IPL 2020: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) மற்றும் விவோ மொபைல் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகியவை 2020 ஆம் ஆண்டில் இந்தியன் பிரீமியர் லீக்கிற்கான (ஐ.பி.எல்) பார்ட்னர்ஷிப்பை ரத்து செய்ய அதிகாரப்பூர்வமாக முடிவு செய்துள்ளதாக ஐ.பி.எல் ஊடக ஆலோசகர் ஒருவர்தெரிவித்துளளார்.
2020 ஐபிஎல் ,செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை விளையாடப்படும் என்று ஐபிஎல் ஆட்சி மன்றக் குழு உறுதிப்படுத்தியது.
சீனாவை தளமாகக் கொண்ட விவோ எனும் தொலைபேசி பிராண்டானது, ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை 2018 ஆம் ஆண்டில் ரூ.2,199 கோடிக்கு ஐந்தாண்டு ஒப்பந்தத்தில் வாங்கியது.
“நாங்கள் (பி.சி.சி.ஐ மற்றும் விவோ) ஆட்சி மன்றக் குழு கூட்டத்திற்குப் பிறகு அமர்ந்து, ஒரு வருட தடைக்கு ஒப்புக் கொண்டோம். 2023 க்குப் பிறகு அவர்களின் ஒப்பந்தத்தை ஒரு வருடம் நீட்டிக்க முடியுமா என்பதையும் நாங்கள் பார்ப்போம். இந்த பிரச்சினை இணக்கமாக தீர்க்கப்படும் ”என்று ஆகஸ்ட் 2 ம் தேதி ஐபிஎல் ஆட்சி மன்றக் குழு கூட்டத்திற்குப் பிறகு பிசிசிஐ அதிகாரி ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்திருந்தார்.
“ஜெய் ஸ்ரீ ராம்” – பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ‘சர்பிரைஸ்’ ட்வீட்
ஐபிஎல் கவுன்சில் உறுப்பினர் ஒருவரும் இத்தகவலை உறுதிப்படுத்தி, "நாங்கள் ஒரு புதிய ஆர்.எஃப்.பி (முன்மொழிவுக்கான கோரிக்கை) வெளியிடுவோம். செயல்முறை மிகவும் வெளிப்படையானதாக இருக்கும்" என்று கூறினார்.
கோவிட் -19க்கு மத்தியில், இவ்வளவு குறுகிய காலத்தில் ஒரு புதிய ஸ்பான்சரைப் பெறுவதற்கான சாத்தியக்கூறு குறித்து, மற்றொரு சபை உறுப்பினர் கூறுகையில், "ஐபிஎல் என்பது விளையாட்டின் மிக பிரபலமான தயாரிப்பு. மேலும், தொற்றுநோய் காரணமாக, மக்கள் வீட்டிலேயே தங்கியிருக்கிறார்கள், அதாவது, டிவி மூலம் அதிக பார்வையாளர்கள் கிடைப்பார்கள்".
"எனவே, நாம் இந்த விஷயத்தை சரியாக கையாண்டால், நாம் ஸ்பான்சர்கள் பெறுவோம். ஏற்கனவே, அவர்கள் (மூத்த குழு அதிகாரிகள்) ஓரிரு நபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்" என்று அவர் கூறினார்.
இந்த ஆண்டு ஐபில் தொடர், சீன நிறுவனத்தின் ஸ்பான்சருடன் நடைபெறும் என்று ஐபிஎல் ஆட்சி மன்றக் குழு கூறிய பின்னர், பிசிசிஐ, அரசியல் தலைவர்கள், அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்களின் விமர்சனங்களை எதிர்கொண்டது.
அநியாயத்துக்கு நல்ல கேப்டனாக ரோஹித் ஷர்மா – வேற லெவல் ஸ்பீச்
தேசிய மாநாட்டின் (என்.சி) தலைவர் ஒமர் அப்துல்லா முதன் முதலாக தனது எதிர்ப்புக் குரலை பதிவு செய்தார். "சீன செல்போன் நிறுவனம் ஐபிஎல்லின் டைட்டில் ஸ்பான்சராக தொடருவார்கள். அதே நேரத்தில் மக்கள் சீன தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டும் என்று கூறுவார்கள்" என்றார்.
விவோ நிறுவனம் தவிர்த்து, நடுவர் பார்ட்னராக பேடிஎம் எனும் நிறுவனமே நீடிக்கிறது. இது சீன ஆன்லைன் சில்லறை விற்பனையாளர் அலிபாபாவிடம் முதலீடுகளைக் கொண்டுள்ளது. மற்ற ஸ்பான்சர்களில் online fantasy league partner Dream 11 மற்றும் உணவு விநியோக சேவை ஸ்விக்கி ஆகியவை அடங்கும் - இவை இரண்டும் சீன நிறுவனமான டென்செண்டுடன் இணைப்புகளைக் கொண்டுள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.