தல தோனி எடுத்த எத்தனையோ அவதாரங்களில், பலருக்கும் தெரியாத மிக அரிதான அவதாரம் ஓப்பனிங் பேட்ஸ்மேன் அவதாரம்.
என்னது தோனி ஓப்பனாரா? ஷாக் ஆகாதீங்க!
தோனியின் வரலாற்றில் ரெண்டே முறை தான் இந்த சம்பவம் அரங்கேறியது. அதாவது, தோனியின் கிரிக்கெட் வரலாற்றில் இரண்டு முறை அவர் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடியிருக்கிறார்.
மகனைக் கண்டதும் நெகிழ்ந்த விஸ்வநாதன் ஆனந்த் - 4 மாத கொடுமைக்கு முற்றுப்புள்ளி
ஒன்று வெஸ்ட் இன்டீஸுக்கு எதிராக.... மற்றொன்று இங்கிலாந்துக்கு எதிராக.
வெஸ்ட் இன்டீஸுக்கு எதிராக வேஸ்ட்டாகிப் போன தோனி, 2006ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக ஜாம்ஷெட்பூரில் நடந்த ஆறாவது ஒருநாள் போட்டியில், சேவாக்குடன் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கினார்.
சேவாக் வெறும் 4 ரன்னில் அவுட்டாகி வெளியேற, தோனி மட்டும் சரவெடியாய் வெடிக்கத் தொடங்கினார். 10 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 106 பந்துகளில் 96 ரன்கள் எடுத்து, அந்த போட்டியின் டாப் இந்திய ஸ்கோரராக கெத்து காட்டினார்.
ஆனால், மற்ற வீரர்களின் சொதப்பலினால் இந்தியா 223 ரன்கள் மட்டும் எடுக்க, இங்கிலாந்து 42.4வது ஓவரிலேயே 227/5 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது.
தோனியின் நேரமோ என்னமோ, அந்த போட்டி ஒரு நெகட்டிவ் ஷேடில் அமைய, அதன் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் ஓப்பனராக விளையாடவே இல்லை. அல்லது விளையாட வைக்கப்படவில்லை.
மர்மம்... மார்க்கெட்டிங்... மகேந்திர சிங் தோனி - ஸ்டோக்ஸ் புத்தகமும், பாகிஸ்தான் சலம்பலும்
பிறகு, தோனி கேப்டனான பிறகு, சேவாக் அதி பயங்கர ஃபார்முக்கு திரும்ப, கவுதம் கம்பீர் எனும் சிறந்த இடது கை பார்ட்னர் அணிக்கு கிடைக்க, சச்சின் இல்லாத போது, சேவாக் - கம்பீர் இணை அணிக்கு அபாரமாக ரன் வேட்டையாட, 'ஓப்பனர் தோனி' எனும் கனவை குழி தோண்டி புதைத்தார் 'கேப்டன் தோனி'.
ஆனால், இந்தியாவுக்கு அது நல்ல தலையழுத்தாக அமைந்தது. ஒரு தலைசிறந்த, உலகின் மற்ற வீரர்கள் வியக்கும் ஒரு மேட்ச் வின்னர், ஃபினிஷர் இந்தியாவுக்கு கிடைக்க காரணமாக அமைந்தது.
யார் கண்டா.... ஒருவேளை தொடர்ந்து ஓப்பனிங் விளையாடியிருந்தா சேவாகுக்கே டஃப் கொடுத்திருந்தாலும் கொடுத்திருக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.