What ails medical education in India : உக்ரைனில் ஏற்பட்டுள்ள நெருக்கடி மற்றும் அங்கிருந்து வெளியேறிய இந்திய மருத்துவ மாணவர்களுக்கு அதன் காரணமாக ஏற்பட்டுள்ள தேவை, இடஒதுக்கீடு தொடர்பான வழக்குகள் காரணமாக முதுகலை மருத்துவ கலந்தாய்வில் தாமதம் மற்றும் நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்டம் ஆகியவற்றின் காரணமாக இந்தியாவின் மருத்துவக் கல்வி முறை மிகவும் மோசமான வகையில் கவனத்தை ஈர்த்துள்ளது. மருத்துவக் கல்லூரியின் ஆசிரிய உறுப்பினராகவும், கடந்த பத்து ஆண்டுகளில் இந்தச் செயல்முறையை கடந்து வந்த என் மகள்களின் தந்தையாகவும், எனது நெருக்கமான கண்ணோட்டத்தின் அடிப்படையில் இந்த அமைப்புக்குள் என்ன நோய் பீடித்திருக்கிறது என்பதை பார்க்க விழைகின்றேன்.
ஷ்யா – உக்ரைன் யுத்தம்: தெற்காசிய நாடுகள் இந்த போரை எப்படி பார்க்கின்றன?
தேவைப்படும் மருத்துவர்கள் எண்ணிக்கைக்கும் - மருத்துவம் படிப்பவர்களின் எண்ணிக்கைக்கும் தொடர்பில்லாத நிலை, மக்கள்தொகை விகிதாச்சார அடிப்படையில் போதுமான மருத்துவ இடங்கள் இல்லை என்பது போன்ற சூழல் நிலவுகிறது. தனியார் கல்லூரிகளில், மருத்துவப் படிப்புக்கான இடங்களுக்கான கட்டணம் ஆண்டுக்கு ரூ. 15-30 லட்சம் (ஹாஸ்டல் செலவுகள் மற்றும் படிப்பு செலவுகள் உட்பட). கொண்டதாக இருக்கிறது. பெரும்பாலான இந்தியர்களால் இவ்வளவு தொகை செலவிட முடியாத நிலை இருக்கிறது. கல்வித்தரம் குறித்தும் யாரும் அளவிடாததால் அது குறித்து கருத்து தெரிவிப்பது கடினம். இருப்பினும், தனிப்பட்ட அனுபவத்திலிருந்து, தனியார்-அரசு மருத்துவக்கல்லூரிகள் என பாரபட்சமின்றி, பெரும்பாலான மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றுக்கு ஒன்று மாறுபாடாகவும், மோசமானவையாகவும் உள்ளன என்று என்னால் கூற முடியும்.
எம்பிபிஎஸ் பட்டம் பெறுவது என்பதானது, ஒரு கவர்ச்சிகரமான விருப்பத் தேர்வாகத் தொடர்கிறது. இருப்பினும், கடந்த காலத்தைப் போலல்லாமல், நடுத்தர வர்க்கத்தின் கணிசமான பிரிவினர், நல்ல லாபம் தரும் முதலீடு என்று இதனை நினைக்கவில்லை. சில எதிர்பார்ப்புகளுடன் மருத்துவத்துறையை மருத்துவத் தொழிலைத் தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் இரண்டு வகைகளாக உள்ளனர்: சமூக மற்றும் பொருளாதார இயக்கத்திற்கான பாதையாக இதைப் பார்ப்பவர்கள் முதல் வகையினராக உள்ளனர். குறிப்பாக தனியார் துறையில் பணியாற்றும் மருத்துவர்களின் குழந்தைகள், இத்தகையவர்களின் பெற்றோர் தங்கள் குழந்தைகள் தங்களின் மருத்துவ பாரம்பரியத்தைத் தொடர விரும்புகிறார்கள். இவர்கள் இரண்டாவது வகையினராக இருக்கின்றனர். முதல் வகையினர் அதிக மருத்துவ படிப்புக்கான கட்டணங்கள் குறித்து உணர்ந்திருக்கின்றனர். இரண்டாவது வகையினர் அதற்காக கவலைப்படுவதில்லை.
புதிய மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படும் என்ற அரசின் முயற்சியானது, மருத்துவ கல்வி பேராசிரியர்கள் வேலைக்கான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய மருத்துவக் கல்லூரியில் இருந்தே ஆசிரியர்களை புதியகல்லூரிகள் வேட்டையாடுகின்றன. குறைந்த அளவினர் தவிர, புதிதாகவே அங்கு பலர் வருகின்றனர். கல்வித் தரம் தொடர்ந்து தீவிரமான கவலைக்குரியதாகவே உள்ளது. (MCI)ஒரே நேரத்தில் இரண்டு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றுதல் மற்றும் முறைகேடு போன்ற முந்தைய ஓட்டைகள் பலவற்றை இந்திய மருத்துவ கவுன்சில் நிவர்த்தி செய்ய முயற்சித்தது. ஆசிரியர்களின் கல்வியில் ஒழுக்கமுறையை மேம்படுத்த பதவி உயர்வுகள் பெற ஆராய்ச்சி புத்தகங்கள் வெளியிட்டிருக்க வேண்டும் என்ற கட்டாய முறையை அறிமுகப்படுத்தியது. ஆனால் இது நம்பகத்தன்மையற்ற தரத்தோடு காளான்கள் போல வெளியீடுகள் அதிகரிக்கத் தொடங்கின. ஆசிரியர்கள், மருத்துவக் கல்லூரிகள் இந்த அமைப்பைக் கற்றுக்கொண்டு விளையாடுவார்கள் என்பதுதான் இதில் குறிப்பிடத்தக்க விஷயமாகும். பல மாநிலங்களில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் ஆசிரியர் சம்பளம் குறைவாக உள்ளது மற்றும் தனியாக மருத்துவ தொழிலில் ஈடுபடுவதும் பொதுவாக நடக்கிறது. இது கல்விச் சூழலை சீர்குலைக்கிறது.
மாணவர்களின் நலனை முழுமையாகப் புறக்கணிப்பதுதான் இந்தியாவில் மருத்துவக் கல்வி முறையின் மற்றொரு தனித்துவமான அம்சமாக இருக்கிறது. விண்ணப்பித்தவர்களில் முதலிடத்தில் உள்ள 0.25 சதவீதம் பேருக்கு மட்டுமே நல்ல அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கின்றது. பற்றாக்குறை காலங்களில், சமூக நீதி பின்னுக்குத் தள்ளப்படுகிறது. பெரும்பாலான பெற்றோர்கள் தனிப்பட்ட மருத்துவக் கல்லூரிகளின் நன்மை தீமைகளை எடைபோடுவதற்கு போதுமான திறன் கொண்டிருப்பது இல்லை. பேரம் பேசுவதற்கான கவுன்சிலிங் நடைமுறையானது என்னைப் போன்ற ஒருவருக்கு கூட மிகவும் சிக்கலானதாக இருக்கிறது. காலை 9 மணிக்கு கல்லூரிக்குச் சென்றுவிட்டு மறுநாள் காலை 5 மணிக்கு அங்கிருந்து புறப்படும் வகையிலான கோடைக்காலத்தில் எந்த ஏற்பாடும் அல்லது விருந்தோம்பலும் இல்லாத சூழலை கொண்டதாக எனது அனுபவம் இருந்தது. எனது மகளை அது போன்ற அனுபவத்துக்கு வருங்கால மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோருக்கு மரியாதை குறைவாக இருக்கக் கூடிய ஒரு நிறுவனத்திற்கு படிக்க அனுப்ப மாட்டேன் என்று சபதம் செய்தேன். அதிக கல்வி கட்டணங்கள் காரணமாக நிரப்பப்படாமல் இருக்கும் மருத்துவ கல்வி இடங்களை கைப்பற்றும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மற்றும் பிற பணக்கார இந்தியர்களுக்காகத்தான் இந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. தகுதியை வரையறுப்பதற்கு ஒரு கணக்கீட்டு முறையைப் பயன்படுத்தி இது வடிவமைக்கப்பட்டுள்ளது - சதவீதத்தால் அல்ல - இதனால் பணம் மற்றும் குறைந்த மதிப்பெண்கள் உள்ள மாணவர்கள் தகுதி பெற முடியும்.
உக்ரைன் போர்க்குற்றம்: ரஷ்ய அதிபர் புதினை விசாரணை செய்ய முடியுமா?
நீங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தினர் உங்களை மருத்துவராக்க பணத்தையும் உணர்ச்சியையும் முதலீடு செய்தும் அரசு மருத்துவக் கல்லூரிக்குத் தகுதிபெற போதுமான மதிப்பெண்கள் பெறவில்லை என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்? இதுபோன்ற சூழலில்பல மாணவர்கள் பல் மருத்துவ அறுவை சிகிச்சையில் இளங்கலைப் பட்டப்படிப்பில் சேர்ந்தனர். இதனால் தரம் குறைந்த காளான்கள் போல பல் மருத்துவக் கல்லூரிகள் உருவாகின. இந்தியாவில் தேவைக்கு அதிகமான பல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் உருவாக்கப்பட்டனர். இதையடுத்து, பல கல்லூரிகள் மூடப்பட்டன. ஒருவரால் கொடுக்க முடியும் என்ற ஒரு நாட்டில் எம்பிபிஎஸ் படிப்பதே ஒரே வழி
அதிக தேவை உள்ள சூழ்நிலையானது மாணவர்களுக்கு ஏற்றதாக இல்லாத அமைப்புடன் இணைந்து இடைத்தரகர்களின் நுழைவுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு பயிற்சி நிறுவனத்தில் பதிவு செய்தவுடன் அல்லது நீட் தேர்வு முடிவுகள் வெளிவந்தவுடன், நேபாளம், மொரிஷியஸ், உக்ரைன், ரஷ்யா, சீனா மற்றும் பல நாடுகளில் மருத்துவ கல்வி இடங்களை உறுதி செய்யும் ஏஜென்சிகள் சலுகைகளை உங்களுக்கு வாரிக் குவிகின்றன. பெற்றோர்கள் தங்கள் கடின உழைப்பில் சம்பாதித்த சேமிப்பை இந்த நாடுகளில் நல்ல வெற்றிகரமான சூழல் நிலவுவதாக சித்தரிக்கும் இடைத்தரகர்களின் வார்த்தைகளை நம்பி செலவழிக்கும் வகையில் தூண்டப்படுகிறார்கள். இதற்குப் பிறகும், இந்த மாணவர்கள் பெரும்பாலும் வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி தேர்வில் தேர்ச்சி பெறுவதில்லை - இதில் மாணவர்கள் தேர்ச்சி என்பது 15 சதவிகிதமாகத்தான் இருக்கிறது. பெற்றோரின் அழுத்தத்திற்கும் நட்பற்ற அமைப்புக்கும் இடையில் சிக்கி,மாணவர்கள் வேறு எங்கும் செல்ல முடியாது.
சுகாதாரத் துறையின் பெருநிறுவனமயமாக்கலின் தாக்கம் மற்றும் மருத்துவக் கல்வியில் நிபுணத்துவம் பெறுவதற்கான தேவை அதிகரித்து வருவதை நாம் புறம்தள்ள முடியாது. சுகாதாரத் துறையானது லாப நோக்கத்துடன் சேவைத் துறையாகக் கருதப்பட்டால், மருத்துவக் கல்வியானது வணிக மேலாளர்களைப் போன்று மனித வளங்களை வழங்குகிறது. உலகளாவிய தேவை மற்றும் தகவல் சமச்சீரற்ற தன்மை ஆகியவை சுகாதார சேவைகள் மற்றும் மருத்துவக் கல்வியில் சந்தை சக்திகளை விலக்குவதற்கான நிகழ்வை உருவாக்க அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் பல காரணங்களில் ஒன்றாகும்.
நிபுணத்துவத்திற்கான தேவை அதிகரித்து வருகிறது, மாணவர்கள் ஒவ்வொரு நிலையிலும் தங்கள் தகுதியை நிரூபிக்க வேண்டும் அல்லது அதிக பணத்தை செலுத்த வேண்டும், புதிதாக நுழைபவர்களுக்கு இந்த அமைப்பு கசப்பான ஒன்றாக மாறி வருகிறது. ஒரு பகுதி மாணவர்களிடையே எம்பிபிஎஸ் மீதான ஈர்ப்பு குறைவதையும் இது விளக்குகிறது.
எனவே, இந்த சூழலில் என்ன செய்ய வேண்டும்? தனியார்-பொது கூட்டாண்மை மாதிரியைப் பயன்படுத்தி மாவட்ட மருத்துவமனைகளை மருத்துவக் கல்லூரிகளாக மாற்றுவதன் மூலம் இடங்களின் எண்ணிக்கையை விரைவாக அதிகரிக்க வேண்டும் என்று பலர் முன்மொழிகின்றனர். நிதி ஆயோக் இந்த திசையில் நகர்வது போல் தெரிகிறது.
செயல்பாட்டு ஒழுங்குமுறை கட்டமைப்பு மற்றும் தனியார் துறை மற்றும் நாட்டின் தேவைகளுக்கு சேவை செய்யும் ஒரு நல்ல பொது-தனியார் மாதிரி அமைப்பு ஆகிய இரண்டு விஷயங்களை கருத்தில் கொள்ளாமல் இதை செயல்படுத்தினால் அது ஒரு ஆபத்தான யோசனையாகத்தான் இருக்கும்.
அரசியல்-தனியார் கூட்டு தொடர்பு காரணமாக இரண்டிலும் நாம் இதுவரை படுதோல்வி அடைந்துள்ளோம். கல்லூரிக் கட்டணத்தை ஒழுங்குபடுத்தும் தேசிய மருத்துவக் கவுன்சிலின் (என்எம்சி) சமீபத்திய முயற்சிகள் மருத்துவக் கல்லூரிகளால் எதிர்ப்புக்கு உள்ளாகி உள்ளன. தனியார் துறையிலும் கூட மருத்துவக் கல்விக்கு மானியம் வழங்குவது குறித்து அரசு தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் அல்லது பின்தங்கிய மாணவர்களுக்கு மருத்துவக் கல்விக்கு நிதியுதவி அளிக்க மாற்று வழிகள் குறித்து ஆராய வேண்டும். மருத்துவக் கல்லூரிகளின் தரத்தை மதிப்பீடு செய்வது தொடர்ந்து நடத்தப்பட வேண்டும், இந்த மதிப்பீடு அறிக்கைகள் பொது தளத்தில் கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும். தரக் கட்டுப்பாட்டு நடவடிக்கையாக மருத்துவ இளங்கலை படிப்பை முடிக்கும் அனைத்து பட்டதாரிகளுக்கும் பொதுவான வெளியேறும் தேர்வை தேசிய மருத்துவ கவுன்சில் முன்மொழிகிறது. இது மாணவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளது. தற்போதைய எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சிகள், மிகவும் வரவேற்கத்தக்கவை, வணிக ரீதியான நம்பகத்தன்மையுடன் தரம் மற்றும் சமூகத் தேவை ஆகியவற்றில் கவனம் செலுத்துவது குறித்து பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று நம்புகிறேன்.
இந்த கட்டுரை முதலில் அச்சுப் பதிப்பில் கடந்த 10ம் தேதியன்று 'After the evacuation' என்ற தலைப்பில் வெளியானது. கட்டுரையின் எழுத்தாளர் டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் சமூக மருத்துவத்திற்கான மையத்தின் பேராசிரியர் ஆவார். கட்டுரையின் கருத்துகள் அவரது தனிப்பட்ட கருத்துகளாகும்.
தமிழில் - ரமணி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.