Chennai Super Kings vs Gujarat Titans Qualifier 1 Highlights in tamil: 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த முதலாவது தகுதி சுற்றில் (குவாலிஃபயர் -1 ) நடப்பு சாம்பியயான குஜராத் டைட்டன்ஸ் – 4 முறை சாம்பியயான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின
Indian Premier League, 2023MA Chidambaram Stadium, Chennai 03 June 2023
Gujarat Titans 157 (20.0)
Chennai Super Kings 172/7 (20.0)
Match Ended ( Day – Qualifier 1 ) Chennai Super Kings beat Gujarat Titans by 15 runs
மிகவும் விறுவிறுப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீசுவதாக அறிவித்தார். அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. சென்னை அணிக்கு அதிரடி தொடக்கம் கொடுத்த ருதுராஜ் கெய்க்வாட – டெவோன் கான்வே ஜோடியில், ருதுராஜ் அரைசதம் அடித்து அசத்தினார். 44 பந்துகளில் 7 பவுண்டரிகள் 1 சிக்ஸர்களுடன் 60 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சிக்ஸர் மன்னன் துபே ஒரு ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
ஒரு சிக்ஸரை பறக்கவிட்ட ரஹானே 17 ரன்னில் ஆட்டமிழந்தார். சிறப்பான தொடக்கம் கிடைக்காமல் போராடிய தொடக்க வீரர் கான்வே 4 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியை தெறிக்கவிட்ட ராயுடு 17 ரன்னில் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து கேப்டன் தோனி களமிறங்கிய நிலையில், ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சத்திற்கே சென்றார். எனினும், அந்த உற்சாகம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. தோனி ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.
களத்தில் இருந்த மொயீன் அலி ஒரு சிக்ஸருடன் 9 ரன்களும், 2 பவுண்டரிகளுடன் ஜடேஜா 22 ரன்களும் எடுத்தனர். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு சென்னை அணி 172 ரன்கள் எடுத்தது. குஜராத் அணி தரப்பில், ஷமி மற்றும் மோகித் சர்மா தலா 2 விக்கெட்டுகளையும், நல்கண்டே, ரஷித் கான் மற்றும் நூர் அகமது தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
We hustle on & whistle on! 💪🥳#GTvCSK #WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/4oXD4C3Lrw
— Chennai Super Kings (@ChennaiIPL) May 23, 2023
தொடர்ந்து 173 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்தாலும், தொடக்க வீரர் விருத்திமான் சாஹா 12 ரன்னிலும், கேப்டன் ஹர்திக் பாண்டியா 8 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். சுழலில் மிரட்டி எடுத்த ஜடேஜா – தீக்ஷனா ஜோடி குஜராத் டாப் ஆடரை கலங்கடித்தனர். குறிப்பாக மில்லர் விக்கெட்டை ஜடேஜாவும், ராகுல் தெவாடியாவின் விக்கெட்டை தீக்ஷனாவும் க்ளீன் போல்ட் செய்து மிரட்டினார்.
— Chennai Super Kings (@ChennaiIPL) May 23, 2023
இதனிடையே, அவ்வப்போது பவுண்டரிகளை ஓடவிட்டு குடைச்சல் கொடுத்த ஷுப்மான் கில் தீபக் சாஹர் பந்தில் சிக்ஸர் விளாச முயன்று கான்வே கையில் கேட்ச் ஆனார். தசுன் ஷனகா – விஜய் சங்கர் சிறிது நேரம் ஜோடி அமைந்த நிலையில், மதீஷா பத்திரனா பந்தை விரட்ட முயன்று ருதுராஜ் வசம் கேட்ச் ஆனார். தசுன் ஷனகா ஜடேஜாவின் பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க முயற்சித்து தீக்ஷனா வசம் கேட்ச் ஆனார்.
இப்படியாக ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுபுறம் குஜராத் வீரர்கள் ரன்களை எடுத்துக்கொண்டே இருந்தனர். 18 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 138 ரன்கள் எடுக்க, அந்த அணியின் வெற்றிக்கு 12 பந்துகளில் 35 ரன்கள் மட்டுமே தேவைபட்டது. அந்த தருணத்தில் களத்தில் இருந்த ரஷித் கான் துஷார் தேஷ்பாண்டே 18.1வது பந்தை பவுண்டரி விரட்டினார். ஆட்டம் பரபரப்பை நோக்கி நகர, 3வது பந்தில் ரஷித் கான் விக்கெட்டை கைப்பற்றி மிரட்டினார். அதனால், எகிறி பரபரப்புக்கு கொஞ்சம் அடங்கியது.
கடைசி ஓவரில் குஜராத் 27 ரன்கள் தேவைபட்ட நிலையில், அந்த ஓவரை சிறப்பாக வீசிய பத்திரனா தனது கடைசி பந்தில் ஷமியின் விக்கெட்டை கைப்பற்றினார். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த குஜராத் டைட்டன்ஸ் அணி 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், சென்னை அணி குஜராத்தை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 10வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்து சாதனை படைத்தது.
Roaring our way into the big stage! 🦁#GTvCSK #WhistlePodu #Yellove 💛 pic.twitter.com/6Eb4a4n51w
— Chennai Super Kings (@ChennaiIPL) May 23, 2023
பந்துவீச்சில் மிரட்டி எடுத்த சென்னை அணியில் தீபக் சாஹர், பத்திரனா, மகேஷ் தீக்ஷனா மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளையும், துஷார் தேஷ்பாண்டே ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினார்.
சென்னை அணி அடுத்ததாக வருகிற ஞாயிற்று கிழமை அகமதாபாத்தில் நடக்கும் இறுதிப்போட்டியில் குவாலிஃபயர் -2ல் வெற்றியை ருசிக்கும் அணியுடன் மோதும். நாளை புதன்கிழமை (மே.24ம் தேதி) நடக்கும் எலிமினேட்டர் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியானது சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது.
Super 2️⃣sday in #Yellove! 🦁💛#GTvCSK #WhistlePodu pic.twitter.com/WHkDdSoEmn
— Chennai Super Kings (@ChennaiIPL) May 23, 2023
Anbuden ➡️ Ahmedabad with a million whistles! 🥳#GTvCSK #WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/Tyjhxd1Nsf
— Chennai Super Kings (@ChennaiIPL) May 23, 2023
Every frame is an emotion 💛pic.twitter.com/x0m4TfcaW6
— Chennai Super Kings (@ChennaiIPL) May 23, 2023
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதலாவது தகுதி சுற்றில் ஆட்டத்தில் 173 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், சென்னை அணி குஜராத்தை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 10வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதலாவது தகுதி சுற்றில் ஆட்டத்தில் 173 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் வெற்றிக்கு 6 பந்துகளில் 27 ரன்கள் தேவை.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதலாவது தகுதி சுற்றில் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 173 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வருகிறது. குஜராத் அணியில் விஜய் சங்கர் – ரஷித் கான் ஜோடி களத்தில் விளையாடி வருகின்றனர்.
17 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்துள்ளது.
குஜராத் அணியின் வெற்றிக்கு 18 பந்துகளில் 39 ரன்கள் தேவை.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதலாவது தகுதி சுற்றில் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 173 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வருகிறது. குஜராத் அணியில் விஜய் சங்கர் – ரஷித் கான் ஜோடி களத்தில் விளையாடி வருகின்றனர்.
16 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்துள்ளது.
குஜராத் அணியின் வெற்றிக்கு 24 பந்துகளில் 58 ரன்கள் தேவை.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதலாவது தகுதி சுற்றில் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 173 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வருகிறது. குஜராத் அணியில் விஜய் சங்கர் – ராகுல் தெவாடியா ஜோடி களத்தில் விளையாடி வருகின்றனர்.
15 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்துள்ளது.
குஜராத் அணியின் வெற்றிக்கு 30 பந்துகளில் 71 ரன்கள் தேவை.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதலாவது தகுதி சுற்றில் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 173 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வருகிறது. குஜராத் அணியில் விஜய் சங்கர் – ராகுல் தெவாடியா ஜோடி களத்தில் விளையாடி வருகின்றனர்.
14 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்துள்ளது.
குஜராத் அணியின் வெற்றிக்கு 36 பந்துகளில் 78 ரன்கள் தேவை.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதலாவது தகுதி சுற்றில் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 173 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வருகிறது. குஜராத் அணியின் அதிரடி தொடக்க வீரர் கில் 42 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதலாவது தகுதி சுற்றில் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 173 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வருகிறது. குஜராத் அணியின் டேவிட் மில்லர் 4 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதலாவது தகுதி சுற்றில் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 173 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வருகிறது. குஜராத் அணியில் ஷுப்மான் கில் – மில்லர் ஜோடி களத்தில் விளையாடி வருகின்றனர்.
12 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 84 ரன்கள் எடுத்துள்ளது.
குஜராத் அணியின் வெற்றிக்கு 48 பந்துகளில் 89 ரன்கள் தேவை.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதலாவது தகுதி சுற்றில் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 173 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வருகிறது. குஜராத் அணியில் ஷுப்மான் கில் – மில்லர் ஜோடி களத்தில் விளையாடி வருகின்றனர்.
11 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்துள்ளது.
குஜராத் அணியின் வெற்றிக்கு 54 பந்துகளில் 99 ரன்கள் தேவை.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதலாவது தகுதி சுற்றில் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 173 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வருகிறது. குஜராத் அணியின் தசுன் ஷனகா 17 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதலாவது தகுதி சுற்றில் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 173 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வருகிறது. குஜராத் அணியில் ஷுப்மான் கில் – தசுன் ஷனகா ஜோடி களத்தில் விளையாடி வருகின்றனர்.
9 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 2 விக்கெட்கள் இழப்புக்கு 59 ரன்கள் எடுத்துள்ளது.
குஜராத் அணியின் வெற்றிக்கு 66 பந்துகளில் 114 ரன்கள் தேவை.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதலாவது தகுதி சுற்றில் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 173 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வருகிறது. குஜராத் அணியில் ஷுப்மான் கில் – தசுன் ஷனகா ஜோடி களத்தில் விளையாடி வருகின்றனர்.
8 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 2 விக்கெட்கள் இழப்புக்கு 52 ரன்கள் எடுத்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதலாவது தகுதி சுற்றில் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 173 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வருகிறது. குஜராத் அணியில் ஷுப்மான் கில் – தசுன் ஷனகா ஜோடி களத்தில் விளையாடி வருகின்றனர்.
7 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 2 விக்கெட்கள் இழப்புக்கு 46 ரன்கள் எடுத்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதலாவது தகுதி சுற்றில் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 173 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வருகிறது. குஜராத் அணியில் ஷுப்மான் கில் – தசுன் ஷனகா ஜோடி களத்தில் விளையாடி வருகின்றனர்.
6 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 2 விக்கெட்கள் இழப்புக்கு 41 ரன்கள் எடுத்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதலாவது தகுதி சுற்றில் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 173 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வருகிறது. குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா 8 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதலாவது தகுதி சுற்றில் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 173 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வருகிறது. குஜராத் அணியில் ஷுப்மான் கில் – ஹர்திக் பாண்டியா ஜோடி களத்தில் விளையாடி வருகின்றனர்.
5 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்துள்ளது.
குஜராத் அணியின் வெற்றிக்கு 90 பந்துகளில் 134 ரன்கள் தேவை.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான முதலாவது தகுதி சுற்றில் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் ருதுராஜ் 60 ரன்கள் எடுத்தார்.
20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்களை எடுத்துள்ளது. தொடக்கம் முதலே பந்துவீச்சில் நெருக்கடி கொடுத்து வந்த குஜராத் அணிக்கு 173 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான முதலாவது தகுதி சுற்றில் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் செய்து வருகிறது. சென்னை அணியில் தொடக்க வீரர்களாக ஜடேஜா – மொயீன் அலி ஜோடி விளையாடி வருகின்றனர்.
19 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்களை எடுத்துள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான முதலாவது தகுதி சுற்றில் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் செய்து வருகிறது. சென்னை அணியில் தொடக்க வீரர்களாக தோனி – ஜடேஜா ஜோடி விளையாடி வருகின்றனர்.
18 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்களை எடுத்துள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான முதலாவது தகுதி சுற்றில் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் செய்து வருகிறது. சென்னை அணியில் தொடக்க வீரர்களாக ராயுடு – ஜடேஜா ஜோடி விளையாடி வருகின்றனர்.
17 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்களை எடுத்துள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான முதலாவது தகுதி சுற்றில் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் செய்து வருகிறது. சென்னை அணியில் தொடக்க வீரர்களாக ராயுடு – ஜடேஜா ஜோடி விளையாடி வருகின்றனர்.
16 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்களை எடுத்துள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான முதலாவது தகுதி சுற்றில் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் செய்து வருகிறது. சென்னை அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய கான்வே 34 பந்தில் 40 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான முதலாவது தகுதி சுற்றில் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் செய்து வருகிறது. துபே விக்கெட்டுக்குப் பின் வந்த ரஹானே ஒரு சிக்ஸரை பறக்கவிட்டு 17 ரன்னில் ஆட்டமிழந்தார்.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான முதலாவது தகுதி சுற்றில் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் செய்து வருகிறது. சென்னை அணியில் தொடக்க வீரர்களாக டெவோன் கான்வே – ரஹானே ஜோடி விளையாடி வருகின்றனர்.
14 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்களை எடுத்துள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான முதலாவது தகுதி சுற்றில் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் செய்து வருகிறது. சென்னை அணியில் தொடக்க வீரர்களாக டெவோன் கான்வே – ரஹானே ஜோடி விளையாடி வருகின்றனர்.
13 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்களை எடுத்துள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான முதலாவது தகுதி சுற்றில் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் செய்து வருகிறது. சென்னை அணியில் தொடக்க வீரர்களாக டெவோன் கான்வே – ரஹானே ஜோடி விளையாடி வருகின்றனர்.
12 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்களை எடுத்துள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான முதலாவது தகுதி சுற்றில் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் செய்து வருகிறது. ருதுராஜ் விக்கெட்டுக்குப் பின் வந்த சிக்ஸர் மன்னன் துபே ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான முதலாவது தகுதி சுற்றில் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் செய்து வருகிறது. சென்னை அணியில் தொடக்க வீரர்களாக டெவோன் கான்வே – துபே ஜோடி விளையாடி வருகின்றனர்.
11 ஓவர்கள் முடிவில் சென்னை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 85 ரன்களை எடுத்துள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான முதலாவது தகுதி சுற்றில் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் செய்து வருகிறது. சென்னை அணியில் தொடக்க வீரராக களமிறங்கி அரைசதம் விளாசிய ருதுராஜ் கெய்க்வாட் 60 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான முதலாவது தகுதி சுற்றில் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் செய்து வருகிறது. சென்னை அணியில் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் – டெவோன் கான்வே ஜோடி களமிறங்கி விளையாடி வருகின்றனர்.
10 ஓவர்கள் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 85 ரன்களை எடுத்துள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான முதலாவது தகுதி சுற்றில் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் செய்து வருகிறது. சென்னை அணியில் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் – டெவோன் கான்வே ஜோடி களமிறங்கி விளையாடி வருகின்றனர்.
9 ஓவர்கள் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 78 ரன்களை எடுத்துள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான முதலாவது தகுதி சுற்றில் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் செய்து வருகிறது. சென்னை அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். 36 பந்துகளில் அரைசதம் அடித்த அவர் இந்த சீசனில் தனது 4வது அரைசதசத்தை பதிவு செய்துள்ளார்.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான முதலாவது தகுதி சுற்றில் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் செய்து வருகிறது. சென்னை அணியில் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் – டெவோன் கான்வே ஜோடி களமிறங்கி விளையாடி வருகின்றனர்.
8 ஓவர்கள் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 64 ரன்களை எடுத்துள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான முதலாவது தகுதி சுற்றில் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் செய்து வருகிறது. சென்னை அணியில் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் – டெவோன் கான்வே ஜோடி களமிறங்கி விளையாடி வருகின்றனர்.
7 ஓவர்கள் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 58 ரன்களை எடுத்துள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான முதலாவது தகுதி சுற்றில் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் செய்து வருகிறது. சென்னை அணியில் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் – டெவோன் கான்வே ஜோடி களமிறங்கி விளையாடி வருகின்றனர்.
6 ஓவர்கள் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 49 ரன்களை எடுத்துள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான முதலாவது தகுதி சுற்றில் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் செய்து வருகிறது. சென்னை அணியில் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் – டெவோன் கான்வே ஜோடி களமிறங்கி விளையாடி வருகின்றனர்.
5 ஓவர்கள் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 40 ரன்களை எடுத்துள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான முதலாவது தகுதி சுற்றில் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் செய்து வருகிறது. சென்னை அணியில் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் – டெவோன் கான்வே ஜோடி களமிறங்கி விளையாடி வருகின்றனர்.
தற்போது ஆட்டத்தின் 5ஓவரை வீச சுழல் மன்னன் ரஷித் கான் வந்துள்ளார்.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான முதலாவது தகுதி சுற்றில் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் செய்து வருகிறது. சென்னை அணியில் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் – டெவோன் கான்வே ஜோடி களமிறங்கி விளையாடி வருகின்றனர்.
4 ஓவர்கள் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 31 ரன்களை எடுத்துள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான முதலாவது தகுதி சுற்றில் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் செய்து வருகிறது. சென்னை அணியில் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் – டெவோன் கான்வே ஜோடி களமிறங்கி விளையாடி வருகின்றனர்.
3 ஓவர்கள் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 23 ரன்களை எடுத்துள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான முதலாவது தகுதி சுற்றில் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க வீரராக களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் தர்ஷன் நல்கண்டே ஓவரில் அவுட் ஆனார். ஆனால், அந்த பந்து நோ-பால் என அறிவிக்கப்படவே அவர் உயிர்பிழைத்தார். அதற்கான பிரீ-ஹிட் பந்தில் முதல் சிக்ஸரை பறக்கவிட்டார்.
2வது ஓவர் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 18 ரன்களை எடுத்துள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் இன்றைய முதலாவது தகுதி சுற்றில் ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
சென்னை அணியில் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் – டெவோன் கான்வே ஜோடி களமிறங்கியுள்ளனர்.
மஞ்ச்ரேக்கர் குறிப்பிட்டுள்ளது துல்லியமான மதிப்பீடு என்றால் நிச்சயம் மிகையாகாது. சென்னை – குஜராத் ஆகிய இரு அணிகளும் ஆடும் லெவனில் பெரிய மாற்றங்களை செய்வதில்லை.
மேலும் படிக்கவும்:
சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயிங் லெவன்:
ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, அம்பதி ராயுடு, ஷிவம் துபே, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (கேப்டன் / விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா
குஜராத் டைட்டன்ஸ் பிளேயிங் லெவன்:
ஷுப்மான் கில், விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (கேப்டன்), தசுன் ஷனகா, டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், தர்ஷன் நல்கண்டே, மோகித் சர்மா, நூர் அகமது, முகமது ஷமி
குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் இன்றைய முதலாவது தகுதி சுற்றில் ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை அணி முதலில் பேட்டிங் செய்யும்.
இந்திய கிரிக்கெட் அணியின் பட்டத்து இளவரசர் என அழைக்கப்படும் ஷுப்மான் கில் நடப்பு சீசனில் ரெட்-ஹாட் ஃபார்மில் இருக்கிறார்.
மேலும் படிக்கவும்:
சுப்மன் கில் தற்போது ஆரஞ்சு கேப் அட்டவணையில் இரண்டாவது இடத்தில் உள்ளார். இவர், 14 போட்டிகளில் 152.46 ஸ்ட்ரைக் ரேட் மற்றும் 56.67 சராசரி உடன் இரண்டு சதங்கள் மற்றும் நான்கு அரை சதங்கள் அடித்துள்ளார். மொத்தமாக 680 ரன்கள் எடுத்துள்ளார்.
இந்த சீசனில் பவர்பிளேயின் போது குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக பேட்டிங் செய்வது மிகவும் கடினமான அணியாக இருந்து வருகிறது.
மேலும் முகமது ஷமி இந்த சீசனில் பவர்பிளேயில் 15 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அணி எடுத்த மொத்த விக்கெட் 24 ஆகும்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணித்தலைவர் ஃபாப் டு பிளிசிஸ் (Faf du Plessis) தற்போது 14 போட்டிகளில் 730 ரன்களுடன் 153.68 ஸ்ட்ரைக் ரேட் மற்றும் 56.15 சராசரியுடன் ஆரஞ்சு தொப்பியை வைத்துள்ளார்.
ஆனால் RCB அணியின் போட்டிகள் முடிந்துவிட்டன. இந்த நேரத்தில் கில், டு பிளெசிஸ்-ஐ விட சரியாக 50 ரன்கள் பின்தங்கியுள்ளார் கில். ஆகவே அவர் இன்று தென் ஆப்பிரிக்காவின் முந்தைய கேப்டனை முந்த வாய்ப்புகள் உள்ளன.