கா இல்லை.
பனிப்போரின் போது , அமெரிக்காவின் உள்நாட்டு அரசியலை தெரிந்து கொள்வது டெல்லிக்கு பிரச்னைக்கு உரியதாக இருந்தது. அமெரிக்காவுடன் இணைந்திருப்பதில் வரையறுக்கப்பட்ட தன்மையை கொண்டிருந்தது. பெரும்பாலும் வெளியுறவத்துறையில் கவனம் செலுத்தியது. கடந்த இருபது ஆண்டுகளாகத்தான், இந்தியா அமெரிக்காவுடனான உறவை விரிவு படுத்தி இருக்கிறது. அமெரிக்காவின் உள்நாட்டு அரசியல் பன்முகத்தன்மையில் மேலும் உணர்வுதிறன் கொண்டதாக டெல்லி மாறியிருக்கிறது. காஷ்மீர் மற்றும் அணுசக்தி பிரச்னைகளில் அமெரிக்காவின் அழுத்தத்தை குறைப்பதில் வெளியுறவு கொள்கை அமைப்புகளுக்கு அப்பால் டெல்லி பார்க்கிறது. இந்தியாவின் கவலைகள் ஆர்வங்களில் அமெரிக்காவிடம் நல்ல பாராட்டுதல்களை உருவாக்க விரும்புகிறது.
எம்.எஸ்.கோல்வால்கரின் வாழ்க்கையை மீண்டும் வாழ்ந்தால்தான் அவரின் ஆற்றல் நமக்கு புரியும்
பயனுள்ள வகையில் கையாளும் வகையில் இந்திய புலம்பெயர்ந்தோரை அணிதிரட்டும் செயல், ராஜிவ் காந்தி பிரதமராக இருந்த காலகட்டத்தில் தொடங்கியது. 1990-களின் பிற்பகுதியில் அவர்களை கையாண்ட வேகமானது, 21-ம் நூற்றாண்டில் இருதரப்பு உறவை மேம்படுத்துவதற்கான முக்கிய காரணியாக உருவெடுத்தது. எனினும் வரும் திங்கள் கிழமையன்று இந்தியா வரும் ட்ரம்ப் வருகைக்கான ஏற்பாடுகளில் இருக்கும் டெல்லி, அமெரிக்காவின் கொள்கைகள் குறித்த ஊகங்களை கைவிட வேண்டிய தேவை இருக்கிறது. புலம்பெயர்ந்தவர்கள் முக்கியமாக இருக்கும் நிலையில், டிரம்ப் உடன் ஒப்பந்த த்தில் கொஞ்சமேனும் முக்கியத்துவம் இருக்க வேண்டும். அமெரிக்க அரசியலுக்கு உயிரூட்டும் ஆழமான சக்திகளை அது மீறக்கூடாது.
டிரம்ப், உள்ளூர் ஒற்றுமையில் போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் கையாளப்பட்ட வெளியுறவுக் கொள்கையை தீவிரமாக தூக்கி எறிந்தார். அமெரிக்காவின் உள்ளூர் அரசியல் கொந்தளிப்பில் பயணித்து, வெள்ளை மாளிகையை கைப்பற்றினார். வாஷிங்டனில் நிறுவப்பட்ட கொள்கைக்கும் அதே போல உலகம் முழுவதும் உள்ள இதர நாடுகளுக்கும் இது முற்றிலும் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் இருந்தது. செல்வாக்கற்ற போர்களை முடிவுக்கு கொண்டு வருவதாக அவர் பந்தயம் கட்டுகிறார். இந்த ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக முக்கியமான வர்த்தக பங்குதாரர்களுடனான வணிக உறவை மறு பரிசீலனை செய்கிறார். குடிபெயர்வை கட்டுப்படுத்துகிறார்.
டிரம்ப் உடனான டெல்லியின் வெற்றி என்பது அகமதாபாத்தில் வரவேற்கப்படும் அளவைப்பொறுத்துள்ளது. வர்த்தக உறவில் காண்பிக்கக் கூடிய திறன் வாய்ந்த கற்பனை மேலும் தாராளமாக இருக்க வேண்டும். அமெரிக்கா விலகிய பிறகு ஆப்கானிஸ்தானை பெறுவது, வளைகுடாவை வலுப்படுத்துதல், உள்நாட்டு அரசியல் கருத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் புலம்பெயர்வு குறித்த புதிய உலகளாவிய உடன்படிக்கையை உருவாக்குதல், கூட்டுப் பொருளாதார வளர்ச்சிக்கு இன்னும் பங்களித்தல் இருக்க வேண்டும்.
இந்த கட்டுரை முதலில் “When Yankee goes home” என்ற தலைப்பில் பிப்ரவரி 18-ம் தேதி நாளிதழில் வெளியானது. கட்டுரையின் எழுத்தாளர், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் தெற்கு ஆசிய ஆய்வுகள் மையத்தின் இயக்குநராக இருக்கிறார். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் சர்வதேச விவகாரங்கள் பங்களிப்பு ஆசிரியராக இருக்கிறார்.
தமிழில் : பாலசுப்பிரமணி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.