IND vs AFG match Highlights in tamil: 7-வது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. தற்போது சூப்பர் -12 ஆட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய (புதன்கிழமை) 33வது லீக் ஆட்டத்தில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் முகமது நபி பந்து வீச்சை தேர்வு செய்தார். எனவே இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.
🚨 Toss Update 🚨
Afghanistan have elected to bowl against #TeamIndia. #INDvAFG #T20WorldCup
Follow the match ▶️ https://t.co/42045c5J05 pic.twitter.com/mFTytfXh8z— BCCI (@BCCI) November 3, 2021
இந்தியா அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா - கேஎல் ராகுல் ஜோடி அணிக்கு வலுவான தொடக்கம் கொடுத்தனர். இதில் தனது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா 47 பந்துகளில் 3 சிக்ஸர் 8 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் சேர்ந்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.
Rohit Sharma brings up his 23rd T20I half-century 🙌#T20WorldCup | #INDvAFG | https://t.co/ZJL2KKL30i pic.twitter.com/nnojTFMZka
— T20 World Cup (@T20WorldCup) November 3, 2021
அவருடன் மறுமுனையில் இருந்த கேஎல் ராகுல் தனது அரைசத்தை பதிவு செய்து 46 பந்துகளில் 2 சிக்ஸர் 6 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் சேர்ந்திருந்த நிலையில் அவுட் ஆனார்.
KL Rahul joins in on the fun, brings up his half-century as well 🔥#T20WorldCup | #INDvAFG | https://t.co/ZJL2KKL30i pic.twitter.com/oA3NkGhbeW
— T20 World Cup (@T20WorldCup) November 3, 2021
பின்னர் வந்த ரிஷாப் பண்ட் (27 ) மற்றும் ஹர்திக் பாண்ட்யா (35) அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இதனால் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 210 ரன்கள் குவித்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் கரிம் ஜனத்,குல்படின் நைப் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
India post a score of 210/2 🔥
Which batter impressed you the most?#T20WorldCup | #INDvAFG | https://t.co/ZJL2KKL30i pic.twitter.com/zhV1LQAmb2— T20 World Cup (@T20WorldCup) November 3, 2021
தொடர்ந்து 211 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணிக்கு நல்ல தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் தொடக்க வீரர்கள் முகமது ஷாஜாத் பூஜ்ஜிய ரன்னிலும், ஹஸ்ரதுல்லா ஜசாய் 13 ரன்னிலும் அடுத்தடுத்த ஓவர்களில் அவுட் ஆகி வெளியேறினர்.
Zazai follows suit.
Bumrah gets his first scalp as Afghanistan lose their second. #T20WorldCup | #INDvAFG | https://t.co/ZJL2KKL30i https://t.co/VRhSULtq3P— T20 World Cup (@T20WorldCup) November 3, 2021
பின்னர் வந்த குல்பாடின் நைப் 11 ரன்னிலும், நஜிபுல்லா சத்ரான் 18 ரன்னிலும் அவுட் ஆகினர். களத்தில் நீண்ட தாக்குப்பிடித்து 1 சிக்ஸர் 2 பவுண்டரிகளை துரத்திய கேப்டன் முகமது நபி 35 ரன்கள் சேர்த்து நிலையில் ஆட்டமிழந்தார். அவருக்கு பின் வந்த ரஷித் கான் டக் அவுட் ஆகி பெவிலியன் நோக்கி நடையை கட்டினார்.
Ashwin strikes again 👊
Afghanistan lose half their side as Najibullah is bowled for 11. #T20WorldCup | #INDvAFG | https://t.co/ZJL2KKL30i pic.twitter.com/ktU2hThY9B— T20 World Cup (@T20WorldCup) November 3, 2021
எனினும், இறுதி வரை சிக்ஸர் பவுண்டரிகளை விளாசிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து 144 ரன்கள் மட்டுமே சேர்த்ததது. இதனால் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணியின் ரன்ரேட் +0.073 ஆக மாறியுள்ளது.
India are off the mark ✅#T20WorldCup | #INDvAFG | https://t.co/ZJL2KKL30i pic.twitter.com/llszZPMNtH
— T20 World Cup (@T20WorldCup) November 3, 2021
இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஷ்வின் 2 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
.@ImRo45 scored a fantastic 7⃣4⃣ to set up a 6⃣6⃣-run for #TeamIndia & won the Man of the Match award. 👏 🔝#INDvAFG #T20WorldCup
Scorecard ▶️ https://t.co/42045c5J05 pic.twitter.com/fdBPkkEnKQ— BCCI (@BCCI) November 3, 2021
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
- 23:16 (IST) 03 Nov 2021ஆப்கானிஸ்தானை வீழ்த்திய இந்தியா; 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!
இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 211 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் மட்டுமே சேர்த்து. இதனால் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
- 23:02 (IST) 03 Nov 2021முகமது நபி அவுட்!
இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 211 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் ஆப்கானிஸ்தான் அணியில் 35 ரன்கள் சேர்த்த முகமது நபி அவுட் ஆனார்.
- 22:59 (IST) 03 Nov 2021வெற்றியை நோக்கி இந்திய அணி!
இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 211 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற 12 பந்துகளில் 86 ரன்கள் தேவை.
- 22:49 (IST) 03 Nov 2021குரூப்-1 பிரிவில் அரசு வேலை: மாரியப்பன் தங்கவேலுக்கு நேரில் வழங்கிய ஸ்டாலின்
பாராலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு குரூப் 1 பிரிவில் அரசு வேலைக்கான பணி ஆணையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்
- 22:38 (IST) 03 Nov 2021சரியும் விக்கெட்டுகள்; ரன் சேர்க்க தடுமாறும் ஆப்கான் அணி!
இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 211 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் ஆப்கானிஸ்தான் அணி 13 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து 80 ரன்களை சேர்த்துள்ளது.
Ashwin strikes again 👊
— T20 World Cup (@T20WorldCup) November 3, 2021
Afghanistan lose half their side as Najibullah is bowled for 11. t20worldcup | indvafg | https://t.co/ZJL2KKL30i pic.twitter.com/ktU2hThY9B - 22:36 (IST) 03 Nov 2021தலைமை பயிற்சியாளராகிறார் ராகுல் டிராவிட்… அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பிசிசிஐ…!
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
- 22:35 (IST) 03 Nov 2021சரியும் விக்கெட்டுகள்; ரன் சேர்க்க தடுமாறும் ஆப்கான் அணி!
இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 211 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் ஆப்கானிஸ்தான் அணி 13 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து 80 ரன்களை சேர்த்துள்ளது.
- 22:32 (IST) 03 Nov 202110 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி!
இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 211 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் ஆப்கானிஸ்தான் அணி 10 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 64 ரன்கள் சேர்த்துள்ளது.
- 22:20 (IST) 03 Nov 2021குல்பாடின் நைப் அவுட்!
இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 211 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் ஆப்கானிஸ்தான் அணியில் 3 பவுண்டரிகளை துரத்திய குல்பாடின் நைப் அவுட் lbw முறையில் அவுட் ஆனார்.
- 22:09 (IST) 03 Nov 2021குர்பாஸ் அவுட்!
இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 211 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் ஆப்கானிஸ்தான் அணியில் 1 பவுண்டரியுடன் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு அதிரடிகாட்டிய ரஹ்மானுல்லா குர்பாஸ் 19 ரன்கள் சேர்த்த நிலையில் அவுட் ஆனார்.
- 22:07 (IST) 03 Nov 2021பவர் பிளே முடிவில் ஆப்கானிஸ்தான்!
இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 211 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் ஆப்கானிஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை இழந்து பவர் பிளே முடிவில் 42 ரன்களை சேர்த்துள்ளது.
- 21:53 (IST) 03 Nov 2021ஆப்கானின் தொடக்க வீரர்கள் அவுட்!
இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 211 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க வீரர் முகமது ஷாஜாத் பூஜ்ஜிய ரன்னிலும், 1 சிக்ஸர் 1 பவுண்டரியை துரத்திய மற்றொரு தொடக்க வீரர் ஹஸ்ரதுல்லா ஜசாய் 13 ரன்னிலும் அடுத்தடுத்த ஓவர்களில் அவுட் ஆகி வெளியேறினர்.
- 21:27 (IST) 03 Nov 2021இந்தியாவுக்கு எதிரான ஆட்டம்; ஆப்கானுக்கு 211 ரன்கள் இலக்கு!
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தும் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. எனவே முதலில் பேட்டிங் செய்ய இந்திய அணி களமிறங்கியது.
மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்களை குவித்துள்ளது. ஆதலால், ஆப்கானிஸ்தான் அணிக்கு 211 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- 21:06 (IST) 03 Nov 2021ராகுல் அவுட்!
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்த தொடக்க வீரர் கேஎல் ராகுல் 46 பந்துகளில் 2 சிக்ஸர் 6 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் சேர்ந்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்
- 21:05 (IST) 03 Nov 2021இந்திய கிரிக்கெட் ஆண்கள் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம்!
தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் முடிவந்துள்ள நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக பணியாற்றுவார் என பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
- 20:59 (IST) 03 Nov 2021ரோஹித் அவுட்!
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்த ரோஹித் சர்மா 47 பந்துகளில் 3 சிக்ஸர் 8 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் சேர்ந்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.
- 20:54 (IST) 03 Nov 2021இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம்!
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள ரவி சாஸ்திரியின் பதவிக்கலாம் முடிவடைந்துள்ள நிலையில் "ராகுல் டிராவிட்" தற்போது தலைமை பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். டி-20 உலக்கோப்பை தொடருக்கு பிறகு பொறுப்பேற்றுக் கொள்வார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
- 20:42 (IST) 03 Nov 2021வலுவான நிலையில் இந்தியா; அதிரடி காட்டும் ராகுல் - ரோஹித் ஜோடி அரைசதம்!
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. தொடக்க வீரர்கள் கேஎல் ராகுல் - ரோஹித் சர்மா ஜோடி அணிக்கு வலுவான ரன்களை சேர்த்து வருவதோடு அரைசதம் கடந்துள்ளனர்.
Rohit Sharma brings up his 23rd T20I half-century 🙌t20worldcup | indvafg | https://t.co/ZJL2KKL30i pic.twitter.com/nnojTFMZka
— T20 World Cup (@T20WorldCup) November 3, 2021KL Rahul joins in on the fun, brings up his half-century as well 🔥t20worldcup | indvafg | https://t.co/ZJL2KKL30i pic.twitter.com/oA3NkGhbeW
— T20 World Cup (@T20WorldCup) November 3, 2021 - 20:07 (IST) 03 Nov 2021பவர் பிளே முடிவில் இந்திய அணி!
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. தொடக்க வீரர்கள் கேஎல் ராகுல் - ரோஹித் சர்மா ஜோடி அணிக்கு வலுவான ரன்களை சேர்த்து வருகிறது.
இந்த நிலையில் இந்திய அணி பவர் பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி ரன்களை சேர்த்துள்ளது.
- 19:46 (IST) 03 Nov 2021ஆப்கானுக்கு எதிரான ஆட்டம்; இந்தியாவுக்கு நல்ல தொடக்கம்!
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கியுள்ள கேஎல் ராகுல் - ரோஹித் சர்மா ஜோடி அணிக்கு வலுவான ரன்களை சேர்த்து வருகிறது.
- 19:35 (IST) 03 Nov 2021களத்தில் இந்திய அணி!
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தும் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. எனவே முதலில் பேட்டிங் செய்ய இந்திய அணி களமிறங்கியுள்ளது.
கேஎல் ராகுல் - ரோஹித் சர்மா ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாகக் களம் கண்டுள்ளனர்.
- 19:23 (IST) 03 Nov 2021இந்திய அணியில் 2 மாற்றம்; சூர்யகுமார் யாதவ் - ரவி அஸ்வின் களமிறங்குகின்றனர்.
காயத்தில் இருந்து மீண்டுள்ள சூர்யகுமார் யாதவ் இஷான் கிஷானுக்கு பதிலாவும், சுழலில் தாக்கத்தை ஏற்படுத்தாத வருண் சக்கரவர்த்திக்கு பதில் அஸ்வினும் இன்றைய ஆட்டத்தில் களமிறங்குகின்றனர்.
The teams warm-up ahead of a crunch clash 🔥
— T20 World Cup (@T20WorldCup) November 3, 2021
Who’s winning this?indvafg | t20worldcup pic.twitter.com/DrXtRRrQDx - 19:20 (IST) 03 Nov 2021இரு அணி சார்பில் களமிறங்கும் வீரர்கள் பட்டியல்!
ஆப்கானிஸ்தான்:
ஹஸ்ரதுல்லா ஜசாய், முகமது ஷாஜாத்(கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ், நஜிபுல்லா சத்ரான், முகமது நபி(விக்கெட் கீப்பர்), குல்பாடின் நைப், ஷரபுதீன் அஷ்ரப், ரஷித் கான், கரீம் ஜனத், நவீன் உல் ஹக், ஹமீத் ஹசன்
இந்தியா:
கேஎல் ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோலி(கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா.
🚨 Team News 🚨
— BCCI (@BCCI) November 3, 2021
2⃣ changes for teamindia as R Ashwin & Suryakumar Yadav are named in the team. indvafg t20worldcup
Follow the match ▶️ https://t.co/42045c5J05
Here's our Playing XI 🔽 pic.twitter.com/QHICNk8Wjl - 19:20 (IST) 03 Nov 2021இந்தியாவுக்கு எதிரான ஆட்டம்; டாஸ் வென்ற ஆப்கான் பந்துவீச்சை தேர்வு!
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தும் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
🚨 Toss Update 🚨
— BCCI (@BCCI) November 3, 2021
Afghanistan have elected to bowl against teamindia. indvafg t20worldcup
Follow the match ▶️ https://t.co/42045c5J05 pic.twitter.com/mFTytfXh8z - 18:55 (IST) 03 Nov 2021இன்றைய ஆட்டத்திலாவது அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா?
நடந்த 2 லீக் ஆட்டங்களிலும் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் மூத்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் அழைக்கப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் தொடர்ந்து அவரை ஓரங்கட்டும் கேப்டன் கோலி இந்த தடவையும் வாய்ப்பு வழங்குவது சந்தேகம் தான். இங்குள்ள ஆடுகளங்கள் வேகம் குறைந்து காணப்படுவதால் மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சாஹரை சேர்ப்பது குறித்தும் அணி நிர்வாகம் பரிசீலிக்கலாம்.
- 18:44 (IST) 03 Nov 2021டி -20 உலகக்கோப்பை: இந்தியா அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்க என்ன செய்ய வேண்டும்?
இந்தியா, முதலில் எஞ்சிய 3 லீக்கிலும் (ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமிபியா) அதிக வித்தியாசத்தில் வெற்றி பெறுவதோடு ரன்ரேட்டையும் வலுப்படுத்த வேண்டும்.
அடுத்து நியூசிலாந்து அணி ஆப்கானிஸ்தான் அல்லது ஸ்காட்லாந்து ஆகிய அணிகளில் ஒன்றிடம் தோற்க வேண்டும்.
இவ்வாறு நடந்தால் இந்தியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் தலா 3 வெற்றி, 2 தோல்வியுடன் சமநிலையில் இருக்கும். அப்போது ரன்ரேட் அடிப்படையில் ஒரு அணிக்கு அரைஇறுதி அதிர்ஷ்டம் கிடைக்கும்
- 18:11 (IST) 03 Nov 2021'தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்' கணித்துள்ள இரு அணி வீரர்கள் பட்டியல்!
இந்தியா:
ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் (அல்லது) இஷான் கிஷன், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, வருண் சக்ரவர்த்தி (அல்லது) ராகுல் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா
ஆப்கானிஸ்தான்:
ஹஸ்ரதுல்லா ஜசாய், முகமது ஷாஜாத், ரஹ்மானுல்லா குர்பாஸ், ஹஷ்மத்துல்லா ஷாஹிதி, முகமது நபி, நஜிபுல்லா ஜத்ரான், குல்பாடின் நைப், ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக், ஹமீத் ஹசன்
- 18:09 (IST) 03 Nov 2021இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் நேருக்கு நேர்!
இவ்விரு அணிகளும் இதுவரை 2 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இரண்டிலும் இந்தியாவே வெற்றி கண்டுள்ளது.
- 18:07 (IST) 03 Nov 2021‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்கு - க்கு அன்புடன் வரவேற்கிறோம்.
7-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது சூப்பர்-12 சுற்று ஆட்டங்கள் நடந்து வரும் நிலையில், இன்றிரவு 7:30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.