scorecardresearch

‘கேல் ரத்னா’ விருதுப் பட்டியலில் ஹர்பஜன் நீக்கம் ஏன்? ‘பாஜி’யின் நேர்மை

அப்படி இருக்கும் பட்சத்தில் நான் எப்படி கேல் ரத்னா விருதைப் பெறத் தகுதி உடையவராக இருக்க முடியும்?

‘கேல் ரத்னா’ விருதுப் பட்டியலில் ஹர்பஜன் நீக்கம் ஏன்? ‘பாஜி’யின் நேர்மை
ஊடகத் துறை நண்பர்கள் இந்த விஷயத்தைப் பெரிது படுத்த வேண்டாம்

கேல் ரத்னா விருது விவகாரத்தில் ஹர்பஜன் சிங்கின் பெயர் நீக்கப்பட்டதால் பஞ்சாப் அரசு மீது கடுமையான விமர்சனம் எழுந்தது. சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதத்தில் ஹர்பஜன் தனது ட்விட்டர் பக்கம் மூலம் விளக்கம் அளித்துள்ளார்.

2016-ம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காத நிலையில் கேல் ரத்னா விருதைப் பெறும் தகுதி எனக்கு இல்லை என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் வீரருக்கு உதவிய கவாஸ்கர்: நெகிழ்ச்சிப் பதிவு

இதுகுறித்து அவர், “நண்பர்களே, பஞ்சாப் அரசு ஏன் உங்கள் பெயரை கேல் ரத்னா விருது பரிந்துரைப் பட்டியலில் இருந்து நீக்கியது எனத் தொடர்ந்து அலைபேசி மூலம் பலர் கேட்டு வருகிறார்கள். உண்மை என்னவென்றால், கேல் ரத்னா விருது பெறும் தகுதி எனக்கு இல்லை. கேல் ரத்னா விருதைப் பெற வேண்டும் என்றால் சர்வதேச அளவில் கடந்த மூன்று வருடங்களில் எதாவது சாதித்திருக்க வேண்டும்.

ஆனால், நான் 2016-ம் ஆண்டு முதல் எந்தவிதமான சர்தேச கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் நான் எப்படி கேல் ரத்னா விருதைப் பெறத் தகுதி உடையவராக இருக்க முடியும்?

கைக் கொடுக்கும் கை: லுங்கி இங்கிடிக்கு ஆம்லா ‘பலத்த’ ஆதரவு

பெயர் நீக்கப்பட்டதில் பஞ்சாப் அரசுக்கு எவ்வித தொடர்பும் இல்லை. ஊடகத் துறை உள்ள எனது நண்பர்கள் இந்த விஷயத்தைப் பெரிதுப்படுத்த வேண்டாம்.

கடந்த வருடம் பஞ்சாப் அரசு வெளியிட்டிருந்த பரிந்துரைப் பட்டியலில் எனது பெயர் இருந்தது உண்மை தான். இந்த வருடமும் எனது பெயர் இடம்பெற்றிருந்ததும் உண்மை தான். நான் கேட்டுக் கொண்டதின் பெயரில்தான் பரிந்துரைப் பட்டியலில் இருந்து எனது பெயர் நீக்கப்பட்டது. இந்த விவகாரத்தை இத்தோடு முடித்துக் கொள்வது நல்லது” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

103 டெஸ்ட் மற்றும் 236 ஒருநாள் போட்டிகளில் 4விளையாடியுள்ள ஹர்பஜன் முறையே 417 மற்றும் 269 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Harbhajan singh khel ratna nomination punjab govt sports news tamil news