IPL 2020: "அது எப்படியா ஒவ்வொரு தடவையும், சிஎஸ்கே செமிஃபைனல் வரைக்கும் போயிடுது!!? என்னமோ நடக்குதுய்யா.... இல்லனா இதுக்கு சான்ஸே இல்ல" என்று 2017 வரை சொல்லிக் கொண்டு இருந்த அன்பர்களுக்கு, இரண்டு ஆண்டு தடை காலத்திற்கு பிறகு மீண்டும் களமிறங்கிய சிஎஸ்கே கப் அடிச்சதும் கப்சிப் ஆனார்கள்.
வெறித்தன ஆட்டத்தை ஆரம்பித்த ஹர்திக் பாண்டியா: 39 பந்துகளில் 105 ரன்கள்
கடந்த சீசனில் இறுதிப் போட்டி வரை வந்து, இறுதி பந்தில் கோப்பையை மிஸ் செய்தது சிஎஸ்கே. இப்படியாக, ஒவ்வொரு ஆண்டு தனது ஆகப்பெரும் பலத்தை நிரூபித்து செம்மட்டி அடி கொடுத்து வரும் சிஎஸ்கே, இந்த சீசனுக்காக தனது வெடியை பற்ற வைத்திருக்கிறது. நன்றாக காய்ந்த திரியில் பற்ற வைக்கப்பட்டிருக்கும் வெடி, நடப்பு சீசனில் கபளீகரம் செய்யும் என்று நம்பலாம்.
ஆனால், தவறாமல் சிஎஸ்கே அரையிறுதிப் போட்டி வரை முன்னேறுவதற்கு என்ன காரணம் என்று கேட்பவர்களுக்கு, இந்த வீடியோ தான் பதில்,
The Super Grind Begins for the #SummerOf20! #WhistlePodu ???????? pic.twitter.com/L8cUsbvcEt
— Chennai Super Kings (@ChennaiIPL) March 3, 2020
சிஎஸ்கே வெளியிட்டிருக்கும் இந்த வீடியோவில், சக வீரர்களுக்கு பேட்டின் டிப்ஸ், பவுலிங் டிப்ஸ் வழங்கும் தோனி, அவர்களை ஆட விட்டு அம்பயரிங் செய்வது குறிப்பிடத்தக்கது. பொதுவாக, ஷிஃப்ட் படி தான் வீரர்கள் களத்திற்கு வருவார்கள். பயிற்சிக்கான டைமிங் முடிந்தவுடன் அறைக்கு திரும்பி விடுவார்கள். ஆனால், தோனியைப் பொறுத்தவரை பயிற்சியின் போது அவரது ட்ரீட்மென்டே வேறு மாதிரி இருக்கும் என்கின்றனர் விவரம் அறிந்தோர்.
"எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை.. லாலலா.." - தல தோனியை பாசத்துடன் வரவேற்ற ரெய்னா (வீடியோ)
தோனி தன் மனதில் கணக்கு போட்டு வைத்திருக்கும் வீரரை அழைத்து, அவர் பவுலராக இருக்கும் பட்சத்தில், தான் காம்ப்ரமைஸ் ஆகும் வரை அந்த பவுலரை வெவ்வேறு வேரியேஷன்களில் பவுலிங் போடச் சொல்லி, குறிப்பிட்ட அணிகளுக்கு எதிராக விளையாடும் போது, பந்தை எங்கு பிட்ச் செய்ய வேண்டும் என்பது வரை சொல்லி விடுவாராம். அந்த பவுலர் அதை அச்சீவ் செய்து, தோனியை திருப்திப்படுத்தாத வரை, அந்த நெட் செஷன் ஓயாதாம். ஆனால், இங்கு பிளஸ் என்னவெனில், தோனியின் மைன்ட் செட்டை புரிந்து கொள்ளும் வீரர்கள், அவர் கேட்பதை பெரும்பாலும் செய்து கொடுத்துவிடுவார்கள் என்று கூறப்படுகிறது.
தோனி & கோ-வின் ஆல் டைம் செமி ஃபைனல் ரீச்சுக்கு இதுமட்டும் காரணமல்ல; ஆனால் இதுவும் ஒரு காரணம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.