Advertisment

உமர் அப்துல்லா, மெகபூபா முப்தியை பொது பாதுகாப்பு சட்டத்தின் மூலம் நடுங்க வைத்த அரசு

நரேந்திர மோடி ஆட்சியில் அவரது அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தீவிரவாதிகள் குறித்து விமர்சிக்கும்போது வன்முறைக்கு அழைக்கும் வகையில் கூறும் கடுமையான கருத்துக்களை அவர் கண்டுகொள்வதில்லை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
உமர் அப்துல்லா, மெகபூபா முப்தியை பொது பாதுகாப்பு சட்டத்தின் மூலம் நடுங்க வைத்த அரசு

Radha Kumar

Advertisment

அப்துல்லாவுக்கும், முப்திக்கும் எதிரான பொது பாதுகாப்பு சட்டத்தில், இருவருக்கும் இடையே முற்றிலும் மாறுபாடு உள்ளது. அது ஒருபுறம் இருந்தாலும், நரேந்திர மோடி ஆட்சியில் அவரது அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தீவிரவாதிகள் குறித்து விமர்சிக்கும்போது வன்முறைக்கு அழைக்கும் வகையில் கூறும் கடுமையான கருத்துக்களை அவர் கண்டுகொள்வதில்லை.

'கமிட்டட்'கள் மிஸ் பண்ணாம பாக்க வேண்டிய 10 தமிழ் படங்கள்!

கடந்த வாரம் ஜம்மு காஷ்மீரின் கடுமையான சட்டமான பொது பாதுகாப்பு சட்டம் மேலும் இரண்டு முன்னாள் முதலமைச்சர்கள் உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி ஆகியோர் மீது போடப்பட்டுள்ளது. மாநிலத்தின் மற்ற அரசியல் தலைவர்கள் 6 பேர் மீது இச்சட்டம் போடப்பட்டுள்ளது.

இந்து – முஸ்லீம் நல்லுறவை வளர்ப்பதற்கு காந்தியின் கடைசி தியாகம் அவரது அகால மரணம்

அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களாக ஊடகங்களில் வெளிவரும் செய்திகள் மிக அபத்தமாக உள்ளன. அதிலும் முப்தி மீதான குற்றச்சாட்டு மிகவும் கீழ்த்தரமாக உள்ளது. உமர் அப்துல்லா மற்றும் அலி முகம்மது சாகர் ஆகியோர், தீவிரவாதம் உச்சத்தில் இருந்தபோதும், மக்களை ஓட்டுபோடுவதற்கு அழைத்து வர முடிந்ததும், 370வது சட்டப்பிரிவை ரத்து செய்ததை எதிர்த்து போராட வலு உள்ளதும் அவர்கள் மீதான குற்றச்சாட்டு. முப்தியை தந்தையின் பெண் என்றும், கோட்டா ராணி என்றும் அழைக்கப்படுகிறார். 2011ம் ஆண்டில் நமது குழுவினர் பொது பாதுகாப்பு சட்டத்தை நீக்க வேண்டும் அல்லது திருத்த வேண்டும் என்று அறிவுறுத்தினர். இச்சட்டத்தின் வலிமை தவறாக பயன்படுத்துவதற்கு வழிவகுக்கும் வகையில் உள்ளது.

பொது பாதுகாப்பு சட்டத்தின், நான்காவது அத்தியாயத்தில், (சிலரை வீட்டுக்காவலில் தடுத்து வைக்கும் அதிகாரம்) எட்டாவது பிரிவு தடுப்புக்காவலில் வைப்பதற்கு நிறைய காரணங்களை கூறுகிறது. மதம் தொடர்பான பகை அல்லது வெறுப்பு அல்லது விரோதம் ஆகிய உணர்வுகளை தூண்டுதல், ஊக்குவித்தல், பிரச்சாரம் செய்தல் அல்லது இனம், சாதி, சமுதாயம் அல்லது பிரதேசம் ஆகிய உணர்வுகளை தூண்டுதல், அதுபோன்ற செயல்களுக்கு உடந்தையாக இருப்பது ஆகியவற்றை காரணமாக கூறுகிறது. இச்சட்டத்தின் விசாரணையை மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட நீதிபதிகள் விசாரித்து 12 நாளில் ஆலோசனைக்குழு தடுப்புக்காவலை உறுதி செய்ய வேண்டும். பொது பாதுகாப்பு சட்டத்தில் குற்றம் பெரியது, சிறியது என்ற பாகுபாடு கிடையாது. பொது பாதுகாப்புக்கு இடையூறு ஏற்படுத்தினால் ஓராண்டு வரையிலும், மாநிலத்தின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலான நடவடிக்கைகளுக்கு இரண்டாண்டு வரையிலும் தடுப்புகாவலில் வைக்கப்படும். தடுப்புக்காவல் காலம் ஒரு வாரம் முதல் ஒரு மாதம் வரையிலும் இருக்கலாம். மிக நீண்ட நாட்கள் இருக்கக்கூடாது என்று வாதிட்டுள்ளோம். மாநிலத்தின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலான குற்றங்களை பயங்கரமான குற்றங்களாக கருதி, மூன்று மாதங்கள் வரை தடுப்புக்காவலில் வைக்கலாம். பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறார்கள் தண்டிக்கப்படககூடாது.

ஆங்கிலத்தில் இக்கட்டுரையை படிக்க

திருத்தி அமைக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் சட்டம் கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அது மாநிலத்தின் 150க்கும் மேற்பட்ட சட்டங்களை ரத்து செய்துவிட்டது. ஆனால், மிகக்கடுமையான பொது பாதுகாப்பு சட்டத்தை மட்டும் விட்டுவைத்துள்ளது. இது இந்திய சட்டங்களிலே மிகக்கடுமையான சட்டம். சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டமும் கடுமையான சட்டமாகும். மாநிலம் தற்போது யூனியன் பிரதேசமாகிவிட்ட நிலையில், இந்திய சட்டத்தில் இன்னும் ஏன் பொது பாதுகாப்பு சட்டம் இயற்றப்படவில்லை? தனது நிர்வாகத்தின் ஒருதலைபட்சமான நடவடிக்கையாக, நாடாளுமன்றத்தில் 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், அரசமைப்பு சட்டத்தின் 370வது பிரிவை நீக்கியதன் மூலம் ஜம்மு காஷ்மீரில் பொற்காலம் வரும் என்று பிரதமரும், அவரது அமைச்சர்களும் மீண்டும், மீண்டும் சத்தமாக கூறினார்கள். மாநிலத்திற்கு இந்திய அரசியலமைப்பின் கீழ் அனைத்து உரிமைகளும் கிடைக்கும் என்றார்கள். ஆறு மாதங்கங்கள் கடந்தும், தடுப்புக்காவல்கள், தொலைதொடர்பு சாதனங்கள் தடை, மாநிலத்தில் கோடிக்கணக்கான ரூபாய் பொருளாதார இழப்பு, மாநிலத்தின் பெரிய தலைவர்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக கூறி அவர்கள் மீது ஆதரமற்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்பது என்று பதற்றமான சூழலே உள்ளது.

இதையும் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர், 370வது சட்டப்பிரிவை நீக்கியது இந்தியாவில் இருந்து ஜம்மு காஷ்மீரை பிரிப்பதற்கு செய்யப்பட்ட ஒரு செயற்கை பூகம்பம் என்ற அப்துல்லாவின் கருத்தை ஒத்துக்கொள்கிறீர்களா என்று கேட்டதற்கு அதிகளவிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லை என்றது அவர்களுக்கு அசிங்கம் இல்லையா? ஒரு செயலுக்கான பின்விளைவுகளை நாம் கணிப்பது குற்றமல்ல. அது குற்றமாக கருதப்படுமெனில் இந்தியாவில் உள்ள அனைத்து ஜோதிடர்களையும் நாம் சிறையில்தான் தள்ள வேண்டும். நம் அரசியல்வாதியின் ஜோதிடர்களையும் சேர்த்துதான். இல்லை அது குற்றமாக கருதப்படுமா?

அப்துல்லாவுக்கும், முப்திக்கும் எதிரான பொதுபாதுகாப்பு சட்டத்தில், இருவருக்கும் இடையே முற்றிலும் மாறுபாடு உள்ளது. அது ஒருபுறம் இருந்தாலும், நரேந்திர மோடி ஆட்சியில் அவரது அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தீவிரவாதிகள் குறித்து விமர்சிக்கும்போது வன்முறைக்கு அழைக்கும் வகையில் கூறும் கடுமையான கருத்துக்களை அவர் கண்டுகொள்வதில்லை. இதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். ஜம்மு காஷ்மீரின் அரசியல் தலைவர்களை சந்தேகித்து, ஷேக் அப்துல்லா துவங்கி கைது செய்து வருகின்றனர். அதன் பிறகு முதலமைச்சரும் பொது பாதுக்காப்பு சட்டத்தை தவிர வேறு எதற்காகவும் காவலில் வைக்கப்படவில்லை.

இளம் வயதிலேயே செஸ் பயிற்சியில் இருந்து சிறுவர்கள் ஏன் வெளியேறுகிறார்கள்?

முதலமைச்சர் மற்றும் சட்டமன்றத்தில் உள்ளவர்களை தொடர்ந்து தடுப்பு காவலில் வைத்துள்ள கொடுமையை கண்டித்து நாடாளுமன்றத்திலும், நாட்டின் பிற பகுதிகளிலும் வெறும் அடையாள போராட்டங்களே நடைபெற்றது சோகமான ஒன்று. ஜம்மு காஷ்மீரைப்போல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள நீர்த்துப்போன சட்டங்களே தற்போது இந்தியா முழுவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. குடியுரிமை திருத்த சட்டம் குறித்து போராடும் மாணவர்கள் தேச துரோகிகளாகி பாவிக்கப்படுகிறார்கள். ஒரு நகைச்சுவை நடிகரை, தங்கள் விமானத்தில் செல்ல அனுமதிக்க பல்வேறு விமான நிறுவனங்கள் தடைவிதிக்கின்றன. குடியுரிமை திருத்த சட்டம் குறித்து, நாடகம் போட்டதற்காக பள்ளி மாணவியிடம் விசாரனை நடைபெறுகிறது. பள்ளி தலைமை ஆசிரியர் கைது செய்யப்படுகிறார். நம் நாட்டில் தினமும் நடைபெறும் ஒடுக்குமுறைக்கு இவை சில உதாரணங்களாகும்.

நமது தற்போதைய அரசு எந்தவிதமான எதிர்ப்பையும், அது வெறும் பரிந்துரையாக இருந்தால் கூட, அதை தண்டிக்க வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளது. எதிர்ப்பே எந்தவொரு ஜனநாயகத்தின் ரத்தமாகும். அதை நமது அரசியலமைப்பும், சட்டமும் நமக்கு உறுதிசெய்துள்ளன. (அதில் சட்டம் ஒரு சாரருக்காக செயல்படும் என்பது நகைப்பிற்குரிய ஒன்று) மோடி அரசு கொண்டுவந்துள்ள சட்டங்கள் குறித்து நாடாளுமன்றம் அரிதாகவே விவாதிக்கிறது. அதன் திருத்தம் குறித்து பேசுவதற்கு கூட எதிர்கட்சிகள் இணைவதில்லை. நீதிமன்றங்களும் பிரிக்கக்கட்டுள்ளன. கவுகாத்தி மற்றும் டெல்லி உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகள், எதிர்ப்பது நம் உரிமை என்பதை உறுதிசெய்கின்றனர். ஷாஹின் பாகில் நடந்த குழந்தையின் பரிதாப மரணம் முறையான பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டிருந்தால் தடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால், உச்ச நீதிமன்றமோ, குழந்தைகளை போராட்டம் நடைபெறும் இடங்களுக்கு அழைத்துவராமல் இருந்திருந்தால், இதுபோன்ற மரணங்களை தவிர்க்கலாம் என்பதை அறிவுறுத்துகிறது. ஜம்மு காஷ்மீரில் கவர்னரின் அதிகார துஷ்பிரயோகத்தை குடியரசுத் தலைவர் கவனித்திருக்கலாம். காந்தியின் கொள்கைகைளை நன்றாக அறிந்த அவர், தனது உரையில் குடியுரிமை திருத்தச்சட்டம், காந்தியின் கனவை நிறைவேற்றியது என்று கூறாமல் இருந்திருக்கலாம். தற்போதைய மோடியின் அரசு ஜம்மு காஷ்மீரில், எதிர்ப்பை தேசத்துரோகமாக காண்பிக்கிறது. அவரின் ஆதரவாளர்கள் நாடு முழுவதும் மக்கள் எதை எதிரித்தாலும் அதை தேசதுரோகமாக சித்தரிக்கிறார்கள். இந்த ஆட்சி இன்னும் நான்கு ஆண்டுகள் இருக்கும். அடுத்த தேர்தல் வரும்போது யாராவது துணிச்சலாக எதிர்க்க முடியுமா. ஜம்மு காஷ்மீரில் இருந்து இந்தியா முழுமைக்கும் இருள் பரவி வருகிறது.

தமிழில்: R. பிரியதர்சினி.

Jammu And Kashmir
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment