Advertisment

பல ஆண்டுகள் கழித்து காவிரிக் கரையில் நீர் நாய்கள் - மகிழ்ச்சியில் முக்கொம்பு மக்கள்

மீன்களை விரும்பி உணவாக உண்ணுகின்ற நன்னீர் விலங்கான நீர் நாய்கள் ஒரு காலத்தில் காவிரிக் கரையோரம் அதிக அளவில் வாழ்ந்து வந்தன. செழிமையாக இருந்த காலகட்டத்தில் நீர் நிலைகளில் இருக்கும் மீன்களின் எண்ணிக்கையை குறைப்பதில் பெரும் பங்களிப்பை கொண்டு, உணவுச் சங்கிலியில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருந்தன இந்த நீர் நாய்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
otters, trichy, mukkombu, india, tamil nadu environment,

Smooth-Coated Otters : நம்முடைய குழந்தைப் பருங்களில் கண்ட வானிலையும், பருவமும், நம்முடைய சுற்றுச்சூழலும் தற்போது இல்லை. பல மரங்கள் வெட்டப்பட்டன. காடுகளின் பரப்பு குறைந்து போனது. உலக வெப்பமயமாதல் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு வேகமாக அதிகரித்து வருகிறது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு தேவையான கொள்கை ரீதியான மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்று தொடர்ந்து வாதிட்டு வருகின்றனர். இப்படியான சூழலில் ”அழிவு நிலையில்” இருக்கும் விலங்குகள், எப்போதோ பார்த்த விலங்குகள் மீண்டும் நம்முடைய பார்வைக்கு கிடைத்தால்? மனம் மகிழ்ச்சி அடைவதோடு அதனை இனிமேலாவது பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் வெளிப்படும்.

Advertisment

நீர்நிலைகளை அச்சுறுத்தும் விஷப்பாசிகள்… ஆரம்பத்திலேயே வளர்ச்சியை தடுக்க புது முயற்சி

காவிரி ஆற்றங்கரையோரம் நீர்நாய்கள் (Otters) மீண்டும் மக்களின் பார்வையில் பட்டிருப்பது ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது. ஞாயிற்றுக் கிழமை அன்று திருச்சி முக்கொம்பு அருகே, பட்டாம்பூச்சி பூங்காவிற்கு செல்லும் வழியில் 4 ஆண் நீர் நாய்கள், 3 பெண் நீர் நாய்கள் V வடிவில் நீருக்குள் சென்று மீன்களை வேட்டையாட காத்திருந்தன. ஆரம்பத்தில் காகங்கள் என்று நினைத்து அதனை கடக்க முயன்ற பிஷப் ஹெர்பர் கல்லூரி இயற்கை ஆய்வு குழுவினருக்கு ஆச்சரியம் அளித்தன நீர் நாய்கள்.

மீன்களை விரும்பி உணவாக உண்ணுகின்ற நன்னீர் விலங்கான நீர் நாய்கள் ஒரு காலத்தில் காவிரிக் கரையோரம் அதிக அளவில் வாழ்ந்து வந்தன. செழிமையாக இருந்த காலகட்டத்தில் நீர் நிலைகளில் இருக்கும் மீன்களின் எண்ணிக்கையை குறைப்பதில் பெரும் பங்களிப்பை கொண்டு, உணவுச் சங்கிலியில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருந்தன இந்த நீர் நாய்கள். ஆனால் நீர் நிலைகள் மாசடைதல், சுருங்குதல் மற்றும் மனித செயல்பாடுகளின் தாக்கத்தால் நீர் நாய்கள் எண்ணிக்கை குறைந்தது.

க்ளோனிங்கில் சாதித்த ஆராய்ச்சியாளர்கள்; இது டோலி உருவான கதை

சமீப காலங்களில் சுருங்கி வரும் காவிரி நீர்ப்படுகை மற்றும் நீர் வரத்து குறைவு காரணமாக இந்த விலங்குகளை காவிரி ஆற்றங்கரையோரம் காண்பது மிகவும் அரிதான நிகழ்வாக மாறியது. இந்த விலங்கின் தோலுக்காக வேட்டையாடப்படும் நிகழ்வுகளும் அதிகரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

அழிந்து வரும் நீர் நாய்கள்

நன்னீர் பகுதிகளில் சதுப்பு நிலங்கள், ஈர நிலங்கள், ஆறுகள், குளங்கள் மற்றும் நெல் வயல்களில் நீர் நாய்கள் அதிகமாக காணப்படுகிறன. உலகில் மொத்தமே 13 வகையான நீர் நாய்கள் மட்டுமே உள்ளது. அதில் இந்தியாவில் மூன்று வகையான நீர் நாய்கள் காணப்படுகிறது. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் சிவப்பு பட்டியலில் அழிய வாய்ப்புள்ள விலங்குகளாக (Vulnerable Species) வகைப்படுத்தப்பட்டுள்ளது.

மன்னார் வளைகுடாவில் இந்தியாவின் முதல் கடற்பசு பாதுகாப்பகம் – அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

ஸ்மூத் கோட்டட் ஓட்டர் (Smooth-Coated Otters), யூராசியன் ஓட்டர் (Eurasian), மற்றும் ஸ்மால் கால்வ்ட் ஓட்டர் (Small Calwed Otter) போன்ற வகைகள் இந்தியாவில் காணப்படுகின்றன.

இந்தியாவில் மொத்தமாக எத்தனை நீர்நாய்கள் உள்ளன, எங்கே அதிக அளவில் வாழ்கின்றன என்பது தொடர்பாக எந்த விதமான ஆவணங்களும் பதிவு செய்யப்படாத நிலையில், நீர் நாய்களை பாதுகாக்கவும், இந்த விலங்குகள் குறித்து போதுமான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்றும் இயற்கை ஆர்வலர்கள் வேண்டுகோள் வைக்கின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Wildlife
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment