scorecardresearch

IND VS NZ 1st ODI: சதமடித்து மிரட்டிய டாம் லாதம்… நியூசிலாந்துக்கு அபார வெற்றி!

இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வென்றது.

India vs New Zealand  {IND VS NZ } 1st ODI Match highlights in tamil
IND VS NZ 1st ODI Match highlights

IND VS NZ 1st ODI Match 2022 highlights in tamil: நியூசிலாந்து மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி தற்போது டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்நிலையில், 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடர் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கிய முதலாவது ஆட்டம் ஆக்லாந்தில் பகல்-இரவாக நடந்தது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

இதையும் படியுங்கள்: IND Vs NZ 1st ODI: எலெக்ட்ரிக் லாதம், நிதானமான வில்லியம்சன்… நியூசிலாந்து வெற்றியை ருசித்தது எப்படி?

இந்தியா பேட்டிங்:

இந்திய அணியில் கேப்டன் ஷிகர் தவான் – சுப்மான் கில் ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கிய நிலையில், 65 பந்துகளில் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு அரைசதம் விளாசிய கில் 50 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அவருடன் மறுமுனையில் இருந்த கேப்டன் தவான் அரைசதம் விளாசி 13 பவுண்டரிகளுடன் 72 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.

களத்தில் இருந்த ரிஷப் பண்ட் 15 ரன்னிலும், அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 4 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர். இதன்பிறகு சிறப்பான ஜோடியை அமைத்த ஷ்ரேயாஸ் ஐயர் – சஞ்சு சாம்சன், அணிக்கு நேர்த்தியாக ரன்களை சேர்த்து வந்தனர். இதில் அவ்வப்போது பவுண்டரி சிக்ஸர்களை பறக்கவிட்ட அணியின் ஸ்கோரை உயர்த்திய ஷ்ரேயாஸ் அரைசதம் விளாசினார். அவருடன் ஜோடியில் இருந்த சஞ்சு 38 பந்துகளில் 4 பவுண்டரிகளை விரட்டி 36 ரன்னில் ஆட்டமிழந்தார்.

பின்னர் ஷ்ரேயாஸுடன் ஜோடி சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் 3 பவுண்டரி, 3 சிக்ஸர் என்று அடித்து நொறுக்கினார். மறுபுறம் 76 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 4 பவுண்டரிகள் என்று அதிரடி காட்டி வந்த ஷ்ரேயாஸுன் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அவர் 80 ரன்கள் எடுத்த நிலையில் டிம் சவுத்தி வீசிய 49.2 ஓவரில் டெவோன் கான்வே வசம் கேட்ச் கொடுத்தார். அவரது இந்த ஆட்டம் மெச்சும் படியாக இருந்தது. இதேபோல், 16 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர் என்று தும்சம் செய்த சுந்தரும் எதிர்பார்த்தைப்போல் கைகொடுத்தார்.

இறுதியில், 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 306 ரன்கள் சேர்த்தது. இதனால், நியூசிலாந்து அணிக்கு 307 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து அணி தரப்பில் டிம் சவுத்தி மற்றும் லாக்கி பெர்குசன் தலா 3 விக்கெட்டுகளையும், ஆடம் மில்னே ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.

IND vs NZ: இந்தியா- நியூசிலாந்து ஒருநாள் போட்டிகள் முழு அட்டவணை: ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

நியூசிலாந்து அபார வெற்றி

தொடர்ந்து 307 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய நியூசிலாந்து அணியில் ஃபின் ஆலன் – டெவோன் கான்வே ஜோடி தொடக்க வீரர்களாக களமாடினர். இதில் ஃபின் ஆலன் 22 ரன்னிலும், டெவோன் கான்வே 24 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதன்பிறகு, களத்தில் இருந்த கேப்டன் வில்லியம்சனுடன் ஜோடி சேர்ந்தார் டேரில் மிட்செல். ஒரு சிக்ஸரை பறக்கவிட்ட அவர் 11 ரன்னில் அவுட் ஆனார்.

பிறகு கேப்டன் வில்லியம்சன் – டாம் லாதம் ஜோடி சேர்ந்தனர். மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடியில் சிக்ஸர், பவுண்டரிகளை ஓட விட்ட வில்லியம்சன் அரைசதம் அடித்தார். அவருடன் ஜோடியில் இருந்த டாம் தொடக்கத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், பின்னர் அதிரடி காட்ட தொடங்கினார். அரைசதம் அடித்த அவர் சதம் விளாசி மிரட்டினார்.

ஒருபுறம் வில்லியம்சன் ஸ்ட்ரைக்கை ரோட்டேட் செய்து டாமிடம் கொடுக்க, அவர் சிக்கிய பந்துகளையெல்லாம் சிதறடித்தார். இதனால் அணி ஸ்கோர் விறுவிறுவென்று உயர்ந்தது. வெற்றியை நோக்கியும் பயணிக்க தொடங்கினர். இந்த ஜோடியை இந்திய பந்துவீச்சாளர்களால் கடைசி வரை உடைக்க முடிவில்லை. இறுதியில், 47.1 வது ஓவரில் 309 ரன்கள் குவித்து இலக்கை எட்டிப்பிடித்தனர். மேலும், 3 விக்கெட்டுகள் மட்டும் இழந்த நியூசிலாந்து அணி இந்தியாவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இதையும் படியுங்கள்: IND Vs NZ 1st ODI: எலெக்ட்ரிக் லாதம், நிதானமான வில்லியம்சன்… நியூசிலாந்து வெற்றியை ருசித்தது எப்படி?

கடைசி வரை களத்தில் இருந்த டாம் லாதம் – கேப்டன் வில்லியம்சன் ஜோடியில் டாம் லாதம் 104 பந்துகளில் 19 பவுண்டரிகள் 5 சிக்ஸர்களுடன் 145 ரன்கள் எடுத்தார். கேப்டன் வில்லியம்சன் 98 பந்துகளில் 7 பவுண்டரிகள் 1 ஒரு சிக்ஸருடன் 94 ரன்கள் எடுத்தார்.

இந்த அசத்தல் வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணியினர் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளனர். இவ்விரு அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி வருகிற ஞாயிற்று கிழமை (நவம்பர் 27 ஆம் தேதி) ஹாமில்டனில் உள்ள செடான் பார்க் மைதானத்தில் நடக்கிறது.

இரு அணி ஆடும் 11 வீரர்கள் பட்டியல்:

நியூசிலாந்து:

ஃபின் ஆலன், டெவோன் கான்வே, கேன் வில்லியம்சன் (கேப்டன்), டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், ஆடம் மில்னே, மாட் ஹென்றி, டிம் சவுத்தி, லாக்கி பெர்குசன்

இந்தியா:

ஷிகர் தவான் (கேப்டன்), ஷுப்மான் கில், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்

இதையும் படியுங்கள்: IND Vs NZ 1st ODI: எலெக்ட்ரிக் லாதம், நிதானமான வில்லியம்சன்… நியூசிலாந்து வெற்றியை ருசித்தது எப்படி?

India in New Zealand, 3 ODI Series, 2022Eden Park, Auckland   20 March 2023

New Zealand 309/3 (47.1)

vs

India   306/7 (50.0)

Match Ended ( Day – 1st ODI ) New Zealand beat India by 7 wickets

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Live Updates

Web Title: Ind vs nz 1st odi match 2022 live score in tamil