2019 உலகக் கோப்பைத் தொடரில், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், இந்தியா ரன் சேஸிங் செய்த போது, ஆட்டத்தை வெற்றிகரமாக கொண்டுச் செல்லும் எந்த நோக்கமும் தோனியிடம் இருந்ததாக தெரியவில்லை என்று பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
ஸ்டோக்ஸ் வெளியிட்டுள்ள 'On Fire' எனும் புத்தகத்தில் இத்தகவலை அவர் குறிப்பிட்டுள்ளார்.
11 ஓவர்களில் 112 ரன்கள் தேவை எனும் நிலையில் தோனி உள்ளே வந்தார். வந்து சிக்ஸர்கள் அடிப்பதை விட சிங்கிள் எடுப்பதையே நோக்கமாகக் கொண்டிருந்தார்.
கங்குலி - டிராவிட் '318' : உலக சாம்பியனை கண்ணீர் விட வைத்த பார்ட்னர்ஷிப் (வீடியோ)
தோனியிடமிருந்தோ, அவரது பார்ட்னர் கேதர் ஜாதவ்விடம் இருந்தோ, போட்டியை வெற்றிகரமாக முடிப்பது தொடர்பாக எந்த நோக்கமும் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை, வெற்றி இன்னும் சாத்தியமாக இருக்கும்போது, நீங்கள் அடித்து நொறுக்க வேண்டும்.
எங்கள் முகாமில் தோனியின் விளையாடும் முறை எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கிறது என்று ஒரு கோட்பாடு உள்ளது. இந்தியா ஆட்டத்தை வெல்ல முடியாவிட்டாலும், இந்தியாவின் ரன் விகிதம் ஒப்பீட்டளவில் ஆரோக்கியமாக இருப்பதை உறுதிசெய்ய அவர் அதை இறுதிவரை நேரம் எடுத்துக்கொள்கிறார்.
இறுதி ஓவரில் வரை களத்தில் நிற்பதன் மூலம், ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் வாய்ப்பை அவர் தனக்கு தானே வழங்குகிறார். ஆனால் அவர் பொதுவாக ஒரு தோல்வி பெறும் நேரத்தில் கூட ஒரு இலக்கை அடைய முடிந்தவரை களத்தில் நிற்கவே விரும்புகிறார்."
உண்மையில், இங்கிலாந்தின் பந்து வீச்சாளர்களான கிறிஸ் வோக்ஸ் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோர் கட்டுக்கோப்பாக பந்துவீசி ரோஹித் மற்றும் கோலி ஆகியோரை 138 ரன்கள் எடுத்த நிலையிலும், கிட்டத்தட்ட 27 ஓவர்கள் பயன்படுத்த வைத்தனர்.
"ரோஹித் சர்மா மற்றும் விராட் கோஹ்லி விளையாடிய விதம் மர்மமானதாக இருந்தது. இந்த காலகட்டத்தில் நாங்கள் அற்புதமாக பந்து வீசினோம் என்பது எனக்குத் தெரியும், ஆனால் அவர்கள் பேட்டிங் சென்ற விதம் வினோதமாகத் தெரிந்தது.
எங்கள் அணிக்கு எந்தவொரு அழுத்தத்தையும் திருப்பித் தர அவர்கள் விரும்பவில்லை.
கோலி vs ஸ்மித்! பெட்டர் பேட்ஸ்மேன் யார்? - தண்ணீர் குடித்து தடுமாறி பதில் சொன்ன பிரட் லீ
அதேபோல், போட்டி முடிந்த பிறகு, ஷார்ட் பவுண்டரி தொலைவு குறித்து கோலி எழுப்பிய விஷயம் வினோதமானது. இப்படியொரு பயங்கரமான புகாரை இதுவரை நான் பார்த்ததில்லை. நீங்கள் அளித்த புகாரிலேயே மிக மோசமான புகார் என்றால் இதுதான்.
இரு அணிகளும் அங்கே பேட் செய்ய வேண்டும், அதே எண்ணிக்கையிலான பந்துகளை சந்திக்க வேண்டும். எனவே விளையாடும் பகுதியின் எல்லைகள் ஒரு அணிக்கு மோசமானதாகவும் மற்றொன்றுக்கு நன்மையாகவும் எவ்வாறு இருக்க முடியும்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஸ்டோக்ஸ் அண்ணன், மனசுல உள்ளதை எல்லாம் கொட்டி எழுதி இருக்காப்ள...
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.