IND vs AUS Score Updates: இந்தியா தோல்வி; ஒரு நாள் போட்டி தொடரை வென்ற ஆஸி.,

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று சென்னை சேப்பாக்கத்தில் பகல்-இரவு மோதலாக நடக்கிறது.

IND vs AUS Live Score 3rd odi Chennai updates in tamil
India vs Australia, 3rd ODI Live Score: இந்தியா vs ஆஸ்திரேலியா நேரலை

India vs Australia Cricket Score, 3rd ODI updates in tamil: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதிய பாா்டா் – காவஸ்கா் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. அடுத்ததாக, இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடந்து வருகிறது.

இதையும் படியுங்கள்: IND vs AUS 3rd ODI: இந்தியா vs ஆஸ்திரேலியா சென்னை போட்டி லைவ் ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

அதன்படி, மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து, விசாகப்பட்டினத்தில் நடந்த 2வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என்ற சமனில் உள்ளது.

Australia in India, 3 ODI Series, 2023MA Chidambaram Stadium, Chennai   06 June 2023

India 248 (49.1)

vs

Australia   269 (49.0)

Match Ended ( Day – 3rd ODI ) Australia beat India by 21 runs

இந்த நிலையில், தொடரை தீர்மானிக்கும் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று (புதன்கிழமை – மார்ச் 22ம் தேதி) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் பகல்-இரவு மோதலாக அரங்கேறுகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

இதையும் படியுங்கள்: சேப்பாக்கம் ஆஸி.-க்கு ராசியான மைதானம்; மிரட்டும் ரெக்கார்ட்: இந்தியா நிலை என்ன?

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு: இந்தியா பவுலிங்

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி, அந்த அணியில் டிராவிஸ் ஹெட் – மிட்செல் மார்ஷ் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடி முதல் பவர் பிளே முழுதும் நிலைத்து நின்று ஆடியது. இதனால், விக்கெட் வீழ்த்த இந்திய வீரர்கள் போராடினார். அந்த தருணத்தில் தான் ஹர்திக் பாண்டியா வீசிய 10.5 வது ஓவரில் டிராவிஸ் ஹெட் குல்தீப் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 4 பவுண்டரி 2 சிக்ஸர்களை பறக்கவிட்ட அவர் 33 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

பின்னர் வந்த கேப்டன் ஸ்மித் ஹர்திக் வீசிய 12.2 வது ஓவரில் டக்-அவுட் ஆகி வெளியேறினார். அரைசதம் விளாசுவார் என்று எதிர்பாக்கப்பட்ட மிட்சல் மார்ஷ் 47 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு களமாடிய டேவிட் வார்னர் களத்தில் இருந்த மார்னஸ் லாபுசாக்னே உடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பொறுமை கலந்த அதிரடியை வெளிப்படுத்தி வந்தது. எனினும், குல்தீப் விரித்த சுழல் வலையில் சிக்கிய வார்னர் 23 ரன்னில் அவுட் ஆனார்.

களத்தில் இருந்த மார்னஸ் லாபுசாக்னே – அலெக்ஸ் கேரி ஜோடியில் லாபுசாக்னே 28 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த மார்கஸ் ஸ்டோனிசுடன் ஜோடி அமைத்தார் அலெக்ஸ் கேரி. இந்த ஜோடி நல்ல பார்ட்னர்ஷிப்பை அணிக்கு கொண்டுவந்தது. 50 ரன்களுக்கு மேல் எடுத்த இந்த ஜோடியில் மார்கஸ் ஸ்டோனிஸ் 25 ரன்னில் அவுட் ஆனார். அவருக்குப்பின் களத்தில் இருந்த அலெக்ஸ் கேரி 38 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த வீரர்கள் தலா ஒரு சிக்ஸரை பறக்கவிட்ட நிலையில், சீன் அபோட் 26 ரன்னிலும், ஆஷ்டன் அகர் 17 ரன்னிலும், மிட்செல் ஸ்டார்க் 10 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 10 ரன்கள் எடுத்த ஆடம் ஜம்பா கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இறுதியில், 49 ஓவர்களில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலிய அணி 269 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா தலா 3 விக்கெட்டுகளையும், சிராஜ் மற்றும் அக்சர் படேல் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்தியா பேட்டிங்

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய ரோகித் சிக்சரும் பவுண்டரிகளுமாக விளாசினார். மறுமுனையில் ஆடிய கில் நிதான ரன் சேர்த்து வந்தார். இந்தநிலையில், 30 ரன்களில் ரோகித் அவுட் ஆனார். அவர் அபோட் பந்தில் ஸ்டார்க்கிடம் கேட்ச் கொடுத்தார். 17 பந்துகளைச் சந்தித்த ரோகித் 30 ரன்கள் அடித்தார். இதில் 2 சிக்சர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் அடங்கும்.

அடுத்ததாக விராட் கோலி களமிறங்கினார். இருவரும் பொறுமையாக ரன் சேர்த்து வந்த நிலையில், கில் 37 ரன்களில் ஜாம்பா பந்தில் எல்.பி.டபுள்யூ ஆனார். அடுத்து ராகுல் களமிறங்கி கோலிக்கு கம்பெனி கொடுத்தார். இருவரும் விக்கெட் இழப்பை தடுக்கும் வகையிலும், அதே நேரம் ரன் சேர்க்கும் முனைப்பிலும் விளையாடினர். இதனால், இந்திய அணி 100 ரன்களைக் கடந்து சிறப்பான நிலையில் இருந்தது. 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ராகுல் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய அக்சர் பட்டேல் 2 ரன்களில் வெளியேறினார். இதனால் இந்திய அணி 151 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து சற்று தடுமாறியது.

அடுத்ததாக ஹர்திக் பாண்டியா களமிறங்கிய நிலையில், விராட் கோலி தனது 65 ஆவது அரை சதத்தை பூர்த்தி செய்தார். பாண்டியா தொடக்கம் முதலே அடித்து ஆட தொடங்கினார். மறுமுனையில் ஆடிவந்த கோலி 54 ரன்களில் அவுட் ஆனார். அவர் அகார் பந்தில் வார்னரிடம் கேட்ச் கொடுத்தார். அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் மீண்டும் கோல்டன் டக் ஆகி பெவிலியன் திரும்பினார். அவரை அகார் போல்டாக்கினார். இதனால் இந்திய அணி 185 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

அடுத்ததாக ஜடேஜா களமிறங்கி, பாண்டியாவுக்கு கம்பெனி கொடுத்தார். இருவரும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்ததால், இந்திய அணி 200 ரன்களைக் கடந்தது. சிறப்பாக ஆடி வந்த பாண்டியா 40 ரன்கலில் அவுட் ஆனார். அவர் ஜாம்பா பந்தில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து குல்தீப் யாதவ் களமிறங்கிய சிறிது நேரத்திலே ஜடேஜா அவுட் ஆனார். 18 ரன்களை எடுத்திருந்த ஜடேஜா, ஜாம்பா பந்தில் ஸ்டாய்னிஸிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய ஷமி அதிரடியாக ஆட முயற்சித்து, 14 ரன்களில் ஸ்டாய்னிஸ் பந்தில் போல்டானார். அடுத்து முகமது சிராஜ் களமிறங்கி 3 ரன்கள் எடுத்த நிலையில், 6 ரன்கள் எடுத்திருந்த குல்தீப் ரன் அவுட் ஆனார். இதனால் இந்திய அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இந்திய அணி 49.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 248 ரன்கள் மட்டுமே சேர்த்தது. ஆஸ்திரேலியா அணி தரப்பில் ஜாம்பா 4 விக்கெட்களையும், அகார் 2 விக்கெட்களையும், ஸ்டாய்னிஸ் மற்றும் அபோட் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதனால் 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி போட்டியை வென்று, தொடரையும் கைப்பற்றியது. ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இதையும் படியுங்கள்: இடி இடிக்கும்; சேப்பாக்கத்தில் மழை விளையாடும்? சென்னை வெதர் ரிப்போர்ட்

இந்தியா vs ஆஸ்திரேலியா: 3வது ஒருநாள் போட்டி, சென்னை

இரு அணிகளின் பிளேயிங் லெவன்

ஆஸ்திரேலியா:

டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), மார்னஸ் லாபுசாக்னே, அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோனிஸ், ஆஷ்டன் அகர், சீன் அபோட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா

இந்தியா:

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிரா

இதையும் படியுங்கள்: சுந்தர், உம்ரான் மாலிக்… சேப்பாக்கத்தில் இந்தியா பிளேயிங் 11; யார் யாருக்கு வாய்ப்பு?

இதையும் படியுங்கள்: ஸ்பின்னர்களின் சொர்க்கம்; ஆனா கடந்த முறை என்ன நடந்தது தெரியுமா? சேப்பாக்கம் பிட்ச் ரிப்போர்ட்

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Ind vs aus live score 3rd odi chennai updates in tamil

Exit mobile version