Advertisment

இந்து – முஸ்லீம் நல்லுறவை வளர்ப்பதற்கு காந்தியின் கடைசி தியாகம் அவரது அகால மரணம்

1908ம் ஆண்டு பிளாட்டோவின் டிபன்ஸ் மற்றும் சாக்ரடீசின் மரணம் ஆகிய புத்தகங்களால் ஆட்கொண்டிருந்த காந்தி அவற்றை இந்தியர்களுக்காக குஜராத்தி மொழியில் விளக்கி எழுதியிருந்தார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
mahatma gandhi

mahatma gandhi

வேள்வியின் பல்வேறு விளக்கங்களை காந்தி ஒத்துக்கொண்டிருந்தார். ஆனால், உண்மைகளுள் எல்லாம் ஒரே ஒரு அர்த்தம் ஏற்றுக்கொள்வதாக இருந்தது. அது நன்மை நடக்கும் எனில் வாழ்வையே துறக்க தயாராயிருங்கள் என்பதாகும்.

Advertisment

தனது இறுதி நாட்களை நெருங்கிக்கொண்டிருக்கிறோம் என்பதை மகாத்மா காந்தி உணர்ந்தே இருந்தார். அவரது முழு வாழ்க்கையையும் வாழ வேண்டும் என்பதில் நம்பிக்கையையோ அல்லது ஆசையையோ இழந்துவிட்டார். புது யுகத்தின் மனிதர்கள் அமைதியையும், நல்லுறவையும் வளர்த்திருந்தால், ஒருவேளை அவர் முழு வாழ்க்கையையும் வாழ்வதற்கு ஆசைப்பட்டு இருந்திருப்பார். இதை அவர் ஜனவரி 29ம் நாள் தனது தோழி மார்கரேட் புர்கே வொயிட்டிடம் தெரிவித்திருந்தார். அவர் சுடுப்படுவதற்கு முதல் நாள், சில மணி நேரங்களுக்கு முன்னர் வரை அவ்வாறு கூறிக்கொண்டு இருந்துள்ளார்.

இளம் வயதிலேயே செஸ் பயிற்சியில் இருந்து சிறுவர்கள் ஏன் வெளியேறுகிறார்கள்?

அவர் மரணம் குறித்து சிந்தித்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. சிக்கனம் ஒன்றையே நல்ல ஒழுக்கமாக காந்தி கருதினார். ஒரு கடிதம் எழுதினால், அதன் முகப்பு பக்கத்தைக் கூட பயன்படுத்தாமல் விடமாட்டார். மரணம் கூட யாருக்கேனும் பயன்பட வேண்டும் என எண்ணுவார். அதேபோல், அவரது மரணம் தியாகமாகவே அமைந்தது என்றுதான் நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். அவரது வாழ்க்கை வேள்வியில் அது கடைசி தியாகமானது. இதுகுறித்து அவரது சொந்த கருத்துக்கள் என்னவாக இருந்திருக்கும்? அவர் மரணம் குறித்து தென் ஆப்பிரிக்காவில் நடந்த குடிமை எதிரிப்பு போராட்ட காலத்திலேயே சிந்தித்திருக்க வேண்டும். இறப்பிற்கு பின்னதான மனதின் நிலை குறித்த கீதையின் கருத்துக்களும், சாக்ரடீசின் மரணம் என்ற புத்தகத்தின் கருத்துக்களும், இயேசு நாதருமே அவருக்கு வாழ்க்கையின் முடிவு குறித்த புரிதலை உருவாக்கியிருக்கலாம்.

அவரது வாழ்க்கைக்கு தேவையான நல்ல ஒழுக்கத்தை அவர் கீதையில் இருந்தே கற்றிருந்தார். வாழ்க்கை, மரணம் குறித்த அவரின் தத்துவங்கள் கீதையில் இருந்தே வந்தவை. மரணம் குறித்த பயத்தை விலக்குவதற்காகவே கீதை எழுதப்பட்டதாக அவர் நம்பினார். 1925ம் ஆண்டு கொல்கத்தாவில் சி.ஆர்.தாஸின் சாரதா நாளில் பேசியபோது, இந்த வசனத்தை குறிப்பிட்டார். எது இல்லாததோ அது எப்போதும் அறியப்பட்ட ஒன்றாக இருந்திருக்கும். எது இருக்கிறதோ அது எப்போதும் அறியப்படாத ஒன்றாக இருந்திருக்கும் இவ்விரு ரகசியங்களில்தான் உண்மை உள்ளது. (கீதை, 11, 16) இந்து மதம் உடலை மட்டுமே உடமையாகக்கொள்ளும். வேறெதையயும் சொத்தாக கருதாது என்றும் கூறினார்.

இக்கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க 

1904ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் உள்ள இந்தியர்களிடம், இயக்கத்தை வலுப்படுத்தும் வகையில் பேசும்போது, தியாகம் என்பதே வாழ்வின் சாரமாக இருக்க வேண்டும். அதை நாம் வாழ்க்கை முழுவதும் கடைபிடிக்க வேண்டும் என்று கூறினார். வியாபாரத்தில் குறிப்பிட்டுள்ளதுபோது, நாம் அதற்கான விலையின்றி எந்த விஷயத்தையும் செய்துகொள்ள முடியாது மற்றும் எந்தப்பொருளை வாங்கவும் முடியாது. அதை தியாகம் எனும் வார்தையாலும் கூறலாம். நாம் சார்ந்த சமூகத்தை பாதுகாக்க நாம் நிச்சயம் நம்மை தியாகம் செய்ய வேண்டும். இயேசு நாதர் கல்வாரியில் சிலுவையில் மரித்து, கிறிஸ்தவ மதத்தின் மகிமையை உலகுக்கு பறைசாற்றினார். மக்களுக்காக சிலுவையில் அறையப்பட்டதை அவர் பொறுத்துக்கொண்டார் என்று கூறினார். சிலுவையில் அறையப்பட்ட இயேசுநாதரின் சிலையை காந்தி எப்போதும் மனதில் தாங்கிக்கொண்டிருந்தார். ரோமில் உள்ள சிஸ்டைன் தேவாலயத்தில், இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட ஓவியத்தை பார்த்தபின், இயேசுநாதர் சிலுவையில் அடைந்த துயர் தனிமனிதரால் நிகழ்த்தப்பட்டது. என்று கூறினார்.

அரசியலமைப்பு சட்டம் எனும் கலங்கரை விளக்கம்

1908ம் ஆண்டு பிளாட்டோவின் டிபன்ஸ் மற்றும் சாக்ரடீசின் மரணம் ஆகிய புத்தகங்களால் ஆட்கொண்டிருந்த காந்தி அவற்றை இந்தியர்களுக்காக குஜராத்தி மொழியில் விளக்கி எழுதியிருந்தார். மரணத்தின் அர்த்தம் குறித்தும், நான் அதை எவ்வாறு பார்க்கிறேன் என்பது குறித்தும், நான் உங்களுக்கு விளக்க விரும்புகிறேன். எனக்கு நடந்தது நல்ல விஷயம், என்னை நம்புங்கள். மரணம் தீயது என்று எண்ணுபவர்கள் தவறாக புரிந்துகொண்டிருக்கிறார்கள்.

வேள்வியின் பல்வேறு விளக்கங்களை காந்தி ஒத்துக்கொண்டிருந்தார். ஆனால், உண்மைகளுள் எல்லாம் ஒரே ஒரு அர்த்தம் ஏற்றுக்கொள்வதாக இருந்தது. அது நன்மை நடக்கும் எனில் வாழ்வையே துறக்க தயாராயிருங்கள் என்பதாகும். வாழ்வு மரணத்தில் இருந்து வருகிறது. ஒரு விதை மண்ணுக்குள் சென்று தன்னையே அழித்துக்கொண்டால் தான் நல்ல விளைச்சலைகொடுக்கக் கூடிய மரமாக வளரும். அரிச்சந்திரன் பொய்யே பேசாத மனிதனாக இருப்பதற்காக சொல்லொண்ணா துயரங்களை அனபவித்தார். இயேசுநாதரோ தன் மக்களுக்காக முள் கிரீடம் சுமந்தார், கைகளிலும், கால்களிலும் ஆணி அடிக்க அனுமதித்தார். துயரங்களை தாங்கினார். பழங்காலத்தில் இருந்து இதுவே வேள்வியின் சாரமும் ஆகும். இதுபோன்ற வேள்விகள் இல்லாவிட்டால், உலகம் ஒருபோதும் வாழ்ந்திருக்காது. பிரிவினைக்கு பின் 1948ம் ஆண்டு அவர் மனதில் இருந்த வேள்வி, இந்து-முஸ்லீம் ஒற்றுமையை வளர்த்தெடுக்க வேண்டும் என்பதே அவரது கொள்கையாக இருந்தது. இந்த உலகை சமநிலையில் வைத்துக்கொள்வதற்காக நாம் மதிப்புமிக்கதாக கருதிய ஒன்றை கொடுப்பதே வேள்வியாகும். எனில், உயிரைவிட மதிப்புவாய்ந்த ஒன்று இந்த உலகில் ஏது? இது மேற்கத்திய தத்துவத்துக்கு இணையானது. பிரஞ்சு தத்துவமேதை பிரைஸ் பாரைன், மொழியும், பகுத்தறிவும் எப்போதும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. அதை தக்கவைக்க தனி ஒருவரின் மரணம் தேவைப்படுகிறது என்று சாக்ரட்சீன் மரணத்தை சுட்டிக்காட்டி தெரிவிக்கிறார்.

இக்கட்டுரையின் ஆசிரியர் டெல்லியை சேர்ந்த பத்திக்கையாளர்.

தமிழில்: R.பிரியதர்சினி.

Mahatma Gandhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment