ஜலேஜ் சக்ஸேனா, அக்ஷய் வாகரே மற்றும் ஷாபஸ் நதீம் போன்ற தரமான ஸ்பின்னர்கள் ஏன் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் இருக்கும் ஹர்பஜன் சிங், சென்னை வீரர் வாஷிங்டன் வீரரை ஏகத்துக்கும் விமர்சித்துள்ளார்.
Advertisment
இதுகுறித்து ஸ்போர்ட்ஸ்டாரிடம் அவர் பேசுகையில், "ஜலஜ் சக்ஸேனா (347 முதல் தர விக்கெட்டுகள், 6334 முதல் தர ரன்கள்) என்று ஒருவர் இருக்கிறார். தேர்வுக்குழு இவரை தேர்வு செய்யவே மறுக்கிறார்கள். பல சீசன்களில் இவர் அபாரமாக பந்து வீசி இருக்கிறார். வகாரே (83 முதல் தர போட்டிகளில், 279 விக்கெட்டுகள்) தொடர்ந்து நிலையாக பந்து வீசுகிறார்.
ஆனால், அவரை யாருமே கண்டுகொள்ள மாட்டேங்குறார்கள். அப்புறம் நீங்கள் சொல்வீர்கள், இந்திய கிரிக்கெட்டில் ஸ்பின்னர்கள் குறைந்து கொண்டே வருகிறர்கள் என்று.
பந்தையே சுழற்றாத வாஷிங்டன் சுந்தருக்கு அடிக்கடி வாய்ப்பு வழங்குகிறார்கள். இதுதான் எனக்கு புரியவில்லை. பேட்ஸ்மேன்களை அடிக்கத் தூண்டி, அவர்களை அவுட்டாக்கும் ஸ்பின்னர்களை நீங்கள் ஏன் ஆதரிக்கக் கூடாது? வாஷிங்டன் சுந்தரால் ஓரளவுக்கு பேட்டிங் செய்ய முடியும் என்றால், அவரை விட அபாரமாக பந்து வீசும் ஜலஜ் கூட நன்றாக பேட்டிங் செய்வாரே!" என்றார்.
"இது போன்ற பவுலர்களுக்கு நம்பிக்கை அளித்து அவர்களை நீங்கள் உருவாக்க வேண்டும். சக்ஸேனா என்ன தவறு செய்தார் என்பது எனக்கு தெரிந்தாக வேண்டும். விக்கெட்டுகள் எடுப்பதன் மூலம், சக்ஸேனா, வகாரே, ஷாபஸ் நதீம் ஆகியோர் குற்றம் செய்துவிட்டதாக நினைக்கிறீர்களா?" என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”